The Dark Knight திரை விமர்சனம் மற்றும் ஜோக்கரின் ஆளுமை


ஜோக்கர்(Heath Ledger)


பேட்மேன்(Batman) பட வரிசையில் மீண்டுமொரு திரைப்படமாக வெளிவந்துள்ளது தி டார்க் நைட்(The Dark Knight).இது வரை வந்த பேட்மேன் பட வரிசையிலே மிகவும் சீரியஸ் ஆகவும், சிறப்பாகவும் உள்ளது.குற்றங்கள் நடக்கும் போது பேட் மேன் ஆகவும் மற்ற நேரங்களில் பெரும் பணக்காரராக,பேட்மேன் திரைப்படங்களின் கற்பனை நகரமான கோத்தம்(Gotham) நகரத்தில் முக்கியமான மனிதராகவும் இருக்கும் புரூஸ் வைன்(Bruce Wayne),பேட் மேன் வேலைகளை விட்டு விட்டு சாதாரணமாக வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார்.பேட்மேன் பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல்(Christian Bale)நடித்துள்ளார்.ஆனால் இன்னும் நகரத்தில் யாருக்கும் பேட்மேன் யார் என்ற உண்மை தெரியாது.பேட்மேன் யார் என்ற உண்மை தெரிந்தவர்கள் அவரை கவனித்து கொள்ளும் பட்லர் மைகேல் கேயின்(Michael caine)மற்றும் அவர் நிறுவன காப்பாளர் மோர்கன் ப்ரீமன்(Morgan Freeman)மட்டுமே.

இதை பயன்படுத்தி பலர் பேட்மேன் வேடம் அணிந்து கொண்டு அந்த இடத்தை கைப்பற்ற நினைக்கின்றனர்.குற்றங்கள் அதிகரிக்கின்றன.நகரின் காவல்துறை உயர் அதிகாரி கோர்டன்(Gary Oldman),மற்றும் டிஸ்டிரிக்ட் அட்டர்னியாக வரும் ஹார்வி டென்ட்(Aaron Eckhart)இருவரும் இணைந்து கோத்தம் நகரத்தை குற்றமில்லா நகரம் ஆக்க முயல்கிறார்கள்.ஆகவே பேட் மேன் இவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து சுதந்திரமாக விரும்புகிறார்.பெரும் வங்கி கொள்ளை நடக்கிறது.தொடர்ந்து நடைபெறும் பேரங்களும் மாஃபியா கும்பலின் நடவடிக்கைகளும் கோர்டனையும், ஹார்வியையும் எச்சரிக்க,அவர்களை பிடிக்க திட்டமிடுகின்றனர்.

இந்த நேரத்தில் கோத்தம் நகரத்தை தன் வசப்படுத்தவும்,பேட் மேன் யார் என்பதை தெரிந்து கொள்ளவும் வரும் ஜோக்கர்(Heath Ledger) நகர காவல் அதிகாரிகள்,மாபியா கும்பல்கள் மற்றும் பேட்மேன் அனைவரின் கண்களிலும் விரல் விட்டு ஆட்டுகிறார்.எதிரில் வரும் எந்த சிக்கலையும் அடித்து துவம்சம் செய்து அனைவரையும் பீதிக்கு ஆளாக்குகிறார்.வேட்டை ஆரம்பிக்கிறது.பேட்மேன்,கோர்டன்,ஹார்வி அனைவரும் ஜோக்கரை மற்றும் மாஃபியா கும்பலை அழித்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நினைக்கின்றனர்.ஆனால் ஒவ்வொரு முறையும் ஜோக்கர் தப்பித்து செல்கிறார்.முடிவு எதிர்பார்த்த மாதிரியே இருக்கிறது.

படம் முழுவதும் ஜோக்கர் வியாபித்து நிற்கிறார்.இவர் வரும் இரண்டாம் காட்சியிலிருந்து படம் முடியும் வரை மொத்தமாக பார்வையாளர்களை தன் வசம் இழுத்து கொள்கிறார். முகம் முழுவதும் வெள்ளை,கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் பூசி வரும் ஜோக்கர் சிறு கத்தியை கையில் வைத்து கொண்டு,படு ஸ்டைலாக முடியை ஒதுக்கி விட்டு,நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி பேசும் சரியான வசன உச்சரிப்புகள்,மற்றும் உடல் மொழி அசைவுகளில் பின்னிஎடுப்பது என படம் முழுவதும் அதகளம் பண்ணுகிறார்.

இவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் பெரும் கைத்தட்டல் எழுகிறது.நிஜ ஜோக்கர் போல வந்தாலும் வந்த சிறிது நேரத்தில் இவர் செய்யும் காரியங்கள் குறிப்பாக ஒரு மாஃபியா தலைவனின் வாய்க்குள் கத்தியை விட்டு பேசும் வசனங்கள் பார்வையாளர்களை கண்டிப்பாக பதட்டத்திற்கு உள்ளாக்கும்.பென்சிலை மறைய வைக்கிறேன் பார்க்கிறீர்களா என கேட்டு கொண்டே செய்யும் அதிரடியிலாகட்டும்,விருந்தில் உள்ளே புகுந்து "Ladies and Gentlemen,we are the entertainers for the night" என்று படு ஸ்டைலாக வசனம் பேசியபடி கதாநாயகியை மிரட்டுவது,அந்த படு பிரம்மாண்டமான சேசிங் காட்சி,சிறை காட்சிகள்,பின்னர் மருத்துவமனையுள் புகுந்து அதை சிதறடிப்பது என படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார்.தேர்ந்த நடிகர்களான கிறிஸ்டியன் பேல்,மைகேல் கேயின்,மோர்கன் ப்ரீமன்,கேரி ஒல்ட்மன் என அனைவரையும் முந்தி படம் முழுவதும் ஆளுமை செய்கிறார்.சரியான வில்லன்.ஆனால் இந்த நடிகர் சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு முடிந்தபின்,மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அதிகம் சாப்பிட்டதால் இறந்து விட்டார் என்பது சோக செய்தி.இவர் இதற்கு முன் புரோக்பேக் மௌன்டைன்(Brokeback Mountain)என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

படத்தை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலன்(Christopher Nolan),இதற்கு முன் பேட்மேன் பிகின்ஸ்(Batman Begins),மெமெண்டோ(Memento)[இது தான் தமிழ் கஜினியின் ஒரிஜினல் படம்],த பிரஸ்டீஜ்(The Prestige)போன்ற சிறப்பான படங்களை இயக்கியுள்ளார்.முன் பாதி சிறிது மெதுவாகவே மிகுந்த வசனங்களுடன் செல்கிறது.பின் பாதி டாப் கியர்.எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் கண்டிப்பாக படத்தை ரசிக்கலாம்.ஜோக்கருக்காக மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்புகிறேன்.இந்த படத்தின் முதல் ஆறு நிமிட காட்சிகளை இங்கே சென்று பார்க்கலாம். The First Six Minutes of The Dark Knight

14 comments:

ராஜ நடராஜன் said...

நம்ம ஊரு Badmanகளக் கொஞ்சம் கவனிக்க இந்த Batman க்கொஞ்சம் அனுப்பி வையுங்களேன்.ஆட்டோ,பிளேன்னு ஒரு செலவுமில்லாம வந்த வேலைய முடிச்சுட்டுப் போவாருல்ல:)

thambaan said...

சிறப்பான விமர்சனம் பிரேம்ஜி. நன்றி.நானும் இந்த வாரம் பார்க்க இருக்கிறேன்.

பிரேம்ஜி said...

வாங்க நடராசன், நம்ம ஊருக்கு ஒரு பேட் மேன் பத்தாது.

:-)))))

jackiesekar said...

பிரேம் மிக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.அதகளம் செய்யும் நடிகர் இறந்தது வருத்தத்தை அளிக்கின்றது...இருப்பினும் பிரேம் உங்களுக்கு நன்றாக விமர்சனம் எழுத வருகின்றது வாழ்த்துக்கள்

Ramesh Ramalingam said...

I have also seen the film yesterday. It is very nice. But I felt so sad when I read about the the death of Joker. As u said he was brilliant through out the movie.
One request, Please dont explain the story. That may reduce the intrest about the movie. But nice review. Great!!!

Sundar said...

A very Nice Review Premji.We lost an excellent actor.Movie was fantastic. Keep Rockin'

aravind said...

நல்ல விமர்சனம் பிரேம்ஜி.

Mayooresan said...

ஓரே பொறாமையா இருக்குங்க.. இலங்கையில இந்த திரைப்படம் வெளியாகவே இல்லை!

எப்ப வருதோ தெரியாது!

பிரேம்ஜி said...

வாங்க தம்பான்.நன்றி.

வாங்க ஜாக்கி சேகர்.உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

Ramesh,i tried my best to not reveal the story.i will keep your suggestion in my mind.Thanks for your visit.

பிரேம்ஜி said...

Thanks Sundar.

வருகைக்கு நன்றி அரவிந்த்.

வாங்க மயூரேசன்,கூடிய சீக்கிரம் படம் வந்துரும்.:-)

ச்சின்னப் பையன் said...

நல்ல விமர்சனம்....

Hari said...

இப்ப தான் பார்த்துட்டு வரேன். செமத்தியான படம்.ஜோக்கர் சூப்பரு. ஆள் இப்ப இல்லைன்னு தெரிஞ்சதும் வருத்தமாயிருச்சு.

பிரேம்ஜி said...

வாங்க ஹரி.எனக்கும் வருத்தமாச்சு. வருகைக்கு நன்றி.

பிரேம்ஜி said...

நன்றி சின்ன பையன்.