ஸ்ரீரங்கத்து தேவதை மறைந்தது

சுஜாதாவின் எழுத்துக்களில் எனக்கு முதலில் பரிச்சயமானது ஸ்ரீரங்கத்து தேவதைகள்.அதன் பின் அவரின் எல்லா எழுத்துக்களையும் தேடி தேடி படித்திருக்கிறேன். இன்னமும் மீண்டும் மீண்டும் படித்துகொண்டுள்ளேன். நேற்று "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" மீண்டும் படித்துக்கொண்டிருந்த போது கூட இது போல ஒரு செய்தி வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
மீண்டும் கற்றதும் பெற்றதும் தொடர் எழுதுவார் என்றே எதிர்பார்த்திருந்தேன்.

நகரம், அரிசி,நிஜத்தை தேடி,நைலான் கயிறு, பிலிமொத்சவ் போன்ற அவரின் சிறுகதைகளை படித்தால் பல நாட்கள் அந்த பாதிப்பு தொடரும். கல்லூரியில் படிக்கும் போது அடிப்படை அறிவியலில் சில புரியாத விஷயங்களை அவரின் விஞ்ஞான கட்டுரைகளை படித்து புரிந்து கொண்டதுண்டு. ஜன ரஞ்சக எழுத்துகளிலும் வித்தை காண்பித்தவர். விகடன் ஆசிரியரின் சவாலுக்கு ஒப்புக்கொண்டு "ஆ" என்ற தொடர்கதையை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் "ஆ" என்று முடித்தார். மின்னணு வாக்கு பெட்டி உருவாக்கத்தில் பணியாற்றியவர்.

சில வருடங்களுக்கு முன் சென்னை வந்த பொழுது தொலை பேசியில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு மின் வணிகம் பற்றி கேட்ட பொழுது பொறுமையுடன் பதில் அளித்தார். இருமுறை நேரில் சந்தித்த பொழுது இந்த சிறியோனோடும் சில நிமிடங்கள் பேசினார்.

இதோ மறுபடியும் கனத்த மனதோடு "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" தொடர்ந்து படிக்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக.
read more "ஸ்ரீரங்கத்து தேவதை மறைந்தது"

மெக் டொனால்ட்ஸ், சூப்பர் சைஸ் மி விவரணப்படம் மற்றும் உலகமயமாக்கல்



தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 32 வயது மார்கன் ஸ்பெர்லாக்கிற்கு திடீரென்று விவரணப்படம் (Documentary) இயக்கும் எண்ணம் உதிக்கிறது. உடடினயாக அவர்
மது அருந்துவதை நிறுத்துகிறார். ஆறு வாரங்கள் கழித்து தனது உடம்பை முழுமையாக பரிசோதனை செய்து கொள்கிறார். மருத்துவர்கள் அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகக்
கூறுகிறார்கள்.

இந்தச் செய்தி மார்கனை குறித்த வேடிக்கையான சாயலை படிப்பவர் மனதில் தரக்கூடும். சூப்பர் சைஸ் மீயை பார்க்கும் பார்வையாளர்களும் முதலில் இதுபோன்ற வேடிக்கையை ரசிக்கும்
மனநிலைக்கே ஆளாகிறார்கள். ஆனால் மார்கனின் நோக்கம் கேளிக்கையல்ல. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்கும் துரித உணவு நிறுவனங்களை கேள்விக்குட்படுத்துவது. அதற்காக தன்னை சோதனைக்கூடத்தின் பரிசோதனைப் பொருளாக மாற்றிக் கொண்டார் மார்கன். அதுவொரு விபரீதமான ஆச்சரியப்பட வைக்கும் திட்டம்!

துரித உணவு அமெரிக்க வாழ்வின் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பர்கர் கிங், கேஎப்சி ,ஸ்டார் பக்ஸ், மெக் டொனால்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவின் துரித
உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன. இதில் மெக் டொனால்ட்ஸின் பங்கு அபாரமானது. அமெரிக்காவின் மொத்த துரித உணவு வர்த்தகத்தில் ஏறக்குறைய பாதியை கைவசப்படுத்தியிருக்கும் இந்நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உணவகங்களுடன் பிரம்மாண்டமாக கிளை பரப்பி நிற்கிறது.

