கூகிள் லோகோக்கள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்

கூகிள் தேடு பொறி தளத்தின் முகப்பு பக்கத்தில்(Home Page) அடிக்கடி மாற்றப்படும் லோகோக்களை பார்த்திருப்பீர்கள். சொடுக்கி (Mouse) குறியை அந்த லோகோ மேலே கொண்டு சென்றால் அந்த லோகோக்களுக்கான விளக்கம் கிடைக்கும். உலகின் விசேஷ தினங்கள். விழா நாட்கள் மற்றும் சாதனையாளர்களை நினைவு கூறும் வகையில் அடிக்கடி இந்த லோகோக்கள் மேம்படுத்தப்படுகின்றன.

தினமும் 18 கோடி பேருக்கு மேல் வருகை தரும் கூகிள் தளத்தின் லோகோக்களை வரைபவர் 29வயதே ஆன டென்னிஸ் ஹுவாங் என்பவர் ஆவார்.



சமீப காலங்களில் இந்த லோகோக்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளன. தற்போதெல்லாம் மக்கள் குறிப்பிடதகுந்த நாட்களில் இந்த லோகோக்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். டென்னிஸ் இன் முதல் லோகோ 2000 ஆண்டு வெளி வந்தது. இப்போது டென்னிஸ் ஹுவாங் உலகின் முக்கிய கணிப்பொறி ஓவிய வடிவமைப்பாளர் (Computer Graphics Designer).

குறிப்பிடும்படியான சில சுவாரஸ்யமான லோகோக்களை இங்கு காண்போம்.


2000 ம் ஆண்டு டென்னிஸ் முதலாவதாக வரைந்தது Bastille Day என்னும் பிரெஞ்சு தேசிய தினத்திற்காக



ஈஸ்டர் பண்டிகைக்காக . இதன் கிழே தெரியும் சிறிய முட்டை வடிவ படத்தை சொடுக்கினால் சிறிய விளையாட்டு காண கிடைக்கும்.


Easter Egg



காதலர் தினத்திற்காக. இதன் கீழே தெரியும் சிறிய இதய வடிவ படத்தை சொடுக்கினால் சிறிய விளையாட்டு காண கிடைக்கும்.




சுவிஸ் நாட்டு தேசிய தினத்திற்காக



நமது இந்தியாவின் ஹோலி பண்டிகைக்காக



வானவூர்தி (Flight) கண்டுபிடித்து நூற்றாண்டு விழா



அமெரிக்கா சுதந்திர தினத்திற்காக



DNA கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆனதற்காக



ஐன்ஸ்டீன் பிறந்த நாளுக்கு


கீழ் உள்ள படம் டென்னிஸ் இன் திறமைக்கு ஒரு எடுத்துகாட்டு. ஜூன் 2004 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு வானவியல் அறிஞரிடம் இருந்து டென்னிசுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இன்னும் 24 மணி நேரத்தில் வீனஸ் கோள் சூரியனை மிக அருகாமையில் கடந்து செல்லும் எனவும் இது 122 வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும் என்று கூறினார். அடுத்த சில நிமிடங்களில் கூகிள் லோகோவின் இரண்டாவது "O" வை சூரியன் போலாக்கி அருகே சிறியதாக கருமை நிறத்தில் வீனஸ் கோள் கடந்து செல்வதாக வடிவமைத்து தளத்தில் வெளியிட்டார்.



லியனார்டோ டா வின்சி பிறந்த தினத்திற்காக



TCP/IP என்னும் இணையத்திற்கு மிக அடிப்படையான, கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற முறை வந்து 25 ஆண்டுகள் ஆனதற்காக



இனிமேல் கூகிள் தளத்தில் இந்த லோகோக்களை கவனித்து பாருங்கள். நிறைய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.வணக்கம்.

28 comments:

SP.VR. SUBBIAH said...

Thanks Premji for information

கைப்புள்ள said...

நல்ல பதிவு. சுவாரசியமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

பேரரசன் said...

சுவையான தகவல்.....
பகிர்வுக்கு நன்றி...

Nakkiran said...

WoW.. Cool

பிரேம்ஜி said...

Thanks for your visit thiru.Subbiah.

பிரேம்ஜி said...

தங்கள் வரவுக்கு மிக்க நன்றி திரு.கைப்புள்ள

பிரேம்ஜி said...

நன்றி பேரரசன் அவர்களே

பிரேம்ஜி said...

Thank you Nakkiran

thilak said...

excellent....

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆஹா..இந்தப் பையன் தானா தினமும் 18 கோடிப்பேர் பார்க்கும் லோகோக்களை வரைவது?
இன்றுதான் தெரிந்துகொண்டேன் நண்பரே.
பதிவுக்கு நன்றி... :)

பிரேம்ஜி said...

Thanks for your visit Thilak

பிரேம்ஜி said...

தங்கள் வருகைக்கு நன்றி ரிஷான் செரீப்

தமிழ்நெஞ்சம் said...

super and wonderful information about google logo.

Thanks Thalaivaa....

Anonymous said...

I will see Google logos regularly... Good Information

பிரேம்ஜி said...

mikka nandri tamil nenjam, thanks anony.

Madhu said...

Search in தமிழ் http://www.yanthram.com/ta/

santhosh said...

நல்ல நல்ல செய்திகளை தந்த பிரேம்ஜி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

santhosh said...

நல்ல நல்ல செய்திகளை தந்த பிரேம்ஜி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

santhosh said...

நல்ல நல்ல செய்திகளை தந்த பிரேம்ஜி அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...

பிரேம்ஜி said...

மிக்க நன்றி சந்தோஷ் அவர்களே!

Hari said...

உண்மையில் சுவாரஸ்யமான தகவல்களே.நன்றி.

Smooth Talk said...

good job, keep it up. thanks for the info

Nataraj said...

Great Preamji,

Really a good information to know about this. I think 2 weeks before the google logo was "First Day of spring" that time i too thought of who is designing these worthfull logos but your post was helpful to know about it.

Thanks

thambaan said...

ஆஹா! மிகவும் சிறப்பான தகவல்...பிரேம்ஜி

Sundar said...

Those were cool logos. i was wondering who did those.Your blog is very informative.Keep Rockin'

பிரேம்ஜி said...

நன்றி ஹரி.

Thanks for your visit smooth talk.

Thank you very much Nataraj.

நன்றி தம்பான்.

Thanks Sundar.

aravind said...

சிறப்பான தகவல் பிரேம்ஜி. இன்று கூட அன்னையர் தினத்திற்கு புதிய கூகிள் லோகோ பார்த்தேன்.

பிரேம்ஜி said...

வாங்க அரவிந்த்! நன்றி. நானும் பார்த்தேன்.