மைக்ரோசாஃப்ட் புதிதாக வெளியிடப்போகும் இந்த கணிப்பொறி ஒரு மேசை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் பயனர்களின்(Users) தொடுகைகளுக்கு ஏற்ப வேலை செய்யும். இதுபோன்ற தொழில் நுட்பங்களில் பொதுவாக ஒரே ஒரு தொடுகைக்கு தக்கவாறு தான் கணிப்பொறி வேலை செய்யும். ஆனால் மைக்ரோசாஃப்ட்டின் இந்த கணிப்பொறி 52 தொடுகைகளை ஒரே நேரத்தில் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.விரல்களை திரையில் வைத்து அசைப்பதன் மூலமாகவே படங்களை வரைய முடியும்.எழுத முடியும்.
இதன் முக்கிய சிறப்பம்சம் குறிப்பிட்ட பொருட்களை திரையில் வைத்தால் அதை உணர்ந்து கொள்ளும் ஆற்றலாகும். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமராவை இதன் திரையில் வைத்தால் இந்த கணிப்பொறி அது டிஜிட்டல் கேமரா என உணர்ந்து கொள்ளும். உங்களுடைய Digital Camera வில் (எண்ம ஒளிப்பட பெட்டி) இருந்து ஒளிப்படங்களை இந்த பரப்பு கணிப்பொறிக்கு மாற்ற டிஜிட்டல் கேமராவை திரையில் வைத்து தொடுகைகள் மூலமாகவே செய்ய இயலும்.ஒளிப்படங்களை தொடுகைகள் மூலமாக சுருக்கலாம் நகர்த்தலாம். மேலும் செல்பேசி,mp3 Player, கடன் அட்டை போன்றவற்றையும் அடையாளம் தெரிந்து கொள்ளும்.இரண்டு செல்பேசிகளுக்கு இடையே கோப்புகளை(Files) பரிமாறிக்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா இயங்கு தளத்தில்(Operating System) வேலை செய்யும் இந்த கணிப்பொறியின் windows களை கை விரல்கள் மூலமாகவே நகர்த்தலாம்.விரைவில் வெகு ஜன புழக்கத்திற்கு வர இருக்கும் இந்த கணிப்பொறி முதலில் உணவு விடுதிகள்,வரவேற்பறைகள் மற்றும் மகிழ்வு விடுதிகள்(Clubs) போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
மைக்ரோசாஃப்ட்டின் தொடுவிசை பரப்பு கணிப்பொறி (Microsoft Surface Computing)
Labels: தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
தொட்டால் பூ மலரும்
சரியாக சொன்னீர்கள் திரு. கோபி அவர்களே
Real useful one, soon this will rock thw world... :)
Thanks for your visit Sundar
Post a Comment