கனடாவின் ஆயிரம் தீவுகள் - புகைப்பட பயண குறிப்புகள்

கனடாவின் பெரும் நதியான செயின்ட்.லாரன்ஸ்,பிரம்மாண்டமான ஒண்டாரியோ(Lake Ontario)ஏரியில் கலக்கும் இடத்தில் இருக்கிறது ஆயிரம் தீவுகள்(Thousand Islands).ஆயிரம் தீவுகள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் 1793 சிறிய மற்றும் பெரிய தீவுகளை கொண்டது.சிறிய தீவுகள் என்றால் ஒரு மரம் மற்றும் ஒரு வீடு கொண்ட தீவுகள் முதல் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய தீவுகள் வரை உள்ளன.

சிறந்த விடுமுறை வாசஸ்தலமாக உள்ள ஆயிரம் தீவுகள்,நன்னீர் படகு சவாரி செய்ய உலகின் சிறந்த இடமாக கருதப்படுகிறது.விடுமுறையை அமைதியாக,இயற்கையோடு ஒன்றி கழிக்க பெரும்பாலான தீவுகள் விலைக்கு வாங்கப்பட்டு வீடுகள்,மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த ஆயிரம் தீவுகளில் முக்கியமான மற்றும் புகழ் பெற்ற தீவுகள், இடங்களை படகில் சவாரி செய்து பார்த்தோம்.(படங்களை பெரிதாக்க மேலே சொடுக்கவும்).


இது போல்ட் கேசில்(Boldt Castle)எனப்படும் கோட்டை.ஜார்ஜ் போல்ட்(George Boldt)என்ற பெரும் பணக்காரர் தன் காதல் மனைவிக்காக 1900 களில் கட்டிய இந்த கோட்டை,1904 இல் அவர் மனைவி இறந்துவிடவே கட்டிட வேலை அப்படியே நின்று போனது.பின்னர் அரசின் மேற்பார்வையில் தனியார் அமைப்பு பல ஆண்டுகள் கழித்து புதுப்பித்து பார்வையாளர்களுக்கு திறந்து விட்டது.பிரம்மாண்டமான இந்த மாளிகையில் நூலகம்,நீச்சல் குளம் என சகல வசதிகளும் உள்ளன.போல்ட் தன் காதல் மனைவிக்காக கட்டிய கோட்டை அமைந்துள்ள இந்த தீவு இதய வடிவில் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு.இந்த தீவிற்கு பெயரே ஹார்ட் ஐலன்ட்(Heart Island).



போல்ட் கோட்டைக்கு மின்சாரம் வழங்க இந்த சிறிய கோட்டை Generator வசதியுடன் உள்ளது.

ஹார்ட் ஐலண்டை Aerial View இல் பார்க்க புகழ் பெற்ற இந்த படத்தை இணைத்துள்ளேன்.

இந்த வேடிக்கையை பாருங்கள்.இந்த சிறிய பாலம்,உலகின் மிக சிறிய சர்வதேச பாலம் என அழைக்கப்படுகிறது.இடது புறம் உள்ள தீவு அமெரிக்காவை சேர்ந்தது.வலது புறம் உள்ள சிறிய தீவு கனடாவை சேர்ந்தது.இரண்டு நாடுகளையும் இணைக்கிறது இந்த சிறிய பாலம்.






15 comments:

திலக் Raj said...

ஆஹா அருமை பிரேம்ஜி உடனே இந்த இடத்திற்கு போகவேண்டும் போல ஆசையெய் தூண்டுகிறது சிறப்பு..

Sundar said...

Pictures are Very beautiful.Keep Rockin'

thambaan said...

அருமையான புகைப்படங்கள். தெளிவான,சுருக்கமான நடை.இந்த இடத்தை பற்றி புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம்.நன்றி.

வடுவூர் குமார் said...

படங்கள் நன்றாக இருக்கு.

பிரேம்ஜி said...

திலக்!கண்டிப்பா போயிட்டு வாங்க.அருமையான இடம். வருகைக்கு நன்றி.

பிரேம்ஜி said...

Thanks for your visit Sundar.

பாரதிய நவீன இளவரசன் said...

அருமையான புகைப்படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

வீரசுந்தர் said...

அருமையான புகைப்படங்கள். அதிலும் அந்த சர்வதேசக் குட்டிப் பாலம், முற்றிலும் புதிய தகவல்(எனக்கு :-) )!

aneslin85 said...

beautiful photos bro,
thanks for da share

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி தம்பான்,வடுவூர் குமார்.

பிரேம்ஜி said...

வருகைக்கு மிக்க நன்றி பாரதிய நவீன இளவரசன்,வீர சுந்தர்.

Thanks for your visit Aneslin.

mynah said...

Wonderful photographs.
thanks for sharing them

பிரேம்ஜி said...

Thanks Mynah.Thanks for your visit.

Anonymous said...

ஆஹா ....மிகவும் அருமை... நாங்கள் வெஸ்ட் கோஸ்டில் இருக்கிறோம் ...டொரோண்டோ வரும்போது இவ்விடத்திற்கும் போகவேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. thanks for the info ---ஷங்கர்

பிரேம்ஜி said...

ஷங்கர்,ஒ.. அப்படியா.கண்டிப்பா வாங்க.சுற்றி பார்க்க நல்ல இடம்.