சிங் இஸ் கிங்:மன்மோகன் சிங்கை வைத்து ஒரு வீடியோ விளையாட்டு


சமீபத்தில் வீடியோ விளையாட்டுகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் இணைய தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிங் இஸ் கிங்(Singh is King)விளையாட்டு பரவலாக புகழ் பெற்றுள்ளது. சிங் இஸ் கிங் என்பது சமீபத்தில் வெளிவந்த ஹிந்தி திரைப்படம். நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் வெற்றி பெற்றபோது சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சிங் இஸ் கிங் என நகைச்சுவையாக குறிப்பிட்டன.

இந்த விளையாட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்க்க காத்திருக்கும் எம்.பி க்கள், நாட்டின் பண வீக்கம்,பெட்ரோல்-டீசல் விலை உயர்வு,விவசாயிகள் பிரச்சினை,அணு சக்தி ஒப்பந்தம்,இடது சாரிகள்,பங்கு சந்தை என பல தடைகளை தாண்ட வைத்தால் பிரதமர் பதவியை தக்க வைக்க முடியும் என அமைத்துள்ளார்கள்.விளையாடும் முறை சுலபமானது. விளையாட்டு சில முறை விளையாடினால் எளிதாகும்.அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி கொஞ்சம் புன்முறுவலுடன் விளையாடலாம் அல்லது அதற்கும் கீழே உள்ள தொடுப்பில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: முதல் 20 வினாடிகளுக்கு வரும் விளம்பரத்திற்கு பிறகு விளையாட்டு ஆரம்பிக்கும்.

விளையாட
Singh is King

தரவிறக்கம் செய்ய
Singh is King

நன்றி:Games2win

8 comments:

Ramya Ramani said...

நல்லா Interestingah இருக்கு :)

Sundar said...

Ha Ha Ha.. Good one.I enjoyed this game.Keep Rockin'

ராஜ நடராஜன் said...

வணக்கம் பிரேம்ஜி.வந்து விட்டுப் போகிறேன்.சிங்குடன் அப்புறம் விளையாண்டு பார்க்கிறேன்:)

பிரேம்ஜி said...

வாங்க ரம்யா ரமணி. வருகைக்கு நன்றி.

Thanks Sundar.

வருகைக்கு நன்றி நடராஜன்.

aravind said...

ஒரு வழியா மன்மோகன் சிங் பதவியை காப்பாத்தி குடுத்திட்டேன்.

ச்சின்னப் பையன் said...

:-)))))

பிரேம்ஜி said...

அப்படியா அரவிந்த் கலக்குங்க.

வருகைக்கு நன்றி சின்ன பையன்.

thambaan said...

ஜாலியான விளையாட்டு.நன்றி.