அசத்தும் கால் அவுட்(Kallout)-இணைய தேடல் மேலும் எளிதாகிறது


இணையத்தில் தேடும் போது தேடு பொறி தளத்தில் குறிச்சொல் கொடுத்து வரும் பல விதமான முடிவுகளில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து அந்த தளங்களுக்கு சென்று நமக்கான சரியான பதில் கிடைக்கிறதா என்று தேடுகிறோம்.

அவ்வாறாக இல்லாமல் கால் அவுட் மென்பொருள் நிறுவுவதன் மூலம் இணைய பக்கத்திலோ,ஆபீஸ் வேர்ட் பக்கத்தில்,எக்ஸ்செல் பக்கத்தில்,நோட் பேட் பக்கத்தில் என எங்கு வார்த்தை இருந்தாலும் அதை சுட்டியால் தேர்வு செய்துவிட்டால் அந்த வார்த்தையே தேடவேண்டிய குறிச்சொல்லாக கருதப்பட்டு வலது பக்கம் சிறிய விண்டோ அல்லது Palette திறந்து அந்த வார்த்தைக்கு உரிய கூகிள் தேடல்,யாஹூ தேடல்,விக்கி தேடல்,டிக்சனரி தேடல்,அமேசான் தேடல்,ஈபே தேடல்,கூகிள் ஃபைனான்ஸ்,மற்றும் படங்களில் ஃபிளிக்ர் மற்றும் கூகிள் இமேஜஸ்,யூடியுப்,கூகிள் மேப்ஸ் தேடல் என அந்த ஒரு குறி சொல்லுக்கு பல்வேறு தேடல் முடிவுகளை ஒரு சிறிய விண்டோவில் காண்பிக்கிறது.

அந்த தளங்களுக்கு உலாவியில் சென்று உள்ளீடு கொடுத்து தேட வேண்டிய அவசியமில்லாமல் சாதாரணமாக வார்த்தையை தேர்ந்தெடுத்து வேண்டிய முடிவுகளை வெகு விரைவில் பெறமுடிகிறது. பதிவின் முடிவில் வரும் படக்காட்சி மேலும் விளக்கமாக சொல்கிறது.

கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி கால் அவுட் மென்பொருளை தரவிறக்கம் செய்யலாம்.

Kallout

என் வீட்டில் கால் அவுட் சிறப்பாக வேலை செய்தாலும்,அலுவலகத்தில் ப்ராக்சி சர்வர் உபயோகிப்பதன் காரணமாக கால் அவுட் வேலை செய்யவில்லை என கால் அவுட் மென்பொருள் நிறுவன தலைவர் லீ லோரன்சன்(Lee Lorenzen)க்கு நேற்று தொலை பேசியில் கூறினேன்.அவர்,இந்த குறையை தற்போது அவரது தொழில் நுட்ப குழு சரி செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் வெளி வரும் அடுத்த பதிப்பில் இது முழுமையாக சரி செய்யப்படும் என கூறினார்.


Kallout from Prem Kumar on Vimeo.

9 comments:

ராஜ நடராஜன் said...

நான் முதல் போட்டுக்கறேன்.

பிரேம்ஜி said...

வாங்க நடராஜன்.வாங்க.

ச்சின்னப் பையன் said...

நானும் பாத்துட்டு சொல்றேன்....

varun said...

Safari Browserலும் இந்தவழி உள்ளது

பிரேம்ஜி said...

வாங்க சின்னபையன்.

விஜய் ஆனந்த் said...

நல்லா இருக்கு...:-)))...

rapp said...

ரொம்ப நன்றிங்க பிரேம்ஜி, ஏ பார் ஆப்பிள் தொடருக்கு தயாராகிட்டீங்களா? ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கோம் :):):)

பிரேம்ஜி said...

வாங்க வருண், தகவலுக்கு நன்றி. இது முழுக்க விண்டோஸ் இயங்கு தளத்திற்க்கானது.

வருகைக்கு நன்றி விஜய் ஆனந்த்.

வாங்க வாங்க ராப் அவர்களே. தயாராகிட்டே இருக்கேன்.ஆனா தான் கூப்பிட போறதா சங்க துணை செயலாளர் சொன்னாரே?? சரி இருக்கட்டும்.

thambaan said...

இது மிகவும் உதவியாக இருக்கிறது பிரேம்ஜி.பகிர்ந்தமைக்கு நன்றி.