
நம்மில் பலர் அழகிய படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பர்களாக கணினியில் வைத்து கொள்வர்.ஒவ்வொரு முறையும் நாமே அவற்றை மாற்றாமல் வால்பாபா(Wallpapa)என்னும் மென்பொருள்(விண்டோஸ் மட்டும்)நமது கணினியின் வால்பேப்பர்களை மேலாண்மை செய்கிறது.நம்மிடம் உள்ள அழகிய படங்களை ஒரு போல்டர் இல் சேமித்து இந்த மென்பொருள் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுத்தால் நாம் விரும்பிய கால அளவுகளில் வால்பாபா மென்பொருள் வால்பேப்பர்களை மாற்றும்.
இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு,மேலே உள்ள "ADD" என்னும் பொத்தானை சொடுக்கி ஏற்கனவே வால்பேப்பர்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தேர்ந்தெடுக்கவும்.இந்த மென்பொருளை தரவிறக்க http://www.phoeniixz.net/software.html தளத்திற்கு செல்லவும்
வால் பேப்பர்களை மாற்றும் இலவச மென்பொருள்
Posted by
பிரேம்ஜி
at
3
comments
Labels: இலவசமென்பொருள், கணினி
Office 2010: ஹாலிவுட் திரைப்படமா?
தன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதில் தனி கவனம் செலுத்தும் மைக்ரோசாப்ட் அடுத்த வருடம் வெளியிடப்போகும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 மென்பொருளுக்கு முன்னோட்ட விளம்பரத்தை வித்தியாசமான முறையில் ஹாலிவுட் திரைப்பட முன்னோட்டங்களை போல விளம்பரப்படுத்தியுள்ளது.டென்னிஸ் லியு(Dennis Liu)மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ள விளம்பரம் இது.
Posted by
பிரேம்ஜி
at
0
comments
Labels: கணினி, சினிமா, தொழில்நுட்பம், விளம்பரம், ஹாலிவுட்
அதிவேக Firefox 3.5 வெளிவந்தது- தரவிறக்கத்திற்கு தயார்.

Firefox இணைய உலாவியின் 3.5 இறுதி பதிப்பு இன்று முதல் Mozilla தளத்தில் தரவிறக்க கிடைக்கிறது.விண்டோஸ்,மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கும் தரவிறக்க கிடைக்கிறது.பல புதிய சிறப்பம்சங்களுடன் வந்துள்ள Firefox 3.5 மேலும் மிக வேகமாக இணைய பக்கங்களை தரவிறக்குகிறது.
Sunspider என்னும் Javascript சோதனையை 1524 மில்லி வினாடிகளில் முடிக்கிறது என Mozilla தளம் சொல்கிறது.எனது கணினியில் 1572 மில்லி வினாடிகளில் முடிக்கிறது.இணைய பக்கங்கள் படு வேகமாக தரவிறங்குகின்றன. 
Firefox 3.5 தரவிறக்க
Posted by
பிரேம்ஜி
at
2
comments
Labels: இணைய உலாவி, கணினி, தொழில்நுட்பம்
வீடியோ:மைக்கேல் ஜாக்சன்-மறக்கமுடியாத இசையும் நடனமும்
நான்கு நாட்கள் முன்பு மாலை 4:30 மணி அளவில் அலுவலக நண்பர் ஆண்ட்ரு ஸ்மித் தளர்ந்த முகத்துடன் "Prem! Michael Jackson is No more" என்று சொன்னபோது அலுவலக வேலை பார்த்து கொண்டே எனக்கு ஜாக்சன் பாடல்களில் மிக பிடித்த "In the Closet" கேட்டுக்கொண்டிருந்தேன்.ட்விட்டர் ஸ்தம்பித்தது போல் எனக்கும் ஆனது.
நான் வாழ்ந்த கிராமத்தில் இருந்து நகரத்திற்கு படிக்க வந்த போது பதின்ம வயதுகளில் என்னையும் துள்ள வைத்தது ஜாக்சனின் டேஞ்சரஸ்(Dangerous).ஒரு தலைமுறையையே கட்டிப்போட்டது மைக்கேலின் இசையும்,நடனமும்.
13 கிராமி விருதுகளுடன்(இதுவே ஒரு உலக சாதனையாம்)உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மைக்கேல் சொந்த வாழ்வில் பல சிக்கல்களை,முரண்களை சந்தித்தாலும் தொழிலில் அசைக்க முடியாத ஆளுமை பெற்றிருந்தார்.அவருடைய இசை கச்சேரிகளுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள்,அவரை நேரில் பார்த்ததுமே கண்ணீர் விட்டு உணர்ச்சி பெருக்குபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே பல நாடுகளில் வசியப்படுத்தி வைத்திருந்தார்.
இந்த வீடியோ அதற்கு ஒரு சான்று.மைக்கேலின் "Greatest Hits" என்னும் வீடியோவில் மைக்கேல் உலக நாடுகளுக்கு இசை சுற்றுலா சென்றபோது மக்கள் ஆரவாரங்களின் தொகுப்பு.பின்னணியில் ஒலிப்பது மேற்கத்திய செவ்வியல்(Western Classical) இசை கலைஞர் கார்ல் ஆர்ஃப்(Carl Orff)பின், கார்மினா பியுரானா(Carmina Burana) இசைக்கோவையில் முக்கிய இசையான ஓ ஃ பார்ச்சுனா(O Fortuna).அந்த காலத்தில் Old Spice விளம்பரத்திலும் உபயோகித்திருப்பார்கள்.
இப்போது உயில் கூட எழுதி வைக்காமல் இறந்தாலும் இறந்தார்,அவர் செலவளித்தது போக மீதம் சொத்துகள் யாருக்கு என பெரும் போட்டியே நடந்து கொண்டிருப்பதாக சிஎன்என்னில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
Posted by
பிரேம்ஜி
at
5
comments
Labels: நிகழ்வுகள், மைக்கேல் ஜாக்சன், வீடியோ
ஆயிரத்தில் ஒருவன்(2009) mp3 பாடல்கள் தரவிறக்க
http://tamillatestmusic.blogspot.com/2009/06/aayirathil-oruvan-songs-download-free.html
அல்லது
http://www.megaupload.com/?d=UJWX8514
அல்லது
http://rapidshare.com/files/244326856/Aayirathil_Oruvan_2009_Mp3_Songs.rar
Posted by
பிரேம்ஜி
at
4
comments
