கடந்த 27 நாட்களாக செவ்வாயில் பல்வேறு ஆய்வுகளை செய்து வரும் பீனிக்ஸ் ஆய்வு கலம்(Phoenix Mars Lander) கடந்த ஜூன் 15 ம் தேதி தன் ரோபாடிக் கரங்களால்(Robotic Arms) செவ்வாயின் தரை பகுதியை தோண்டிய போது சில வெள்ளை நிற படிமங்கள் தென்பட்டன. முதலில் அவை உப்பு படிமங்களாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.
ஜூன் 16ம் தேதி கூட தென்பட்ட அந்த படிமங்கள் மூன்று நாட்கள் கழித்து ஜூன் 19ம் தேதி மீண்டும் அந்த தோண்டப்பட்ட பகுதியை பார்த்த போது ஆவியாகியிருந்தன.ஆகவே செவ்வாய் கிரகத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தரையில் 5 செமீ ஆழத்தில் பனிக்கட்டிகள் படர்ந்திருப்பது உறுதியாகிறது என கலிபோர்னியாவின் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வக(Jet Propulsion Laboratory)விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கீழே உள்ள படம் பனிக்கட்டி உருகுவதற்கு முன்னும்,பின்னும் எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றுடன் ஒன்று மேற் பொருத்தப்பட்டு காண்பிக்கப்படுகிறது.
கீழே பனிக்கட்டி இருந்த இடம் கருப்பு கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது.படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்.
செய்தி NewScientist
செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டிகள் இருப்பதை பீனிக்ஸ் உறுதி செய்கிறது
Subscribe to:
Post Comments (Atom)

11 comments:
அப்படிப் போடு பீனிக்ஸ்.தகவலுக்கு நன்றி பிரேம் ஜி.
வாங்க ராஜ நடராஜன்.பீனிக்ஸ் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தரும்னு நம்பறேன். வருகைக்கு மிக்க நன்றி.
இந்த மாதிரி தகவல்களுக்காக காத்திருந்தேன். நன்றி.
அருமையான செய்தி...
வருகைக்கு மிக்க நன்றி தமிழ் சினிமா.
வருகைக்கு மிக்க நன்றி சின்ன பையன்.
Thanks for the info Premji. Keep Rockin'
Thanks for the info Premji.Keep Rockin'
அட்டகாசமான விஷயம்.தகவலுக்கு நன்றி பிரேம்ஜி.
Thanks for your visit Sundar.
வருகைக்கு நன்றி ஹரி.
அசத்தல் பிரேம்ஜி கலக்கீடீங்க போங்க
வருகைக்கு மிக்க நன்றி திலக்.
Post a Comment