இந்த சலன(வீடியோ) படத்தின் முடிவில் கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள்.

video

இந்த சலன(வீடியோ) படம் நொடிக்கு 5000 நகர்வுகளை(5000 Frames Per Second) படம் பிடிக்கக்கூடிய phantom வகை காமேராவால் எடுக்கப்பட்டது.(Frames எனும் ஆங்கில சொல்லுக்கு நகர்வுகள் என குறிப்பிடலாம் என்று கூறிய நண்பர் இலவச கொத்தனாருக்கு நன்றிகள்).இந்த வீடியோ படம் வெளி வந்த போது சிறந்த விளம்பர படத்திற்கான விருது பெற்றது. இங்கிலாந்தை சேர்ந்த Choice FM என்ற பண்பலை வானொலி நிறுவனம் பதின்ம வயதினரிடம் தற்போது அதிகம் புழங்கும் துப்பாக்கிகள் மற்றும் அது சார்ந்த கொலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றி நண்பர் தஞ்சாவூரானின் பதிவு ஒன்றை பார்க்க நேர்ந்தது.
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிப் பைத்தியங்கள் ...
( நண்பர் திரு.தஞ்சாவூரானுக்கு.. அனுமதி இல்லாமல் தங்கள் பதிவின் சுட்டி கொடுத்ததற்கு மன்னிக்கவும் )

மேலும் இது பற்றி இணையத்தில் துழாவும் போது இந்த செய்தி கிடைத்தது.சமீப காலங்களில் இது போன்ற பள்ளி கல்லூரிகளில் துப்பாக்கி சூடு நடப்பது அதிகரித்துள்ளது. விர்ஜீனியா சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மாதம் இரண்டு சம்பவங்கள் இது போல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்து கொண்டுள்ளது. மற்ற நாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் டெல்லி மற்றும் தமிழகத்திலும் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இளம் தலை முறையினருக்கான கலாச்சாரம் மற்றும் சூழ்நிலை மாற்றங்களே இதற்க்கு காரணங்கள். மூன்று வயது முதல் சினிமா, தொலைகாட்சி, வீடியோ கேம் என அனைத்திலும் வன்முறையே காணும் சிறு வயதினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தூண்டி விடுகிறது.

இந்த விளம்பரப்படம் உண்மையான துப்பாக்கி கொண்டு எடுக்கப்பட்டதால் அமெரிக்க படப்பிடிப்பு நிறுவனங்களில் இதற்கு அனுமதியில்லை. பிறகு துப்பாக்கி குற்றம் பற்றிய விழிப்புணர்வு படம் என்பதால் அனுமதிக்கப்பட்டது. இந்த படத்தில் வரும் சிறுவனின் உறவினர் ஒருவரும் இது போன்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்.

18 comments:

இலவசக்கொத்தனார் said...

இதையும் பாருங்க.

http://valaippadhivu.blogspot.com/2008/02/231-kislows.html

தஞ்சாவூரான் said...

பிரேம்ஜி,

அருமையான தகவல் சொல்லும் சலனப்படம். பையன் தலையைப் பார்த்ததும் மனம் பதறுகிறது :(

என் பதிவின் சுட்டி கொடுத்தமைக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

நன்றி!

பிரேம்ஜி said...

நன்றி திரு.இலவச கொத்தனார் அவர்களே.

வருகைக்கு மிக்க நன்றி திரு.தஞ்சாவூரான் அவர்களே.

ILA(a)இளா said...

அடேங்கப்பா, ஒரு நிமிசம் யோசிக்க வைக்கும் விளம்பரம். சுடுறதுக்கும் அதே ஒரு நிமிசம்தான், ஆனா யோசிக்க மாட்டேங்குதே பய புள்ளைங்க

திலக் Raj said...

சலன படத்தை ஆவலுடன் ரசித்துக்கொண்டிருந்த நான் சிறுவனின் தலையை பார்த்தவுடன் நொடியில் பதறிவிட்டேன். மேலும் இவ்வாறான கொலைத்தூண்டுதலுக்கு மனரீதியான பிரச்சனைகளும் காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அடிப்படை சூழ்நிலைகளும்,கலாச்சாரமும் பெரும் பங்கு வகிக்கிறது என்று நம்புகிறேன்.மீடியாவையும் தவறு சொல்ல இயலாது.சிருவயதினிலிருந்தே மனதளவில் ஏற்படும் தீய நோக்கங்களுக்கு அரசியல் அமைப்புகள்தான் காரணம் என்று நான் சொல்லவில்லை.ஒன்று கிடைத்தால் தானே செயல்படுத்ததோன்றும் !

துளசி கோபால் said...

பையன் தலையைப் பார்த்ததும் நெஞ்சே நின்னுபோச்சு ஒரு வினாடி.

மலைநாடான் said...

மிகநல்ல கருத்தை திகிலாகவே தருகிறது.

தந்தமைக்கு நன்றி

பிரேம்ஜி said...

வாங்க இளா. நானும் அசந்துட்டேன் விளம்பரம் பார்த்து.

பிரேம்ஜி said...

திலக். என் கருத்துப்படி மீடியா ரொம்ப முக்கியமான காரணி.

பிரேம்ஜி said...

அந்த பதட்டம் எனக்கும் வந்திச்சு. அது இந்த படத்திற்கான வெற்றின்னு நினைக்கிறேன்

பிரேம்ஜி said...

துளசி மேடம்,அந்த பதட்டம் எனக்கும் வந்திச்சு. அது இந்த படத்திற்கான வெற்றின்னு நினைக்கிறேன்

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி மலைநாடான்

thambaan said...

நிஜமாவே அதிருது

ச்சின்னப் பையன் said...

ஐயயோ!!! டென்சனாயிட்டேன்...!!!

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன்! நீங்களும் டென்ஷன் ஆகிட்டீங்களா?

Anonymous said...

வணக்கம் பிரேம்ஜி. நான் கல்யாண்ஜி. தங்கள் தமிழ் மசாலா வலைப்பூவை நன்கு அமைத்திருக்கிறீகள். எனது வலைப்பூவிற்கு விஜயம் செய்ய அழைக்கிறேன். பார்த்துவிட்டு பதிலிடுங்கள். நன்றி.
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com

பிரேம்ஜி said...

மிக்க நன்றி கல்யாண்ஜி. உங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது. நிறைய எழுதுங்கள்.

பிரேம்ஜி said...

நன்றி தம்பான்.