அமெரிக்க குப்பைக்கு தமிழ்நாடு தான் கிடைச்சுதா? - ஒரு அதிர்ச்சி வீடியோ ரிப்போர்ட்

கிட்டத்தட்ட 890 டன்கள் உடல் தீங்கு விளைவிக்கும் குப்பை பொருட்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்தில் 35 கண்டெய்னர்களில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் மூன்று வருடங்களாக.2005 ஆம் ஆண்டு நியூஜெர்சி,அமெரிக்கா விலிருந்து அனுப்பப்பட்ட இந்த குப்பை பொருட்கள் ஒரு இந்திய நிறுவனத்தின் "பழைய பேப்பர்" இறக்குமதிக்காக பெறப்பட்டுள்ளது.

video

(நன்றி:Times Now)
ஆனால் வெறும் பழைய பேப்பர் மட்டுமில்லாமல் பாலிதீன் பைகள்,கோக் பாட்டில்கள்,பூச்சி மருந்து பைகள்,உபயோகபடுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் உலோக கம்பிகள் ஆகியவற்றை கொண்டுள்ளன.மேலும் புற்று நோயை ஏற்படுத்தும் பொருட்களும் இதில் அடங்கியுள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி.

2007 இல் சென்னை உயர் நீதி மன்றம் இதற்காக ஒரு கமிட்டி நியமித்தது.அதன் ஆய்வறிக்கையில் இந்த கழிவு பொருட்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கும் மக்களுக்கும் பெரும் தீங்கு இழைக்கும் என கூறியது.இதை தொடர்ந்து சென்னை உயர் நீதி மன்றம் இந்த குப்பைகளை மீண்டும் நியூஜெர்சி,அமெரிக்கா விற்கே திருப்பி எடுத்துச் செல்லப் படவேண்டும் என தீர்ப்பளித்தது.

ஆனால் இன்னும் அந்த குப்பைகள் துறைமுகத்திலேயே உள்ளன.இந்திய நிறுவனம் அதை திருப்பி அனுப்பும் பொறுப்பை ஏற்று கொள்ள மறுக்கிறது.அமெரிக்க நிறுவனமும் இந்த குப்பைகளை திருப்பி எடுத்து கொள்ள மறுக்கிறது.மாசு கட்டுப்பாடு அமைப்பின் அதிகாரி BP சுக்லா கூறுகையில் இந்த மாதிரி கழிவு பொருட்கள் இந்தியாவினுள் இருக்க அனுமதிக்க பட முடியாது என்கிறார்.

இது போன்று கழிவு பொருட்கள் வருவது இது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே இது போல பல முறை வந்துள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2007 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருந்து கொச்சியில் வந்திறங்கிய தீங்கு விளைவிக்கும் கழிவு பொருட்கள் திருப்பி அனுப்பபட்டன.ஆனால் யாரும் பொறுப்பெடுத்து கொள்ளாததால் இன்னும் அந்த 890 டன்கள் கழிவுப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலேயே கிடக்கின்றன.

41 comments:

ச்சின்னப் பையன் said...

:-((((((

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன். :-((((((

வால்பையன் said...

அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா ஒரு குப்பை தொட்டி.
அமெரிக்கா விரும்பிகள் இதை வீட்டுக்கு எடுத்து போக சொல்லி ஒரு சட்டம் போடலாம்

வால்பையன்

பிரேம்ஜி said...

வாங்க வால்பையன்.உங்க கோபம் நல்லா புரியுது.இவங்களும் அனுப்ப மாட்டாங்க அவங்களும் எடுத்துக்க மாட்டாங்க. நடுவுல மாட்டிகிறது மக்கள் தான்.வருகைக்கு மிக்க நன்றி.

Muthukumar said...

