சென்னை-சிகாகோ,மும்பை விமான நிலையம் மற்றும் உறைய வைத்த பனிப்புயல்

இரு வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சிகாகோ செல்லும் போது நடுவில் சிறிது நேரம் மும்பை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது.தாக்குதல்களுக்கு பிறகு ஒரு அமைதியான காலை நேரத்தில் மும்பை விமான நிலையம்.



சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருந்து விட்டு சிகாகோ வந்தடைந்தபோது விமான நிலையத்தில் வெப்பநிலை உறைபனிக்கு கீழே மைனஸ் - 10 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.அங்கிருந்து 200 கி மீ தொலைவில் இருக்கும் எங்கள் நகரத்தை அடைந்தபொழுது வெப்பநிலை மைனஸ் -15 டிகிரி செல்சியஸ்.அடுத்த நாள் பனிப்புயல் அடிக்கபோவதாக வானிலை அறிவிப்பு சொன்னது.நியூ ஜெர்சி மாகாணத்தில் பலமுறை பனித்துகள் வீழ்வை பார்த்திருந்தாலும்,வேலை மாற்றல் காரணமாய் இல்லனாய் மாகாணத்திற்கு வந்த பிறகு இந்த கொடுமையான பனிப்புயல் (Ice Storm)பார்ப்பது இதுவே முதல் தடவை.


மிக மிக குளிர்ந்த காற்று பரப்பிற்கு மேலே உள்ள வெம்மையான மேகம் மழை பொழியும் போது மழை துளிகள் அதி குளிர்விக்கப் படுகின்றன(Super Cooling).அதி குளிர்விப்பு என்றால் உறைபனிக்கு கீழான வெப்ப நிலையிலும் திரவத்தை(நீர்) கெட்டியாக்காமல் திரவ நிலையிலேயே வைத்திருப்பது.அப்படி அதி குளிர்விக்கப்பட்ட பனி மழை துளிகள் பூமியை வந்தடைந்து தரையின் மீது,பொருட்களின் மீது விழும்போது அப்படியே பனிக்கட்டிகளாக உறைந்து போகும்.இதுவே பனிப்புயல் எனப்படுகிறது.இப்படி பனி மழை துளிகள் பனிக்கட்டிகளாக உறைந்து சாலைகள்,மரங்கள்,மின் கம்பங்கள் அனைத்தும் பனிக்கட்டி அடுக்குகளால் மூடப்பட்டுவிடும்.

வாகனங்கள் செல்ல முடியாமல்,மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே தரைபரப்பு கடுமையாக வழுக்கி விடும்.பனிக்கட்டி அடுக்குகளால் போர்த்தப்பட்ட மரங்கள் அவற்றின் பாரம் தாங்காமல் உடைந்து வீழும்.மின் கம்பங்கள் சேதமாகும்.இவற்றோடு குளிர் காற்று வீசும் போது வெப்பநிலை மிக குறைந்து போகும்.பனிப்புயல் மிக கடுமையானது.

இரண்டு நாட்கள் நீடித்தது.சற்றே சிரமப்பட்டு பனிப்புயலின் போது,அதற்கு பின்னர் சில ஒளிப்படங்களை எடுத்தேன்.அடுத்த நாள் காலை மெதுவாக வீட்டிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தேன்.மிக மிக கடுமையான குளிர் முகத்தில் அறைந்தது.உள்ளே வந்து Weather.com வெப்பநிலை பார்த்தேன்.உறைபனிக்கு கீழே மைனஸ் - 20 டிகிரி செல்சியஸ்.என் முகத்தில் அறைந்த காற்றின் வெப்பநிலை மைனஸ் -29 டிகிரி செல்சியஸ்.நண்பர் ஹனுமந்தராவ் சொன்னார் "இல்லனாய் மாகாணத்திற்கு வருக.அடுத்த வாரம் தான் குளிர்காலமே ஆரம்பிக்கப் போகிறது"








பனிப்புயல் முடிந்து சூரியன் தோன்றிய போது


மரங்களின் மேல் பனிக்கட்டி அடுக்குகள்



25 comments:

யாத்ரீகன் said...

அற்புதமான புகைப்படங்கள்

Hanu said...

Nice Pictures...

chinnappaiyan said...

சென்னையில் 34 டிகிரி. இப்போ உங்க இடத்துலே -29ன்றீங்க. வித்தியாசம் என்ன 34 - 29 வெறும் 5டிகிரிதானே.. அதுக்குப் போய் இப்படி புலம்பறீங்களே!!!!

பிரேம்ஜி said...

நன்றி யாத்ரீகன்

பிரேம்ஜி said...

Thanks Hanu.

வாங்க ச்சின்னப்பையன்,

//சென்னையில் 34 டிகிரி. இப்போ உங்க இடத்துலே -29ன்றீங்க. வித்தியாசம் என்ன 34 - 29 வெறும் 5டிகிரிதானே.. அதுக்குப் போய் இப்படி புலம்பறீங்களே!!!!//

முடியல....

Anonymous said...

Bloomington-le SFI building mathiri theriyuthu

Chinnavan

ச.இலங்கேஸ்வரன் said...

