

சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள சோனி நிறுவனத்தின் XEL-1 என்கிற தொலைக்காட்சி பெட்டி 3மிமீ தடிமன் மற்றும் 2 கிலோ எடை மட்டுமே கொண்டு உலகின் மிக மெல்லிய தொலைக்காட்சி பெட்டியாக இருக்கிறது.OLED(Organic Light Emitting Diode) தொழில்நுட்பத்தை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. திரையின் அகலம் 11''.மிக குறைந்த அளவு மின்சாரத்தை மட்டும் எடுத்து கொள்கிறது.LCD திரை தொலைக்காட்சி பெட்டிகளை விட வண்ணங்களை சிறப்பாகவும் படங்களை துல்லியமாகவும் காட்டுகிறது இந்த தொலைக்காட்சி பெட்டி.
LCD திரைக்கும் OLED திரைக்கும் உள்ள வித்தியாசம் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இந்த OLED நுட்ப முறை தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிக மெல்லிய தொலைக்காட்சி பெட்டி - தடிமன் 3 மிமீ மட்டுமே
Labels: தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
AMMAADI..........., ENGA VEETTU TV YODA THICKNESS 300MM THAN KONJAMTHAN DIFIREND......
ஆஹா பிரமாதம்!! சுவற்றில் போஸ்டர் ஓட்டுவது போல ஒட்டிக்கொள்ளலாமே!யானை விலையா?
ஹா ஹா.. வாங்க தாவூத்
கண்டிப்பா திலக். ரூபாய் மதிப்பில் 70000.
7,00,000 என்பதைத்தான் 70,000 என்று போட்டுவிட்டீர்களா, பிரேம்ஜி?? LCD டீவி் கூட இன்னும் இந்த விலைக்கு கிடைப்பதில்லை!!
இன்டல் போல சோனியும் குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு முட்டாள்தனத்தை செயல்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது!!
வாங்க கருப்பன். 2 லட்சம் ஜப்பானிய யென்கள் அல்லது 1750 அமெரிக்க டாலர்கள் என்று படித்தேன். ஆக ரூபாய் மதிப்பில் 70000 அளவுக்கு வருகிறது. இது 11 இன்ச் TV தான். 30,35 இன்ச் என்று வரும்போது நீங்கள் சொன்ன மதிப்பை தாண்டி விடும்.
இண்டல் சோனி பற்றி மேலும் சொல்லுங்கள். தெரிந்து கொள்ள ஆவல்.
இன்டல் பற்றிய கதை மிகப்பெரியது, இன்டல் x86 வரிசை பிராசசர்களில் வெறும் Clock speedஐ மட்டும் அதிகமாக்கி Clock speedஐயே ப்ராசசர் ஸ்பீட் போல விளம்பரம் செய்தது. ஆனால் இன்டலின் பல சிப்-செட்கள் அந்த காலத்தில் வெறும் 133MHz clockல் தான் ஓடும் :-(
உலகத்தில் 20KMPH வேகத்தில் ஒடக்கூடிய ரயில் பெட்டிகள் மட்டுமே இருக்கும் பட்சத்தில் 300KMPH கொண்ட ரயில் இன்ஜின்களை தயாரிப்பது போல!! இதில் கொடுமை என்ன வென்றால் யாரும் ரயில் பெட்டிகளின் வேகத்தை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை!! Just widening the bottle without widening the bottle-neck!
இன்னும் நம்மிடம் இருக்கும் HD படங்கள் இன்றிருக்கும் LCD டீவிகளின் தெளிவாக காட்டும் திறனைவிட கம்மிதான். உலகத்தில் இருக்கும் டீவி டெலிகஸ்டும் என்னதான் டிஜிடல் டெக்னாலஜியை பயன்படுத்தினாலும் டீவியின் தெளிவாக காட்டும் திறனுக்கு அது வெறும் சப்பை மேட்டர்தான்.
இப்போது உபயோகத்தில் இருக்கும் HDMI port கூட RGB க்கு 3Gbps விதத்தில் மொத்தம் 9Gbps தான் அனுப்ப முடியும். 32 BPP ஃபார்மட்டில் 1280x1024 Pixels per frame 60 Frames per second எவ்வளவு Gbps வேண்டும் என கணக்கிட்டு பாருங்கள்!! இது வெறும் 17 இன்ச் LCD யின் resolution தான். இதே 42 இன்ச் என்றால்!!!!!!
நம்மிடம் காட்டுவதற்க்கு தெளிவான படங்கள் இல்லாத பட்சத்தில் தெளிவான படங்களை காட்டும் கருவியை பற்றிய ஆராய்ச்சி தேவையா?
படத்தில் டீவியின் சைஸ் ரெம்ப பெரிதாக தெரிவதால் விலை அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன் :-))
3mm???? 3cm???? 3மிமீ என்பது ஒரு புத்தகத்தில் 40 பக்கங்களுக்கு உள்ள தடிமன். படத்தில் டீவி கொஞ்சம் திக்கானதாக தெரிகிறதே!
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி கருப்பன்.
Intresting News. Thanks PremJi...
Keep Rockin'
Post a Comment