ரோபோ நடத்திய சிம்பொனி இசை- சுவாரஸ்ய வீடியோ

ஜப்பானிய ஹோண்டா நிறுவனத்தின் அசிமோ ரோபோ டெட்ராய்ட்டில் உள்ள பிரம்மாண்டமான இசை அரங்கத்தில் நேற்று சிம்பொனி இசையை நடத்தியது.மேற்கத்திய சிம்போனி இசையை இசைஞர்கள் வாசிக்கும்போது ஒரு நடத்துனர் கையில் Baton எனும் சிறு குச்சியை வைத்துக்கொண்டு இசையின் சுருதி ஏற்ற இறக்கங்களை கை அசைவின் மூலம் இசைஞர்களுக்கு காட்டி சிம்பொனி இசையை வழி நடத்துவதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு மனிதர்கள் செய்வதை முதன் முறையாக ஒரு ரோபோ நேற்று செய்து காட்டியது.

இசை அரங்கத்தில் நுழைந்த அசிமோ அனைவருக்கும் வணக்கம் சொல்லி சிம்பொனியை நடத்த ஆரம்பித்தது.முடிவில் தலை தாழ்த்தி வணங்கி மக்களுக்கு நன்றி சொன்னது.சென்ற வருடம் வெளியான புதிய மேம்படுத்தப்பட்ட அசிமோ இந்த சாதனையை செய்துள்ளது. அசிமோ ரோபோக்கள் முகங்களை உணர்ந்து கொள்ளும் திறமை வாய்ந்தவை.அசிமோ நடத்திய சிம்பொனி இசையின் பெயர் "சாத்தியமில்லாத கனவு" என்பது சுவாரஸ்யமான செய்தி. அதன் அசைவுகள் மனிதரை போலவே இருந்ததாக இசை கலைஞர்கள் கூறினர்.அதன் வீடியோ இங்கே



ஹோண்டா நிறுவனம் மேலும் மேலும் அசிமோ ரோபோக்களை மேம்படுத்தி வருகிறது. 1986 இல் ஆராய்ச்சியை தொடங்கிய ஹோண்டா தற்போது அசிமோ ரோபோக்களை வைத்து சிம்பொனி இசை நடத்துவது வரை சாதித்துள்ளது.அசிமோ ரோபோக்கள் 4 அடி உயரம், 50 கிலோ எடை கொண்டவை.

தகவல்:Asimo Conducts Symphony

8 comments:

thambaan said...

சிறப்பான செய்தி.நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தம்பான்.

Sundar said...

This is really intresting news.Thanks Premji.Keep Rockin'

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

திலக் Raj said...

ஆஹா அற்புதமான செய்தி பிரேம்ஜி,நன்றி

பிரேம்ஜி said...

வாங்க திலக்.நன்றி.

aravind said...

Thanks for sharing this Premji.This is really cool.

பிரேம்ஜி said...

Thanks for your vist Aravind.