திருப்பி அனுப்பலைன்னா - அனுப்பும் பொறுப்பை ஏத்துக்கலைன்னா - அந்த கம்பெனியின் கோட் சூட் டை கட்டின கனவான்கள் (சேர்மன், நிர்வாக இயக்குநர், இயக்குநர்கள் இன்னபிற கயவன்களை) ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண்ணிகிட்டே களி தின்ன நேரும்-னு ஒரே ஒரு எச்சரிக்கை கொடுத்தா போதும், ஒழுங்கா நடவடிக்கை எடுப்பானுங்க.

சும்மா கொஞ்சிகிட்டே இருந்தா வேலைக்கு ஆகாது. கோலெடுத்தாதாங்க கொரங்கு ஆடும் நம்ம ஊருல.

வெறுப்புடன்
முத்து

பிரேம்ஜி said...

வாங்க முத்துகுமார்.வேற வழியில்லை.நீங்க சொன்ன மாதிரி செஞ்சா தான் சரி வரும் போல இருக்குது.இப்ப தான் மெதுவா மீடியா மூலமா விஷயம் வெளியே வருது. என்ன ஆகுதுன்னு பார்ப்போம்.

துளசி கோபால் said...

அடப்பாவிகளா......

அநியாயமா இருக்கே.(-:

அவுங்களுக்கே இதைத் திருப்பி அனுப்பிரணும்.

இங்கே நியூஸியில் ஒரு மாணவனின் கண்டுபிடிப்புன்னு ஆராய்சி ஒன்னு வெளியிட்டாங்க போனவாரம்.

ப்ளாஸ்டிக் போன்றவைகளை மக்க வச்சுப் பூமிக்குக் கெடுதல் வராம ஆக்கலாமாம்.

இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறதாம், ஆரம்ப அளவில் மட்டும் வெற்றின்னு இருப்பதால்.

முழுவிவரம் இன்னும் கிடைக்கலை.

இக்பால் said...

இவனுங்களையெல்லாம் ஏதாவது கடுமையான தண்டனையா கொடுக்கனுமய்யா. அப்ப்தான் அடுத்தவனுக்கும் பயம் இருக்கும்.

ஜேகே - JK said...

தகவலுக்கு நன்றி பிரேம்ஜி. கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னைக்கு அருகில் உள்ள பழைய இரும்பு தொழிற்சாலைகளில் 2 டன் எடையுள்ள பழைய துப்பாக்கி குண்டுகள், விமான குண்டுகள் எல்லாம் தோண்டி எடுத்திருக்கிறார்கள். இவை எல்லாம் அமெரிக்காவிலிருந்து வந்த பழைய இரும்பு கழிவுகளாம்...

கோபி said...

அமெரிக்கா குப்பை இரண்டு வருடமாக திருப்பி அனுபபமுடியாமல் இருப்பது
தற்பொழுது மீடியா மூலம் தெரியவந்துள்ளது. இதுபோல் வேறு துறைமுகங்களிலும் வந்து டெலிவரி எடுத்திருப்பர்களோ? குப்பையயை கிளரினால்தான் உண்மை தெரியவரும்.

தஞ்சாவூரான் said...

உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவின் குப்பைகள் (அழிவு ஏற்படுத்துபவை உட்பட) பெரும்பாலும், இந்தியாவுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. பழைய இரும்பாக இருக்கட்டும், ஆஸ்பெட்டாஸ் அதிகமுள்ள பழைய கப்பல்களாக இருக்கட்டும் அவை வந்து சேருவது நமது துறைமுகங்களுக்குத்தான். ஏனென்றால், இந்திய உயிர்கள் அவ்வளவு மலிவானவை. கேள்வி கேட்க நாதியில்லை.

