ஒவ்வொரு முறை நியூ யார்க் செல்லும் போதும் மதிய உணவு பற்றி சுவாரஸ்யமான கேள்விகள் எழும். அங்கு இங்கு என விவாதித்து முடிவில் சரவண பவனுக்கே செல்லும் நிலை ஏற்படும். அங்கு சென்றால் நீண்ட வரிசை காத்திருக்கும். பட்டியலில் நம் பெயர் எழுதிவிட்டு தெருவில் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க வேண்டும். ஒரு வழியாக இடம் கிடைத்து உள்ளே நுழைந்து சாப்பிடும் மக்களின் பெரும் சத்தத்துக்கு இடையில் அங்கு ஆர்டர் எடுக்க வரும் ஸ்பானிஷ் பேரரிடம் இட்லி வடையை தெளிவாக மெனு கார்டு காட்டி அபிநயித்து சொன்னால் 20 நிமிடங்களில் வரும். மேலே சொர சொரவென்று இருக்கும் அந்த இட்லியுடன் இனிப்பான சாம்பார் சாப்பிடும் போது மறுபடியும் இது தானா என்று தோன்றும். சரி சாப்பாடு சாப்பிடலாம் என்றால் அது மேலும் சுமாராக இருக்கும். கூட்டம் அதிகமாகிவிட்டால் குவாலிட்டி குறைந்து விடும் என்று நண்பர் சொல்வார். அது தான் இங்கு நடக்கிறது. சென்ற முறை நியூ யார்க் சென்ற போது அடுத்த தெருவில் புதிய தமிழக உணவகம் "தமிழ்நாடு பவன்" திறக்கப்பட்டிருந்தது. சென்றோம். அதிக கூட்டமில்லை. எல்லா உணவும் தரமாகவே இருந்தன. இட்லி தமிழ் நாட்டு பாரம்பரியத்துடன் சுவையாக இருந்தது. இனி இங்கு தான்.
சென்னையில் இருந்த போது ஒவ்வொரு உணவகமாக தேடி தேடி சென்று சாப்பிட்டுள்ளோம். ஆனால் இதுவரை சரவண பவனில் சரியான இட்லி சாப்பிட்டது இல்லை. முருகன் இட்லி கடை வந்த பிறகு இட்லி என்றாலே அங்கு செல்வது வழக்கம். சூடான இட்லியுடன் ஐந்து வகை சட்னி மற்றும் இட்லி பொடியுடன் சாப்பிடுவது திருப்தியான ஒன்று. பாலாஜி பவன் என்றால் மாலை நேரத்தில் போண்டா சட்னி சக்கை போடு போடும். வார இறுதி நாட்களில் தி.நகர் பாலாஜி பவனில் தான் மாலை நேர சிற்றுண்டி. வசந்த பவனில் தோசை பிரபலம். பல்வேறு வகை தோசைகளை சாப்பிடலாம். ரத்னா கபே என்றாலே இட்லி சாம்பார் தான். முதல் நாள் தி.நகர் பாலாஜி பவன் திறந்தபோது இட்லி சாப்பிட வந்து தட்டில் இட்லியோடு ஆனால் சாம்பார் இல்லாமல், சாம்பார் தி.கேணி ரத்னா கபெயிலிருந்து வரவேண்டும் என்று சொன்னதால் தட்டோடு கல்லா அருகில் சென்று மல்லு கட்டியது நினைவுக்கு வருகிறது. இப்படி இட்லியோடும் உணவுகளோடும் சென்னையின் பல்வேறு நினைவுகள் உள்ளன. நீங்களும் சொல்லுங்களேன். சென்னையில் உங்களுக்கு பிடித்த உணவகம் எது என்று கீழே உள்ள வாக்கு பெட்டியில்.
நியூயார்க்கில் நல்ல தமிழ் நாட்டு உணவு மற்றும் சென்னையின் சிறப்பான உணவகங்கள்
Labels: உணவு
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
உங்க பதிவு ரொம்ப டேஸ்டுங்க !!!!!!!
அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/
வருகைக்கு நன்றி KRP.
'திருவல்லிக்கேணி'யை பாத்தபிறகு நான் வேறே எதையும் பாக்கலே... குத்திட்டேன்... :-))))
Ennakku ellam unlimited "Andhra Meals" thaan correct... :)
My fav is Kanagadurga Andhra Meals in T.Nagar :)
I like Rathna Cafe. :-)
வாங்க சின்ன பையன் ரொம்ப நன்றி.
நாதாஸ் உங்க கருத்துக்கு நன்றி.
Sundar . Thanks for your visit.
முருகனில் சுட சுட இட்லியும் , ராஜ்பவனில் சூடான காபியும் அருமையாக இருக்கும்
முருகனில் இட்லி சிறப்பு
Ratna Cafe Sambar Idly unbeaten.
வருகைக்கு நன்றி கேசனோவா
வருகைக்கு நன்றி திலக்.
Thanks for your visit Rajagopalan.
Post a Comment