
16 நாடுகள் இணைந்து தனி தனியான ஒவ்வொரு பகுதிகளையும் விண் கலங்கள் மூலமாக எடுத்து சென்று பூமியின் சரியான வட்ட பாதையில் நிறுத்தி இணைத்து உருவாக்கப்பட்டுள்ள
356 அடி நீளம் 290 அடி அகலம் கொண்டு 1 ஏக்கர் பரப்பளவில் சூரிய சக்தி கிரகிக்கும் அடுக்குகளை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம்(International Space Station)ஒரு பொறியியல் ஆச்சரியம்.
பூமியிலிருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நிலையம் 1998 கட்ட ஆரம்பிக்கப்பட்டது.2010 இல் கட்டி முடிக்கப்படும்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஆய்வாளர்களின் முக்கியமான பொழுதுபோக்கு அங்கிருந்தது பூமியை பார்த்து கொண்டிருப்பது.45 நிமிடங்களுக்கு ஒரு முறை சூரிய உதயமும், அஸ்தமனமும் மாறி மாறி நிகழும்.
ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில்,ஆய்வாளர்களின் அன்றாட வாழ்க்கையில் உண்பது,உறங்குவது,உடல் பேணுதலும் சிரமமான விஷயங்கள் போலவே தெரிகிறது.
Life in Space Station from Prem Kumar on Vimeo.
சுவாரஸ்யமான விண்வெளி நிலைய வாழ்க்கை வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)

12 comments:
ரொம்ப கஷ்டம் தாங்க. :-))
நல்லாயிருக்கு...
வருகைக்கு நன்றி அரவிந்த்,சின்ன பையன்.
எனக்கும் இந்த விஷயங்களில் இவ்வளவு ஆர்வத்தோடு செயல்படுபவர்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருக்கும். வாழ்த்துக்கள் :):):)
பிரேம்ஜி! முதல் இணைய தளத்துக்குப் போய் குட்நைட் சொல்லி கடைக்கதவ சாத்தலாமுன்னு பார்த்தா இன்னொரு சுவாரஸ்யம். விண்வெளி நிலையத்துக்குப் போறதுக்குத்தான் கொடுப்பினை இல்லை.அந்தக்குறைய நீங்களாவது தீர்த்து வைக்கிறீங்களே!மகராசனா இருங்க!
வாங்க ராப் அவர்களே.நன்றி.
வாங்க நடராஜன்.நாம எல்லாம் இதை பார்த்தாவது சந்தோஷ படுவோம்.
வாவ்.ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.
ஒரு தடவை அங்கபோயி தங்கிட்டுவரணும் போல இருக்கு :D
ஒரேதடியா மேலே போவதற்கு முன்பு இங்கு போய் தங்கிட்டு போனால் நன்றாக இருக்கும். :-))
வாங்க தம்பான். நன்றி.
வாங்க நவீன்.கொஞ்ச நாள்ல அதுவும் சாத்தியமே.
வாங்க குமார்.ஹா ஹா ஹா. நல்லா ரசிச்சேன் உங்க பின்னூட்டத்தை.
பிரேம்ஜி எங்க தான் போய் இதை எல்லாம் எடுக்கறீங்களோ ...
கலக்குறீங்க போங்க...தொடர்ந்து இந்த மாதிரி எங்களுக்கு கொடுத்து புண்ணியம் சேர்த்துக்குங்க :-)
Post a Comment