இப்போதெல்லாம் அனைவரும் நிறையவே புகைப்படங்கள் எடுக்கிறோம்.அதில் சிறப்பான புகைப்படங்களை கணினியில் மட்டும் பார்த்து கொள்ளாமல்,அவற்றை ஒன்று சேர்த்து Slideshow செய்து DVD அல்லது CD யில் பதிந்து தொலைக்காட்சி பெட்டியின் மூலம் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் வரவேற்பறையில் காட்டும் வழி முறை பற்றி நண்பர் நடராஜன் கேட்டிருந்தார்.
Photostage எனும் ஒரு எளிய மென்பொருள் மூலம் இதை செய்யலாம்.இந்த மென்பொருள் மூலம் மிக எளிதாக நாம் எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து Slideshow செய்து அதை DVD அல்லது CD யில் பதிந்து கொள்ளலாம்.மேலும் மெருகூட்ட நமக்கு பிடித்த பின்னணி இசையை சேர்க்கலாம்.Slideshow வில் ஒவ்வொரு படத்திற்கும் அந்த பட சம்பந்தமான விவரங்களை Caption மூலம் கொடுக்கலாம்.உங்கள் குரலிலேயே படங்களுக்கு வர்ணனை செய்து பதிவு செய்யலாம்.இது ஒரு இலவச மென்பொருள்.
இதை விடவும் சிறப்பான மென்பொருள்கள் இருந்தாலும் Photostage பயனர்களுக்கு உபயோகிக்க எளிதானது.Photostage மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
Photostage
சிறிய உதாரணமாக எனது சில புகைப்படங்களை Photostage மூலம் பின்னணி இசை மற்றும் Caption சேர்த்து Slideshow செய்தேன்.
Slideshow from Prem Kumar on Vimeo.
புகைப்படங்களை Slideshow செய்து DVD/CD யில் பதிய...
Subscribe to:
Post Comments (Atom)

20 comments:
Thanks Premji.Seems to be a nice software.I am gonna use this.Keep Rockin'
நன்றாக இருக்கு.
பிரேம்ஜி தகவலுக்கு நன்றி.போட்டோஸ்டேஜ் வரைக்கும் போயிட்டு திரும்ப வருகிறேன்.
பிரேம்ஜி.அடோப் க்கு மாற்றுத் தளம் கொடுத்திருக்கிறீர்கள்.நன்றி.எடுத்த போட்டோவை அடோப் போட்டோஷாப்க்குக் கொண்டுபோய் பின் தயாரிப்பு செய்து பின் அதனை அடுத்த மாற்றப் பரிணாமங்கள் செய்து பின் பிரிமியருக்குத் தள்ளிகிட்டுப்போய் என்கோர்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிறதுக்குள்ள வாங்குற மூச்சு மற்றும் முதுகுவலிக்கு மாற்று வழி சொன்னதுக்கு மீண்டும் ஒரு நன்றி.
பயனுள்ள தகவலுக்கு நன்றி. நானும் டவுண்லோட் செய்துள்ளேன். இனி தான் முயற்சித்து பார்க்க வேண்டும். நன்றி.
I saw your post in tamilish.com.
பன்மொழி சாத்திரங்கள் தமிழில் வர வேண்டும் என்றான் பாரதி. தொழில் நுட்பம் தொடர்பாக பதிவு போட்டதற்கு நன்றி.
கதை கவிதைகளை விட இணையத்தில் இது போன்ற பதிவுகள் தான் தேவை.
இது போன்ற பதிவுகள் எழுத இணையத்தில் ஆட்கள் குறைவாக உள்ளார்கள். என்னை போன்ற ஆங்கிலமும். தமிழும் முழுமையாக தெரியாத வாசாகர்களுக்கு இது போன்ற தொழில் நுட்பம் தொடர்பான பதிவுகள் தமிழில் தேவைப்படுகின்றன. இந்த பதிவருக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.
இதை போன்ற பதிவுகள் எழுதுங்கள். வாழும் காலத்தில் இது போன்ற தொழில் நுட்பம் சம்பந்தமான விசயங்களை வருங்கால சந்ததியினர் தமிழில் வாசிக்க விட்டு செல்லலாமே. நன்றி.
என்னது தமிழிஷ் டாட் காம் வரைக்கும் கூட உங்கள் பதிவின் வீச்சு உள்ளதா?மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thanks Sundar.
வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.
வாங்க நடராஜன்.அடோபி அளவுக்கு பெரிய மென்பொருளா இது இல்லாவிட்டாலும் எளிதாக நமக்கு தேவையான வேலையை முடித்து கொள்ளலாம்.நன்றி.
many thanks..by any chance, does any one of you know a equivalent software for iMac ?
ரொம்ப உபயோகமுள்ளப் பதிவு, தரவிறக்கம் செய்யவும் உதவியுள்ளீர்கள் நன்றி
வருகைக்கு மிக்க நன்றி தமிழ் சினிமா.
வருக அகிலா அவர்களே.உங்கள் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி. நிச்சயம் எனக்கு தெரிந்தவரை இது போல எழுத முயற்சிக்கிறேன்.அடிக்கடி வருகை தாருங்கள்.
நன்றி நண்பர் நடராஜன் அவர்களே.
Thanks for your Viji. I will try to find out.
வருகைக்கு நன்றி ராப்.
உபயோகித்தும் பார்த்தேன்.சிறப்பான மென்பொருள்.மிக்க நன்றி.
வாருங்கள் தம்பான்.நன்றி.
ரொம்ப நாளா இதுமாதிரி ஒரு மென்பொருள் தேடிகொண்டிருந்தேன்.ரொம்ப நன்றி பிரேம்ஜி.
Very useful info. Thank you!
வருக அரவிந்த். நன்றி.
Thanks for your visit Sundara Vadivel.
thank u.............
Thanks for your visit Ramana
Post a Comment