360 டிகிரியில் சிறப்பானதொரு மதுபானக்கடை மற்றும் உணவகம்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில்,லிமா நகரத்தில் உள்ள ப்ளூ மூன்(Blue Moon) உணவகம் மற்றும் மதுபானக்கடை உலகின் சிறப்பான மதுபான வகைகளுக்கும்,Buffet முறையில் உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது மட்டுமன்றி உலகின் இரண்டாவது பெரிய பாட்டில் சேகரிப்பை கொண்டுள்ளது.

உணவகம் முழுவதும் 17,500 பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.உணவகத்தை அரிய பழம் பொருட்களால் நிரப்பி வைத்துள்ளார்கள்.இந்த உணவகத்தை நடத்துபவர் ஒரு இத்தாலியர்.100,150 வருடங்களுக்கு முந்தைய மதுபான வகைகள் உடன் கிடைக்கிறது.வித்தியாசமான இந்த உணவகத்தை ஒரு நிறுவனம் பல கோணங்களில் படம் பிடித்து ஒரு முழுமையான 360 டிகிரி Panoramic பார்வையில் காட்டியுள்ளது.கீழேயுள்ள படங்களை சொடுக்கி வித்தியாசமான அந்த உணவத்தை ஒரு Panoramic பார்வை பாருங்கள். கூரை மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாட்டில்களை கவனியுங்கள்.தளத்திற்கு சென்ற பிறகு சொடுக்கி(Mouse)யின் பொத்தானை அழுத்திக்கொண்டு இடப்புறம் மற்றும் வலப்புறமாக நகர்த்தி முழு பார்வை பார்க்கலாம்.அதே போல் மேலும் கீழுமாக.சொடுக்கியின் Mouse Wheel சுற்றுவதன் மூலம் Zoom செய்தும் பார்க்கலாம்.









16 comments:

ச்சின்னப் பையன் said...

சூப்பர். அருமையோ அருமை...
நாம படம் பிடித்தால், இந்த மாதிரி செய்ய முடியுமா?

Sundar said...

Aww.This is damn intresting :-))
Keep Rockin'

கிரி said...

நம்ம ஊரா இருந்த சண்டை போட்டு பாட்டிலை காலி பண்ணி இருப்பாங்க ;-)

பிரேம்ஜி said...

வாங்க சின்ன பையன். புகைப்படங்களை வைத்து Panoramic படம் செய்யலாம்.ஆனால் இது போன்று செய்வதற்கு சிறப்பு மென்பொருள் வேண்டும்.

ராஜ நடராஜன் said...

பிரேம்ஜி!இங்கே மதுவிலக்கு.அதுவும் நான் ஸோபர் வேற.இப்படி எனக்கு போதை ஏத்துனா எப்படி?ஒரு படத்துலேயே நான் கவிழ்ந்துட்டேன்.மீதி நாளைக்குத்தான்.

திலக் Raj said...

super premji

பிரேம்ஜி said...

Thanks Sundar.

பிரேம்ஜி said...

வாங்க கிரி.சரியாதான் சொல்லியிருக்கீங்க.

வாங்க நடராஜன். நாளைக்கு கவிழாம பாருங்க :-))

Vijay Anandh said...

wow!!! fabulous!!!

பிரேம்ஜி said...

Thanks Thilak

ராஜ நடராஜன் said...

//வாங்க நடராஜன். நாளைக்கு கவிழாம பாருங்க :-))//

நேத்தைய ஹேங்கோவரே தீரல.இனி மறுபடியுமா?இனி சாயங்காலத்துக்கு மேலேதான்:)

பிரேம்ஜி said...

Thanks Vijay Ananth.

சரி சாயங்காலமே வாங்க நடராஜன்.

துளசி கோபால் said...

எப்படிங்க....இப்படியெல்லாம்.....

ஹைய்யோ ஹைய்யோ......


கூடையில் இருக்கும் மாம்பழம்....அப்படியே சுண்டி இழுக்குது.

டிஸ்ஸர்ட் செக்ஷன் சூப்பர்.


பதிவை ஓப்பன் பண்ணி வச்சுக்கிட்டே அதைத் தொட்டுக்கிட்டு வெறும் ரசஞ்சோறு தின்னப்போறேன்:-)

பிரேம்ஜி said...

ஹா ஹா ஹா.. ஓகே ஓகே. வருகைக்கு நன்றி துளசி மேடம்.

thambaan said...

ஆஹா இது சூப்பர்.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தம்பான்.