ஸ்ரீரங்கத்து தேவதை மறைந்தது

சுஜாதாவின் எழுத்துக்களில் எனக்கு முதலில் பரிச்சயமானது ஸ்ரீரங்கத்து தேவதைகள்.அதன் பின் அவரின் எல்லா எழுத்துக்களையும் தேடி தேடி படித்திருக்கிறேன். இன்னமும் மீண்டும் மீண்டும் படித்துகொண்டுள்ளேன். நேற்று "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" மீண்டும் படித்துக்கொண்டிருந்த போது கூட இது போல ஒரு செய்தி வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மீண்டும் கற்றதும் பெற்றதும் தொடர் எழுதுவார் என்றே எதிர்பார்த்திருந்தேன்.

நகரம், அரிசி,நிஜத்தை தேடி,நைலான் கயிறு, பிலிமொத்சவ் போன்ற அவரின் சிறுகதைகளை படித்தால் பல நாட்கள் அந்த பாதிப்பு தொடரும். கல்லூரியில் படிக்கும் போது அடிப்படை அறிவியலில் சில புரியாத விஷயங்களை அவரின் விஞ்ஞான கட்டுரைகளை படித்து புரிந்து கொண்டதுண்டு. ஜன ரஞ்சக எழுத்துகளிலும் வித்தை காண்பித்தவர். விகடன் ஆசிரியரின் சவாலுக்கு ஒப்புக்கொண்டு "ஆ" என்ற தொடர்கதையை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் "ஆ" என்று முடித்தார். மின்னணு வாக்கு பெட்டி உருவாக்கத்தில் பணியாற்றியவர்.

சில வருடங்களுக்கு முன் சென்னை வந்த பொழுது தொலை பேசியில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு மின் வணிகம் பற்றி கேட்ட பொழுது பொறுமையுடன் பதில் அளித்தார். இருமுறை நேரில் சந்தித்த பொழுது இந்த சிறியோனோடும் சில நிமிடங்கள் பேசினார்.

இதோ மறுபடியும் கனத்த மனதோடு "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" தொடர்ந்து படிக்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக.

9 comments:

துளசி கோபால் said...

செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

வவ்வால் said...

ஆழ்ந்த வருத்தங்களும், அஞ்சலியும்

Sundar said...

Too informative, really good and makes lots of sense...

Prem, im wondering how to gather stuffs like these...g8 dude...keep rockin :)

Naveen said...

May his soul rest in Peace

Uday said...

My deepest condolences

cheena (சீனா) said...

ஆழ்ந்த அனுதாபங்கள் - ஆன்மா சாந்தி அடைவதாக

அறிவழகன் said...

மிகுந்த வருத்தமடைந்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

திலக் Raj said...

உடல் மறைந்தாலும் உணர்வுகள் மறைவதில்லை...
சிகரம் தொட்ட சிறந்த மனிதன்....சிறுகதைகளின் சித்தன்...பேரிழப்பு

பிரேம்ஜி said...

என் ஆழ்ந்த அனுதாபங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.