தசாவதாரத்தில் எந்த கமல் பேசப்படுவார்?

தசாவதாரம் படத்தில் கமலஹாசன் பத்து வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், அவை எந்தெந்த வேடங்கள் என்பதன் முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

ராமானுஜர், ஜார்ஜ் புஷ், 95 வயது கிழவி, எட்டடி உயர மனிதர் கலிபுல்லா கான், விஞ்ஞானி, தொழிற் சங்கத் தலைவர், வெள்ளைக்கார வில்லன், சிபிஐ அதிகாரி பலராம், சீன தற்காப்புக் கலை வீரர் மற்றும் சர்தார்ஜி ஆகியவை அந்தக் கதாப்பாத்திரங்கள்.

இவற்றில் ராமானுஜர், சிபிஐ அதிகாரி பலராம், விஞ்ஞானி மற்றும் சர்தார்ஜி ஆகிய வேடங்களின் புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.ஏனைய கதாப்பாத்திரத்தின் புகைப்படங்கள் இன்னும் ரகசியம் காக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் , பத்து கமலஹாசன்களில் எந்த நபர் பேசப்படுவார் என்பதே டாக் ஆஃப் தி கோலிவுட்.

அபூர்வ சகோதரர்களில் 'குள்ள' கமல், மைக்கேல் மதன காம ராஜனில் சமையல்காரர் கதாப்பாத்திரங்கள் வெகுவாக கவனத்தை ஈர்த்தன.

அந்த வகையில், தசாவதாரத்தில் கிழவிக் கமலும், சர்தார்ஜி கமலும், வெள்ளைக்கார வில்லனும் பேசப்படுவது உறுதி என்கிறது கோலிவுட் வட்டாரம்.

நன்றி: யாஹூ

7 comments:

Sundar said...

Thanks for sharing this.Keep Rockin'

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

சின்ன அம்மிணி said...

கிழவி வேஷம் அவருக்கு அவ்வை சண்முகிலயே பழகின ஒண்ணு. தொழிற்சங்கத்தலைவர் வேஷமும், அன்பே சிவம் படத்துல போட்டிருக்கார். படம் வரட்டும். என்ன புதுமைகள் செஞ்சிருக்கார்னு பாப்போம்.

Sridhar Narayanan said...

//ஏனைய கதாப்பாத்திரத்தின் புகைப்படங்கள் இன்னும் ரகசியம் காக்கப்படுகின்றன//

டிரைலரில் கடைசி விநாடியில் எல்லா படங்களுமே ஓட விடுகிறார்களே. அதுவும் 'முந்தா' பாட்டின் கிளிப்பிங்க்ஸிலே பாட்டி வேடம் முழுவதுமாகவே வருகிறது.

இலவசக்கொத்தனார் said...

ப்ரேம்ஜி, நீங்க கே ஆர் எஸ் கிட்ட அடி வாங்கப் போறது நிஜம்.

http://madhavipanthal.blogspot.com/2008/05/kamal-haasan-his-naked-lies.html

அவரு ரங்கராஜ நம்பின்னு சொன்னதுக்க்கே அந்த பட்டையைக் கிளப்பறாரு. நீங்க என்னடான்னா ராமனுஜர்ன்னே சொல்லிட்டீங்க. என்ன ஆகப் போகுதோ. தில்லை கோவிந்தராஜப் பெருமாளே நீதான் காப்பாத்தணும்.

பிரேம்ஜி said...

வாங்க சின்ன அம்மிணி! நானும் எதிர் பார்த்துக்கிட்டுருக்கேன்.

பிரேம்ஜி said...

நீங்க சொல்வது சரிதான் ஸ்ரீதர்!

வாங்க கொத்ஸ்! இப்படி ஒரு சிக்கல் இருக்குதா? இருங்க கே ஆர் எஸ் பதிவு பார்த்திட்டு வந்துர்றேன். அப்புறம் இது ஒரு வெட்டி ஒட்டிய வேலைன்னு சொல்லி அவரை எப்படியாவது சமாதானப்படுத்துறேன்.