உலகின் முதல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் கார்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு "The Spy Who loved Me" என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் கற்பனையாக காட்டப்பட்ட நீரிலும்,நிலத்திலும் இயங்கும் காரை தற்போது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Rinspeed என்ற கார் தயாரிப்பு நிறுவனம் உண்மையாகவே தயாரித்துள்ளது.

ஸ்குபா (sQuba) என்று அழைக்கப்படும் இந்த கார் தொலை கட்டுப்பாட்டு( Remote Control) முறையில் இயங்க கூடியது.

video

நிலத்திலிருந்து நீருக்கடியில் சென்றவுடன் அதன் செயல்பாடுகள் சிறிய நீர் மூழ்கி கப்பலை போன்று செயல் பட ஆரம்பிக்கிறது. இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் இந்த கார் நீருக்கடியில் சென்றவுடன் சுவாசத்திற்காக விஷேச உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். 30 அடி ஆழத்தில் சீராக இயங்க இரண்டு ப்ரோபெல்லேர்கள் (Properller) உதவுகின்றன.

கனவு காண்பது தனது பொழுது போக்கு என்று கூறும் இந்த நிறுவனத்தின் தலைவர் பிராங்க் ரிண்டேர்நேக்ட் ( Frank Rinderknecht ) இந்த காரை எடை குறைந்த முறையில் தயாரித்து நீர் உள்ளே புகாமல் தடுப்பதும், நீருக்கடியில் அழுத்தத்தை தாங்கும் திறனுடன் தயாரிப்பது சவாலாக இருந்ததாக கூறுகிறார்.

மேலும் இது பாட்டரியால் இயங்குவதால் சுற்று சூழலை மாசு படுத்துவதில்லை. இந்த கார் அடுத்த மாதம் 6 ம் தேதி ஜெனீவா மோட்டார் காட்சியில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் போது பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்வது நிச்சயம்.

5 comments:

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு.
சிங்கப்பூரில் டூரிஸ்டுக்கு படகு மாடலில் விட்டுள்ளார்கள்.

கோபி said...

நிழல் நிஜம் ஆகிறது

பிரேம்ஜி said...

நன்றி வடுவூர் குமார், நன்றி திரு.கோபி அவர்களே.

thilakh said...

ஆஹா அற்புதம்....நிலத்திலும் ஆகாயத்திலும் என்றால் சற்று யோசித்துபாருங்களேன்.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி திலக்