
ஐபிஎம் தயாரித்துள்ள இந்த சூப்பர் கணிப்பொறி ஒரு வினாடியில் 1000 ட்ரில்லியன் கணக்குகளை அல்லது ஒரு பெடா பிளாப் அல்லது ஒரு குவாட்ரில்லியன் கணக்குகளை செய்யும் திறன் கொண்டது.அதாவது ஒன்று போட்டு அதன் பின்னால் பதினைந்து பூஜ்ஜியங்களை போட்டால் (1000000000000000) அது தான் ஒரு குவாட்ரில்லியன்.
தற்போது உபயோகத்திலுள்ள ஒரு லட்சம் அதிவேக மடி கணினிகளுக்கு(Laptop) சமம் இந்த ரோட் ரன்னர்.கடினமான பௌதீக(Physics) கணக்குகளை அதிவேகமாக செய்து முடிக்கும்.
இது 12,000 சதுர இடத்தை ஆக்கிரமிக்கும்.இதன் இயங்கு தளம்(Operating System)Red Hat Linux.ஒரு Shopping mall க்கு தேவையான மின்சார சக்தி இதற்கு தேவைப்படும்.GB க்களில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.80 TeraBytes Memory கொண்டது.
உண்மையில் சோனி பிளே ஸ்டேஷன் வீடியோ விளையாட்டில் உபயோகிக்கும் செல் ப்ராசெசர்கள் மற்றும் ஆப்ட்ரான் ப்ராசெசர்கள்களை வைத்து இந்த ரோட் ரன்னர் தயாரிக்கப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோவிலுள்ள லாஸ் அலமொஸ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்படவுள்ள இந்த கணிப்பொறி வானவியல்,அணுவியல்,காலநிலை மாற்றங்கள் ஜீனோம் ஆராய்ச்சிகளுக்கு உபயோகப்படுத்தப்படும்.
உலகின் அதிவேக சூப்பர் கணிப்பொறி - ரோட் ரன்னர்
Subscribe to:
Post Comments (Atom)

11 comments:
இது சீரியஸ்: வாவ்!! சூப்பர் வேகமா இருக்கும்போலே இருக்கே!!!
இது தமாஸ்: எங்க வீட்டு பால் கணக்கு எழுத இது மாதிரி ஒண்ணு வாங்கிப் போடணும்...!!!
வாங்க சின்ன பையன். வாங்கிரலாம்.ஆனா விலை தான் கொஞ்சம் அதிகமா இருக்கும் போல. $133 மில்லியன் டாலராம்.
செம கம்ப்யூட்டர் பிரேம்ஜி. சுவையான செய்தி.நன்றி.
சுவையான செய்தி.நன்றி
வருகைக்கு நன்றி தம்பான்
வருகைக்கு நன்றி இக்பால்.
இதுல தமிழ்மணம் பதிவுகள் போட முடியுமா???
முக்கியமா...இதுல கும்மி அடிக்க முடியுமா??? :P
வாங்க CVR! கண்டிப்பா பதிவுகள் போடலாம்.ஆனா நாம அடிக்கிற கும்மிக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தாங்காது.
thanks for your information
பிரம்மாண்டம் பிரேம்ஜி நன்றி
Thanks Anony.
நன்றி திலக்.
Post a Comment