போதும் போதும்... தள்ளாதீங்க...



டோக்கியோவின் புற நகர் மற்றும் தரையடி ரயில் வண்டிகளில் Peek Hours எனப்படும் முக்கியமான அலுவல் சார்ந்த நேரங்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். விஞ்ஞான வளர்ச்சி மட்டுமின்றி மக்கள் தொகையிலும் ஜப்பானில் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது. டோக்கியோ எனும் மகா நகரமே ஒன்றரை கோடி பேருடன் விழி பிதுங்குகிறது. கார்கள் விலை அதிகம் மற்றும் கார்களை நிறுத்த இட வசதி மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் ரயில் வண்டிகளையே நாடுகின்றனர். ஆக இது போன்ற நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில் நிலைய அதிகாரிகளே மக்களை உள்ளே தள்ளி கதவை சாத்துகின்றனர். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.

6 comments:

nathas said...

paavanga ippadi adachu kondu oraanga :(

திலக் Raj said...

இந்த நெரிசலையும் ஒரு பெண் நடுவில் சிக்கி சிக்குன்னு உள்ளே செல்வதை பார்க்கும்போது கடவுளை கூப்பிடத்தான் செய்கிறோம்.ஆனால் அனைத்திலும் சிறந்து விளங்கும் ஜப்பான் இதனால் ஏற்படும் விளைவுகளையும், விபரீதங்களையும் ஏன் நினைத்து பார்க்கவில்லை? ரயில்வே அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் வியப்பாகவே உள்ளது!

பிரேம்ஜி said...

வாங்க நாதாஸ்,கொடுமையாதான் இருக்கு. வாங்க திலக், உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

கோபி said...

இந்திய மெட்ரோ ரயில்களில் கதவுகள் இல்லாததால் மக்கள் தொங்கிக்கொண்டு போகிறார்கள். அதனால் விபத்துகள் ஏற்படுகிறது. அந்தவிதத்தில் ஜப்பானை பாராட்டலாம். ஆனால் ஆட்டு மந்தைகளைப்போல் அடைப்பதை பார்த்தால் பாவமாக உள்ளது.

நட்டு said...

அடக் கொடுமையே!நான் நம்மூரு மட்டும்தேன் கூட்ட நெரிசல்னு நெனச்சுகிட்டிருந்தேன்.ஜப்பானே இப்படின்னா நம்ம நெரிசல்ல தப்பே இல்லை.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி திரு.கோபி அவர்களே.

வாங்க நட்டு. ரொம்ப கொடுமை தான்.