நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் தளங்களான யூடியூப்(Youtube),பிகாஸா வெப்(Picasa Web),ஃபிலிக்கர்(Flickr),கூகிள் இமேஜ் சர்ச்(Google Image Search),யாஹூ இமேஜ் சர்ச்(Yahoo Image Search) போன்ற தளங்களில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை அவற்றின் தளங்களில் ஒவ்வொரு பக்கமாக முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ பார்ப்பது சிறிது சிரமத்தையே கொடுக்கும்.ஆனால் நீங்கள் யூடியூப்இல் தேடிய ஒரு குறி சொல்லுக்கான வீடியோக்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் ஒருவித முப்பரிமாண எபெக்டுடன் அனைத்து வீடியோக்களையும் பார்க்க வசதி செய்து தருகிறது இந்த Piclens மென்பொருள்.இது அப்படியே ஃபிலிக்கர்,மற்றும் கூகிள் இமேஜ் சர்ச்,யாஹூ இமேஜ் சர்ச் போன்ற தளங்களுக்கும் பொருந்தும்.புகைப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பவர்களுக்கு இது சுவாரஸ்யமான மென்பொருள்.
விளக்க வீடியோ படம் கீழே.
கீழே உள்ள இந்த ப்பிக்க் லென்ஸ்(Piclens) தளத்திற்கான தொடுப்பை Piclensசொடுக்கி இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மென்பொருளை நிறுவிய பிறகு மேல் குறிப்பிட்ட தளங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் காட்டப்படும் படங்கள் அல்லது வீடியோ Icon களில் கீழ் இடது ஓரத்தில் சிறு அம்புக்குறி காட்டப்பட்டிருக்கும்.அதை சொடுக்கினால் ப்பிக்க் லென்ஸ்(Piclens) மென்பொருள் இயங்க ஆரம்பிக்கும்.சொடுக்கியை கொண்டு முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்லலாம்.
தமிழில் என் சிறு விளக்கத்துடன்.
Piclens- பிரவுசரில் 3D எஃபெக்டுடன் சில தளங்களை பார்க்க
Subscribe to:
Post Comments (Atom)

19 comments:
ஓ. இதைத்தான் ரொம்ப நாளா தேடிட்டிருந்தேன். தங்கமணி இல்லாதபோது நிறுவிப் பார்க்கவேண்டும். அவ்வ்வ்வ்வ்வ்..
புதுப்புது technology விஷயங்களை நமக்கு அளித்துவரும் பிரேமுக்கு ஒரு பெரிய ஓஓஓஓ!!!!
வாங்க சின்ன பையன்.எதோ உள்குத்து மாதிரி தெரியுது.சரி இருக்கட்டும்.போன பதிவுக்கு போட்ட அதே பதில்.பார்த்து உடம்பு புண்ணாகிட போகுது.
சின்ன பையன் வருகைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி நன்றி. :-))
Simply Superb.Thanks for the info.
Keep Rockin'
Thank you very much Sundar.
ஒரு சிறப்பான மென்பொருள். தகவலுக்கு நன்றி.
நன்றி தம்பான்.
நல்லா இருக்குதுங்க இந்த மென்பொருள்.பகிர்ந்தமைக்கு நன்றி.
ரொம்ப நன்றி ஹரி.
அருமையான மென்பொருள்.இப்போது இந்த தளங்களை உலாவ மிகவும் வசதியாக உள்ளது.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றி அரவிந்த்.
Excellent software....
மிகவும் சிறப்பான மென்பொருள் பிரேம்
Thanks Sundar.
நன்றி திலக் ராஜ்
பிரேம்ஜி.3D அசத்தல்.நிறுவிட்டேன்.உங்கள் குரல் வளம்...ஆஹா!அது என்ன தஞ்சை,கும்பகோணத்துப் பக்கம் தமிழோசை அவ்வளவு இனிமை.காவிரித் தண்ணீரா? தண்ணீருக்கும் குரலுக்கும் ஏதோ விஞ்ஞான சம்பந்தம் இருக்குமென நிறைய நாட்களாக சந்தேகம்.
வாங்க நடராஜன்.நிறுவிட்டீங்களா? அசத்துங்க.உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.காவிரி தண்ணீர் கண்டிப்பா விஷேசம் தான்.
வாங்க நடராஜன்.நிறுவிட்டீங்களா? அசத்துங்க.உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.காவிரி தண்ணீர் கண்டிப்பா விஷேசம் தான்.
Post a Comment