கூகிளை உருவாக்கிய லாரி பேஜ்(Larry Page),செர்ஜி பிரின்(Sergey Brin)இருவரும்
1996 இல் ஸ்டான் ஃபோர்ட் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து கொண்டிருக்கும் போது துவங்கிய டிஜிட்டல் லைப்ரரி ப்ராஜெக்ட்(Digital Library Project)என்பதே பின்னாளில் கூகிள் தேடு பொறியானது.இந்த திட்டத்தின் போது அவர்களுக்கு தகவல்களை சேகரித்து வைக்க அதிகமான நினைவகம் தேவைப்பட்டது.அந்த கால கட்டத்தில் மிக அதிக நினைவகமாக கருதப்பட்டது 4GB ஹார்ட் டிஸ்க்களே.ஆகவே லாரியும்,செர்ஜியும் பத்து 4GB நினைவகங்களை வாங்கி அவற்றை ஒன்று சேர்த்து 40GB நினைவகம் ஆக்கினர்.LEGO எனப்படும் குழந்தைகள் பொம்மை கட்டிடங்கள் செய்து விளையாடும் பிளாஸ்டிக் கட்டுகளை கொண்டு அவற்றை பெட்டி போல் செய்தனர்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கூகிள் ஆரம்பித்த புதிதில் கூட அவர்களுக்கு டெர்ரா பைட் நினைவகம் தேவைப்பட்டது. அவற்றை வாங்க அப்போது நண்பர்கள் தான் பொருளுதவி செய்தனர்.
பின்னாளில் கூகிள் தோன்றிய பிறகு அந்த பழைய LEGO நினைவகம் பல்கலையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.இது அந்த நினைவகம்..

லாரி,செர்ஜி உபயோகித்த கணினிகள் 
செய்தி:
Google's First Data Storage
கூகுளின் முதல் தகவல் நினைவக பெட்டகம்(Data Storage)-மியூசியத்திலிருந்து
Labels: கணினி, தொழில் நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

14 comments:
கலக்குறேள் போங்கோ.. நிரந்தர வாசகன் ஆகி விட்டேன்
கலக்குறேள் போங்கோ.. நிரந்தர வாசகன் ஆகி விட்டேன்...:-)
பிரேம்ஜி சார், இனிமே நான் கொஞ்சம் கூட கணினி, இணையம் என்று எதையும் நானா தெரிஞ்சிக்க முயற்சி பண்ணப் போறதில்லை. நீங்கதான் எங்களுக்கெல்லாம் சேர்த்து வெச்சு ஒரு பதிவை தினமும் போடறீங்களே :):):)
// ச்சின்னப் பையன் said...
கலக்குறேள் போங்கோ.. நிரந்தர வாசகன் ஆகி விட்டேன்...:-) //
// rapp said...
பிரேம்ஜி சார், இனிமே நான் கொஞ்சம் கூட கணினி, இணையம் என்று எதையும் நானா தெரிஞ்சிக்க முயற்சி பண்ணப் போறதில்லை. நீங்கதான் எங்களுக்கெல்லாம் சேர்த்து வெச்சு ஒரு பதிவை தினமும் போடறீங்களே :):):) //
டபுள் ரிப்பீட்டேய்!!!!
மற்றவர்கள் எழுதி இருப்பது முற்றிலும் உண்மை. கலக்கறீங்க!
அனானி நண்பரே.உங்கள் தொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி.பெயரை சொல்லியிருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
ஐந்துபேர் முந்திகிட்டாங்களா:)நான் இன்னும் மதுபானக்கடையிலேயே முங்கிட்டு இருக்கேன்:)
பதிவுலகத்தில் கூகுளை ஆண்டவர் எனச் சொல்லும் இச் சமயத்தில் அதன் நதி மூலம் ரிஷி மூலம் பற்றிய தகவலுக்கு நன்றி
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
என் பதிவு நண்பர்கள் சின்ன பையன், ராப் அவர்கள்,விஜய் ஆனந்த், கயல்விழி,ராஜ நடராஜன் அவர்கள், கோவை விஜய் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் தொடர்ந்த வருகை என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி பிரேம்ஜி.
கலக்கல்தான்
வருகைக்கு நன்றி தம்பான், நன்றி சுபாஷ்.
அருமை
இன்னும் நிறைய எதிர்பார்த்து
http://loosupaya.blogspot.com
நிரந்தர வாசகன் ஆகி விட்டேன்
Post a Comment