ம் நல்ல படங்கள். தங்களின் குளிர் அனுபவங்களை கேட்டால் வெளிநாட்டிற்கு வர இருக்கும் எனக்கு பேசாமல் அதை மறந்துவிடலாம்போல் உள்ளது.

திலக் Raj said...

brilliant photos premji keep rockin man!!!

Anonymous said...

anne ethana thadava vilunthu elumbininga? nadakum pothu romba kashdapattu irupingale.

Anonymous said...

nice photos..me too in chicago

பிரேம்ஜி said...

வாங்க சின்னவன்,

அதே தான்.நீங்க எங்க இருக்கீங்க?

வருக இலங்கேஸ்வரன்,

அதெல்லாம் சமாளித்துவிடலாம்.தைரியமாக வாருங்கள். நாங்கள் இத்தனை இங்கே இருக்கிறோம் அல்லவா?

கிரி said...

ஆஹா! பிரேம்ஜி வந்துட்டீங்களா! எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளா ஆளை காணோம் :-)

படங்கள் அருமையா இருக்கு. இவ்வளோ குளிருல நான் இருந்தேன்..எனக்கு சங்கு தான்.

பிரேம்ஜி said...

Thilak,

Thanks,

வருக அனானி நண்பரே,

இதுவரை விழவில்லை. அந்த சூழ்நிலையில் நடப்பது இயலாத காரியம்.

Thanks for your visit chicago anani.

வாங்க கிரி,

வந்துட்டேன். சில பல அலுவல்கள் இருந்ததால பதிவுகள் பக்கம் வரமுடியலை. இனி வருகிறேன். அந்த குளிருக்கும் ஒன்றும் ஆகாது.

நானானி said...

படங்கள் அருமையிலும் அருமை!!!
பென்சில் ஸ்கெட்ச் போல் பனியும் மரங்களும் அற்புதம்! சூரிய ஒளியில் வைரங்களாக மின்னும் பனி கண்களுக்கு விருந்து. மொத்தத்தில் எங்களுக்கு காணக்கிடைக்காத காட்சிகள்!!!!

இராம்/Raam said...

Gosh....

All pictures are awesome... :)

ராஜ நடராஜன் said...

பிரேம்ஜி!எப்படி இருக்கீங்க?பதிவைக் கண்டதில் மகிழ்ச்சி.

தாமிரா said...

அனுபவம் பிரமிக்க வைக்கிறது. படங்கள் அற்புதம், அதுவும் பழங்களை பனிக்கட்டி மூடியிருக்கும் படங்கள் கொள்ளை அழகு.

பிரேம்ஜி said...

வருக நானானி மேடம்,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ராம்,

Thanks for your visit.

வாங்க ராஜநடராஜன் சார்,

நல்லா இருக்கேன்.நிறைய அலுவல்கள் இருந்ததால பதிவுகள் பக்கம் வரமுடியலை.இனிமேல் பதிவுகளில் பங்கு கொள்கிறேன்.

வாருங்கள் தாமிரா அவர்களே,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

wow very nice pics which i have never see in this world
guess me

பிரேம்ஜி said...

//wow very nice pics which i have never see in this world
guess me//

Thanks a lot.I guessed you :-)

CVR said...

Really cool pics :)

பிரேம்ஜி said...

CVR,

Thanks a lot for your appreciation :-)

FloraiPuyal said...

நூஜெர்சி எல்லாம் ரொம்ப குளிர் இல்ல. அலாஸ்காவுல தான் கொஞ்சம் குளிரும். பயப்படாதீங்க.
நல்லா பச்சத் தண்ணில தலைக்குக் குளிச்சிட்டு போங்க. மெதுவா ஆழமா மூச்சு விடுங்க. குளிர் தெரியாது. நான் இன்னை வரைக்கும் அரைக்கால் சட்டைல தான் சுத்திகிட்டிருக்கேன்.

மற்றபடி.. படங்கள் அருமை. அதிலயும் ரெண்டாவது. வாழ்த்துக்கள்.

nathas said...

The frozen crab apple looks awesome.

Nice Shots !!!

துளசி கோபால் said...

இந்த பனி அப்படியே விழும்போது ஆபத்து அவ்வளவா இல்லை. கொஞ்சம் வெய்யில்வந்து உருக ஆரம்பிச்சால்தான் ப்ளாக் ஐஸ். ஒருமுறை கார் அப்படியே வழுக்கி எதிரில் இருந்த சுவரில் இடிச்சு கார் & சுவர் டேமேஜ் பண்ணிட்டேன்.

படங்கள் அழகா அற்புதமா இருக்கு. கோபால் போனமாசம் கனடா வந்துருந்தார். மைனஸ் 29 அப்போ. படங்கள் எடுத்து அனுப்புனார்.

ஒவ்வொரு விமானமும் டேக் ஆஃப்க்கு முன்னே பயணிகளோடு ஒரு ஷெட்டுக்குள் புகுந்து எண்ணெய் தேச்சுக் குளிச்சுட்டுப் புறப்பட்டதாம்:-)

இன்னும் ரெண்டுமாசம் எங்களுக்கு வெய்யில் உண்டு. இன்று 24.