இதே அமெரிக்கா, அணுக்கழிவை அதன் நெவேடா (லாஸ் வேகாஸ் இருக்கும் மானிலம்) வில் கொட்டப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டது. அப்புறம், பூர்வகுடி மக்களுக்கு லஞ்சம் கொடுத்து/மிரட்டி அங்கே கொட்டிக் கொண்டுள்ளது (யுக்கான் பாலைவனம்). ஏற்கனவே ஈ-வேஸ்ட் எனப்படும் குப்பைகள் நேர் வழியாகவும், அமெரிக்க நிறுவனங்களின் 'கருனையினால்' தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்தியாவில் 'கொட்டப் படுகின்றன'. ஊருக்கு இளைச்சவன், பிள்ளையார் கோயில் ஆண்டி. அமெரிக்காவுக்கு இளைச்சவன் , இந்தியன்.

என்ன செய்றது? காவடி தூக்கியே பழகிட்டோம்..

கிரி said...

இரண்டு பேர் பக்கத்துலயும் சமபந்தபட்டவர்களை இந்த குப்பை அறையில் போட்டு பூட்டி வைத்து, ஒரு முடிவுக்கு வாங்கன்னு கூறினால் தான் சரி பட்டு வரும் :-)))

திராவிடன் said...

Mr. அமேரிக்க ஆதரவாளன் கருத்து சொல்ல இன்னும் வரவில்லையா?

Dhans said...

அரசாங்கம் தெளிவா ஒரு கொள்கை வச்சு இருக்கணும் சுற்றுப்புறத்தை பேணிக்காக்க, அதெல்லாம் இருக்க தெரியல நம்ம நாட்ல, அத விடுங்க முதல்ல நாம ஒழுங்கா இருக்கலாம், தினமும் ஒரு சிறு செயலாவது சுற்றுப்புறத்தை பேண எதாச்சும் செய்யலாம்.
திருப்பி அனுப்பனும்னு நாம கரடியா கத்துவோம் அதுக்குள்ளே பெட்ரோல் விலையை ஏத்தி நம்ம அத மறக்க செஞ்சுடுவாங்க, நம்ம மீடியா எல்லாம் ஒரு பிரச்சனைய நல்லா வெளிக்கொண்டு வராங்க அப்புறம் அத அப்படியே மறந்துடறாங்க,

பிரேம்ஜி said...

வாங்க துளசி மேடம்!ரொம்ப அநி யா யமாத்தான் இருக்கு.நீங்க சொல்ற மாதிரி கண்டுபிடிப்புகள் வந்தால் ரொம்ப நல்லது.

பிரேம்ஜி said...

வாங்க இக்பால்.உங்க கருத்தை நச்சுன்னு சொல்லியிருக்கீங்க.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி ஜெகே.உங்க தகவலுக்கும் ரொம்ப நன்றி.
இன்னும் தோண்ட தோண்ட என்ன எல்லாம் வருமோ?

பிரேம்ஜி said...

வாங்க திரு.கோபி அவர்களே! நீங்க சொல்றது மாதிரி குப்பையை கிளறினால் நிறைய உண்மைகள் வெளிவரலாம்.இப்ப தான் தோண்டினால் என்ன என்னமோ வருதே.

பிரேம்ஜி said...

வாங்க தஞ்சாவூரான்!கேள்வி கேட்க நாதியில்லைன்னு நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை. வால்பையன் சொன்னது போல அமெரிக்கா இந்தியாவை ஒரு குப்பை தொட்டியாக தான் நினைக்குது. கடலைகளை நல்லா ஒடச்சி சாப்பிட்டிட்டு தோலை எல்லாம் எதிர்பக்கம் தள்ளி விடறமாதிரி இந்த ஈ- வேஸ்ட் ஐ நம்ம ஊருக்கு ரொம்ப நாளா தள்ளி விட்டுகிட்டு இருக்காங்க. நிறைய புது விஷயங்கள் சொல்லியிருக்கீங்க.நன்றி.இந்த தூத்துக்குடி மேட்டர்ல சம்பத்தப்பட்ட இந்திய கம்பெனி,சிகரெட் தயாரிக்கும் I.T.C நிறுவனம்ன்னு தெரியுது. ஓஹோ அப்ப இவங்க தயாரிக்கிற சிகரெட்ல உபயோகிக்கறது இந்த பழைய பேப்பர் தானா?

