பெய் ஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 200மீ ஓட்ட போட்டியில்,
யுசைன் போல்ட் 12 வருடங்களாக மைக்கேல் ஜான்சன் தக்க வைத்திருந்த சாதனையை முறியடித்து 19.30 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.மைக்கேல் ஜான்சன் 19.32 வினாடிகளில் கடந்திருந்தார்.முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் 100மீ பந்தயத்தில் ஒரு உலக சாதனை செய்தார் போல்ட்.அந்த பந்தயம் போலவே இந்த 200மீ பந்தயத்திலும் போட்டோ ஃபினிஷ் என்ற பேச்சுக்கே இடமின்றி மற்ற போட்டியாளர்களுக்கு வெகு முன்னரே வெற்றி கோட்டை கடந்தபோது போட்டி நடை பெற்ற பறவை கூடு அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.
யுசைன் போல்ட் 200 மீ உலக சாதனை from பிரேம்ஜி on Vimeo.
சிறப்பு ஒலிம்பிக் வீடியோ:யுசைன் போல்ட் 200 மீ போட்டியில் மீண்டுமொரு உலக சாதனை
Labels: ஒலிம்பிக், நிகழ்வுகள், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)

9 comments:
அடங்கொய்யாலே! இவர் மனிதன் தானா..இந்த ஓட்டம் ஓடுறாரு..
ஸ்லொவ் மோஷன் ல கூட வேகமாக ஓடுவாரு போல :-)))))
தாறு மாறு ஓட்டம்..வாழ்த்துக்கள் உசைன் :-)
பிரேம்ஜி ஸ்லொவ் மோஷன் வீடியோ இருந்தால் கொடுங்கள்
வாங்க கிரி!யுசைன் போல்ட் வேகத்தில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி.போட்டி நடைபெற்று சில மணி நேரங்களே ஆகிறது.விரிவான வீடியோ தேடிக்கொண்டிருக்கிறேன். விரைவில் தர முயல்கிறேன். போல்ட் 100 மீ போட்டியில் சாதித்ததை மற்றொரு பதிவில் தந்துள்ளேன். அதையும் பாருங்கள்.
//போல்ட் 100 மீ போட்டியில் சாதித்ததை மற்றொரு பதிவில் தந்துள்ளேன். அதையும் பாருங்கள்.//
அதை அப்பவே பார்த்து பின்னூட்டமும் இட்டு விட்டேன் :-)
இந்த 200 மீட்டர் ஓட்டத்துல சைடு ல இவங்க ஓட்டத்தை எடுக்கிற கேமரா டிராலியே மெதுவாக சென்று பின் அவர் இல்ல அவங்க ஓட்டத்தை பார்த்து சுதாரிச்சு வேகமாக போகிறது ஹா ஹா ஹா
வீடியோ பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. திறமையான வீரர்.
ஸ்லோ மோஷன் வீடியோக்காக - மீ த வெயிட்டிங்...
அட்டகாசம்.
நம்ம மைக்கேல் ஜான்ஸனுக்கு அடுத்தபடி இவர் ஓட்டத்தைத்தான் ரொம்ப ரசிச்சேன்.
நம்மூர் டிவியில் காட்டுனப்ப மிஸ் பண்ணிட்டேங்க. அர்த்தராத்திரியாப் போயிருச்சு.
இங்கே போட்டதுக்கு நன்றி.
முந்தி 1996 லே ஜான்ஸன் கூட ஓடுனவர் நம்ம பக்கத்துவீட்டுப் பையன். ஹீட்டுலே போயிருச்சு.
அப்ப இங்கே ஒலிம்பிக்ஸ்லே கலந்துக்கிடற ஆளுகளுக்கு எப்படியெல்லாம் மரியாதையும் ஸ்பான்ஸார்ஷிப் கிடைச்சதுங்கறதையும் பார்த்து பிரமிச்சிருக்கேன்.
நண்பா! உங்கள் ஆக்கங்களை இந்த kelvi.net புதிய இணையத்திலும் பகிர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவமுடியுமா?
வருகைக்கு நன்றி மாசிலா.
வாங்க சின்ன பையன்.கண்டிப்பாக தேடி தருகிறேன்.
கிரி!மீண்டும் வந்ததற்கு நன்றி. இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் கேட்ட வீடியோ பதிவிடுகிறேன்.
வாங்க துளசி மேடம்.நன்றி. மைக்கேல் ஜான்சனோடு போட்டியிட்டவர் உங்க பக்கத்து வீட்டு பையன் அப்படிங்கறதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி.
வாங்க HS.மிக்க நன்றி.நிச்சயம் செய்கிறேன்.எப்படி செய்வது என்று கூறுங்கள்.
Post a Comment