கடைசியாக வந்த செய்திகளின் படி, மைக்ரோசாப்ட் உடனான பேரம் சரி வராததால்
யாஹூ கடந்த திங்கட்கிழமை பேச்சு வார்த்தையை முடித்து கொண்டது. யாஹூ உடன் இணைவதற்காக நியூஸ் கார்ப்பரேசன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. யாஹூ தளமும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தளமும் இதை உறுதி செய்கின்றன. நியூயார்க் ஐ தலைமை இடமாக கொண்டு இயங்கும் நியூஸ் கார்ப்பரேசனின் தலைவர் ஊடக ஜாம்பாவான் (Media Tycoon) ருபெர்ட் முர்டாக் ஆவார்.
இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் The Sun, The Times , ஆஸ்திரேலியா வின் 20 க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள், இதழ்கள், ஆசியாவின் STAR TV தொலைக்காட்சிகள், அமெரிக்காவின் 20th Centuty Fox திரைப்பட நிறுவனம், FOX தொலைக்காட்சி மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் முன்னணி வணிக பத்திரிக்கை இந்த குழுமத்தில் அடங்கும். மேலும் myspace.com, photobucket.com போன்ற இணைய தளங்களையும் கொண்டுள்ளன. myspace என்பது orkut போன்ற பகிர்தல் தளமாகும்.
ஆனால் மைக்ரோசாப்ட் மேலும் தொடர்ந்து விலையை அதிகரித்து பேரம் பேசும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் முதலில் பேசிய பேரம் 44.6 பில்லியன் டாலர்கள் அல்லது யாஹூவின் ஒரு பங்கிற்கு 31 டாலர்கள். தற்போது நிலையில் ஒரு பங்கிற்கு 36 டாலர்கள் தர தயாராக உள்ளது.
யாஹூ உடன் இணைய நியூஸ் கார்ப்பரேசன் பேச்சு வார்த்தை
Labels: தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment