மூன்று நாட்களுக்கு முன்பு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் 100 மீ ஓட்ட பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த யுசைன் போல்ட்(Usain Bolt)பந்தய தூரத்தை 9.69 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்து உலகின் மிக வேகமான மனிதன் என்ற பெயரை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் மிகவும் எதிர் பார்க்கப்படும் போட்டிகளில் முக்கியமானது 100 மீ ஓட்ட பந்தயம்.1988 சியோல் ஒலிம்பிக்கிலிருந்து ஆர்வத்துடன் இதை கவனித்து வருகிறேன்.இதற்கு முன்பு கடந்த மே மாதம் இவர் 9.72 வினாடிகளில் 100 மீ தூரத்தை கடந்துள்ளார்.இப்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 100 மீ போட்டிகளில் குறைந்த பட்ச நேரம் ஆக 10.65 வினாடிகளில் கடக்கப்பட்ட 100 மீ தூரம் இப்போது 9.69 வினாடிகளில் கடக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 100 மீ பந்தயங்களில் போட்டோ பினிஷ்(Photo Finish) இருக்கும்.அதாவது போட்டியாளர்கள் அதிகம் பேர் 100 மீ வெற்றி கோட்டினை தொடும்போது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முடிப்பது போல் இருக்கும்.ஆனால்,இந்த போட்டியில் யுசைன் அருகில் கூட வரமுடியவில்லை.போட்டியின் முடிவில் யுசைன் கைகளை கீழே வீசாமல் முயற்சித்திருந்தால் இன்னும் குறைந்த நேரத்தில் ஓடியிருக்கலாம் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகிறார்கள்.நீண்ட தேடலுக்கு பின்னரே இந்த வீடியோ கிடைத்தது.
உலகின் மிக வேகமான மனிதன் from பிரேம்ஜி on Vimeo.
சிறப்பு ஒலிம்பிக் வீடியோ:உலகின் மிக வேகமான மனிதன்
Labels: ஒலிம்பிக், நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
Thanks Premji.I was expecting this from you.Keep Rockin'
Sundar! Thanks for the quick comment.
ஓ.. சூப்பர்....
அப்போ அலுவலக வேலையை விட்டுட்டு இதைத்தான் ரொம்ப நேரமா தேடிட்டிருந்தீங்களோ?...:-))
மனச தொட்டு சொல்லுங்க. நம்ம டாக்டர் இதை விட வேகமா ஓடமாட்டாரு????
:-)))...
// போட்டியின் முடிவில் யுசைன் கைகளை கீழே வீசாமல் முயற்சித்திருந்தால் இன்னும் குறைந்த நேரத்தில் ஓடியிருக்கலாம் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகிறார்கள். //
நா கூட நெனச்சேங்க...
:-)))...
// போட்டியின் முடிவில் யுசைன் கைகளை கீழே வீசாமல் முயற்சித்திருந்தால் இன்னும் குறைந்த நேரத்தில் ஓடியிருக்கலாம் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகிறார்கள். //
நா கூட நெனச்சேங்க...
வாங்க சின்ன பையன். ஹி ஹி ..
//மனச தொட்டு சொல்லுங்க. நம்ம டாக்டர் இதை விட வேகமா ஓடமாட்டாரு????//
அவ்வ்வ்வ்வ்வ்வ்...
நன்றி விஜய் ஆனந்த்.
செமத்தியான வீடியோ.ரொம்ப நன்றி.
super :-)
நன்றி தம்பான்.
நன்றி கிரி.
Post a Comment