பிரேம்ஜி said...

வாங்க கிரி.வருகைக்கும் உங்க கருத்துக்கும் ரொம்ப நன்றி.

பிரேம்ஜி said...

வாங்க திராவிடன்.. Mr. அமேரிக்க ஆதரவாளன் இன்னும் வரலை.

அறிவன்#11802717200764379909 said...

இதை என் பதிவிலும் சுட்டியிருக்கிறேன்.

பிரேம்ஜி said...

வாங்க தன்ஸ்!எப்பவுமே அப்படித்தான் மீடியா வுல பரபரப்பா ஒரு விஷயம் பேசப்படும். அதுக்கப்பறம் ஒரு வாரத்தில இன்னொரு விஷயம் பரபரப்பாகும். அதை மறந்திருவாங்க.எல்லாரும் மாறணும்.

பிரேம்ஜி said...

வாங்க அறிவன்! ரொம்ப விவரமா நிறைய தகவல்களோட எழுதியிருக்கீங்க.
//"ப்ளூ லேடி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல்,இனிமேல் கடல் பயணத்துக்கு ஏற்றதல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. அதில் இருக்கும் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸ்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று அந்த சின்னஞ்சிறிய நாடு அதை உடைக்க மறுத்துவிட்டது.அங்கிருந்து அந்தக் கப்பல் மலேசியா சென்றது.அந்த நாடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் அந்தக் கப்பல் நுழைய அனுமதி மறுத்துவிட்டது.
சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாஸýம், பாலிக்ளோரினேட்டட் பைபினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக் கொண்ட அந்தக் கப்பல்,இந்தியாவைத் தஞ்சம் அடைந்து,நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளையும் பெற்று,குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் உடைத்துப் பிரிக்கப்பட்டது.குறைந்தப்ட்சம் பங்களாதேஷ்க்கு இருக்கும் சுரணை,அக்கறை கூடவா நமக்கு நம் தேசத்தின் மேல் இல்லை?
//
கப்பலை உடைக்க ஒத்து கொண்டது மாதிரி கேவலம் வேற எதுவும் இல்லை.இந்த தூத்துக்குடி
விஷயம் வெளியே வந்தவுடன் நானில்லை நீயில்லை ன்னு ஆளாளுக்கு ஒருத்தரை கைகாமிப்பாங்க.இது வேலைக்கே ஆகாது.

thambaan said...

என்னங்க இவ்ளோ மோசமா இருக்காங்க?கேக்கவே வெறுப்பா இருக்கு.

பிரேம்ஜி said...

வாங்க தம்பான்.ரொம்ப வெறுப்பா தான் இருக்கு.

Hari said...

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு,மூணு வருஷமா யாரும் கண்டுக்க வேயில்லை அப்படிங்கும்போது.

பிரேம்ஜி said...

வாங்க ஹரி.எனக்கும் தான்.

Sathiya said...

இந்த பிரச்சனை நம்ம ஊருலையே இருக்குதுங்க. மற்ற மாநிலத்தில் இருந்து கூட குப்பைகளை தமிழ் நாட்டில் கொண்டு வந்து கொட்டுவாங்க. இவங்கள என்ன பன்றதுனே தெரியல. சொல்ல முடியாது, அந்த அமெரிக்கா குப்பைல nuclear இருந்தா கூட இருக்கும்.

பிரேம்ஜி நீங்க கேட்ட மேட்டர் இதோ:
1. Go to Layout -> Page Elements
2. Click Add a Page Element
3. In the Page Element pop-up, select 'Slideshow'
4. It will ask for Title and Source.
5. Give any title and in the Source Select Picasa, Flickr or Photobucket
6. Now in the Option, select Album instead of Keyword.
7. Give your Picasa/Flickr Username in the username box
8. Now in the Album list, you can find all your public albums. Just select one of them and click Save.
9. That's it. You are done.
10. You can now place this Page Element whereever you want.
Hope this helps.

