கமலஹாசன்:மர்மயோகி 7 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதை,ரஹ்மானின் இசையோடு

7வது நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்துடன் கூடிய மர்மயோகி வித்தியாசமான ஒரு முயற்சி.பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகவுள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.அது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இருக்கும் கமல்ஹாசன்,தனது அடுத்த படமான மர்மயோகி பற்றி விளக்கியுள்ளார்.

இது மிகப் பிரமாண்டமான படமாக இருக்கும்.முற்றிலும் வரலாற்று கதை.தசாவதாரத்தை விட இந்தப் படத்தில் இசை முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.

7வது நூற்றாண்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதையின் கரு.

இது வரலாறும்,அறிவியலும் கைகோர்க்கும் படமாக இருக்காது. முற்றிலும் வித்தியாசமான முயற்சி. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.அவரது விருப்பத்திற்கேற்ப இதில் இசையமைக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியின் போது,மர்மயோகி ஒன்லைன் மட்டும்தான் எனக்குத் தெரியும். வித்தியாசமான ஒரு முயற்சி.அதற்கு வித்தியாசமான இசையைத் தரவே முயற்சிக்கிறேன்.இதில் சில புதிய ஒலிகளை அறிமுகப்படுத்த லத்தீன் அமெரிக்க இசைக் கருவிகளை உபயோகிக்கும் திட்டம் உள்ளது.இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றார் அடக்கமாக

ஆரம்பத்தில் பட்ஜெட் ரூ.100 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.இப்போது அதையும் தாண்டிப் போய் விட்டது.இந்திய திரையுலக வரலாற்றில் இது புதிய சாதனை படைக்கும். ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மர்மயோகி குறித்து மீடியாக்களில் நிறைய செய்திகள் வருகின்றன.அவை அனைத்தையும் நான் மறுக்க மாட்டேன், மீடியா நண்பர்களை ஏமாற்ற மாட்டேன்.

மீடியாக்களில்,மும்பையில் பிரமாண்டமான முறையில் தொடக்க விழா இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.உண்மையில் முதலில் அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை.ஆனால் இப்போது மீடியாக்களில் வந்துள்ளதைப் போலவே, பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரமாண்டமான முறையில் மர்மயோகியின் தொடக்க விழா இருக்கும்.

தசாவதாரம் குறித்து இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன.அப்படத்தில் சில தவறுகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்.அதை நான் மறைக்க விரும்பவில்லை.ஆனால் அனைத்து திறமையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்படக் கூடிய ஒன்றுதான் இது.அது எனக்கும் ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.

உண்மையில் இந்தத் தவறுகளை அடுத்து படத்தில் திருத்திக் கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார் கமல்ஹாசன்.

செய்திகள்: தட்ஸ்தமிழ்

6 comments:

thambaan said...

தகவலுக்கு நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தம்பான்.

nithya said...

பிரேம்ஜி
நீங்கள்
எழுதும்
அனைத்து
செய்திகளும்
சிறப்பாக
உள்ளன
நன்றி

SurveySan said...

இனி பில்ட்-அப்பெல்லாம் நம்பரதா இல்லை.
கண்ணால் காண்பது வரை, இதையெல்லாம் கண்டுக்கமாட்டோம் ;)

btw, why not Ilayaraja?
ரஹ்மான் லகான் அளவுக்கு கொடுத்தா நல்லது.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி நித்யா.

வாங்க சர்வேசன்! இந்த தடவை அடக்கி வாசிப்பார் அப்படின்னு நம்புவோம்.இந்திய, சர்வதேச சந்தையில் ரஹ்மான் பெயர் நல்லா விற்பனையாகும் அப்படிங்கறதுக்காக இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

படம் வரும்வரை இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்:)