பிரேம்ஜி said...

சத்யா!உங்க வருகைக்கு, கருத்துக்கும் மேலும் Slide show பற்றிய தகவல்களுக்கும் மிகவும் நன்றி.

Sundar said...

Americans think let other countries stink. They dont care.As you said earlier in the comments they will consume all the peanuts and will throw the shells to the otherside.

பிரேம்ஜி said...

Sundar.. Thanks for your visit and comment.

மங்களூர் சிவா said...

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு,மூணு வருஷமா யாரும் கண்டுக்க வேயில்லை அப்படிங்கும்போது.

கிரி said...

அதெப்படீங்க உங்க பதிவு மட்டும் தவறாம வாசகர் பரிந்துரை பகுதியில வந்து விடுகிறது :-))

பிரேம்ஜி said...

வாங்க சிவா.அதிர்ச்சியான விஷயம் தான்.

மக்கள் சட்டம் said...

நல்ல பதிவு.

கன்டெயினரில் அடைக்கப்பட்ட குப்பைகள் குறித்து பதிவு இட்டுள்ளீர்கள்.

குப்பை மட்டுமல்ல நோயை உருவாக்கக்கூடிய நச்சுப்பொருட்களும் நமது உணவாகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. இது குறித்து ஒரு கருத்தமர்வு சென்னையில் நடந்தது. இதுகுறித்து "மக்கள் சட்டம்" வலைப்பதிவில் அழைப்பும் விடுக்கப்பட்டது.

சென்னையில் சமூக சிந்தனை உள்ள பல வலை பதிவர்கள் இருந்தபோதிலும் இந்த கருத்தமர்விற்கு வந்தவர்கள் லிவிங்ஸ்மைல் வித்யாவும், மருத்துவர் புரூனோவும் மட்டுமே.

பிரேம்ஜி said...

வருகை தந்த மக்கள் சட்டம் மற்றும் குழுவிற்கு மிக்க நன்றி.மக்கள் சட்டம் மக்கள் சட்டம் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன்.மிக சிறப்பான தளம்.மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.

திலக் Raj said...

என்ன எழவுடா இது அமெரிக்காவில் போட்ட கழிவு இந்தியாவின் கடற்க்கரையிலா ? கல் பொருக்குகிரார்களோ?

பிரேம்ஜி said...

வாங்க திலக்.கொஞ்ச நாளா ஆளை காணோம். உங்க பின்னூட்டத்திற்கு நன்றி.

சகாராதென்றல் said...

நாமே கண்ட இடங்களில் குப்பையைக் கொட்டினால், (குறிப்பாக பொது இடங்களில்) அப்பறம் அமெரிக்காகாரன் அவங்க குப்பையை எல்லாம் இங்கே கொண்டுவந்து கொட்டத்தான் செய்வார்கள். முதல்ல நாம திருந்தணுங்க‌

பிரேம்ஜி said...

வாங்க சகாரா தென்றல்.நீங்கள் சொன்னது உண்மைதான். மறுக்கவில்லை.நாம் மாறவேண்டியது நிறைய இருக்கு.ஒருவர் தின்பண்டத்தை சாப்பிட்டுவிட்டு அதன் பொட்டலத்தை உட்கார்ந்த இடத்துக்கு பக்கத்திலேயே தூக்கி எறிவதில் அந்த மனிதரின் சோம்பேறித்தனம்,பொறுப்பின்மை,
அலட்சியம் அனைத்தும் வெளிப்படுகிறது.இது மாறினால் தான் நாம் முன்னேறமுடியும்.ஆனால் நம் மேல் விழும் குப்பையை சகித்து கொள்ள முடியுமா? :-)) உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகாரா தென்றல்.