அதிகபடியான கலோரிகள் கொண்ட துரித உணவுகளால் உருவாகும் மோசமான விளைவுகளில் ஒன்று உடல் பருமன். அமெரிக்கர்களில் பாதிக்கும் மேல் ஓபெசிடி(obesity) எனப்படும் அதிக
உடல் பருமன் கொண்டவர்கள். குழந்தைகளில் 37 விழுக்காடு பேர் தேவையில்லாத உடல் பருமனுடன் இருக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

இதய நோய், நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றின் தோற்றுவாயாக உடல் பருமன் இருக்கிறது.

தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மார்கன், இரண்டு பருமனான பெண்கள், தங்களது அதிக உடல் பருமனுக்கு மெக் டொனால்ஸ் உணவுகளே காரணம் எனக் கூறுவதை காண்கிறார். அப்பொழுது அவர் மனசுக்குள் ஓர் எண்ணம். அந்த எண்ணமே சூப்பர் சைஸ் மீ (Super Size Me)விவரணப் படமாக உருவாகிறது.

சூப்பர் சைஸ் மீ படம் மார்கனின் வசனங்களுடன் இப்படி ஆரம்பிக்கிறது.

அமெரிக்காவில் எல்லாம் பெரிது. கார்,வீடுகள்,நிறுவனங்கள்,உணவு ஏன் மக்களும் கூட தான். வருக இது அமெரிக்கா தற்போது உலகின் மிகவும் கொழுப்பேறிய நாடு.(Fattest Nation in the world)

கலகலப்பான மனநிலையுடன் தன்னைப் பரிசோதிக்கும் மருத்துவர்களுடன் உரையாடுகிறார் மார்கன். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். 6 அடி 2
அங்குல உயரமுள்ள மார்கன் 84 கிலோ எடையுடன் உள்ளார்.பிறகு பார்வையாளர்களுக்கு தனது திட்டத்தை விளக்குகிறார் மார்கன்.

1) தொடர்ந்து முப்பது நாட்கள் தினம் மூன்று வேளை உணவையும் மெக் டொனால்ட்ஸ் துரித உணவகத்தில் எடுத்துக் கொள்வது. தண்ணீர் உட்பட. (இங்கு உணவோடு கோக் இலவசம்.
குடிநீருக்கு பணம்.நம்ம ஊரிலிருந்து தலை கீழ். நம் ஊருக்கும் இங்கும் உள்ள தலை கீழ் வித்தியாசங்களை எழுத தனி பதிவே வேண்டும்.)
2) முப்பது நாட்களுக்குள் மெக் டொனால்ட்ஸின் மெனு கார்டில் உள்ள உணவுகள் அனைத்தையும் ஒரு முறையாவது சாப்பிடுவது
3) கேட்கப்படும் பட்சத்தில் மெக் டோனால்ட்சின் Super Size அளவில் உணவு வகைகளை வாங்கி உண்பது. ( Super Size meals என்பது உணவு அளவுகளில் பெரியது. medium,big
என்பது போல் இது அதற்கடுத்த அளவு . இந்த ஊரில் meals என்றால் சாண்ட்விச் அல்லது பர்கர் உடன் பிரெஞ்சு பிரைஸ் மற்றும் கோக் )
4) சராசரி அமெரிக்கர் போல ஒரு நாளில் 5000 அடிகள் நடப்பது.

திட்டம் தயாரானதும் மார்கனின் பயணம் தொடங்குகிறது. முதல் நாள் தனது மான்ஹட்டன் வீட்டின் அருகிலுள்ள மெக் டொனால்ட்ஸ் துரித உணவகத்தில் காலை உணவை எடுத்துக்
கொள்கிறார். பிறகு வெவ்வேறு வாகனங்கள். வெவ்வேறு நகரங்கள். ஆனால் மூன்று வேளையும் அதே மெக் டொனால்ட்ஸ் துரித உணவுகள் தண்ணீர் உட்பட.

நாட்கள் நகர நகர மார்கனின் உடல்நிலை மோசமாவதை பார்வையாளர்களால் உணர முடிகிறது. ஐந்து நாட்கள் முடிவிலேயே 3 கிலோ எடை அதிகரிக்கிறது.ஐந்தாவது நாள் சோர்விற்கும்
மன உளைச்சலுக்கும் ஆளாகிறார் .இரண்டு வாரங்கள் முடிவில் 5 கிலோவிற்க்கும் அதிகமாக எடை கூடி விடுகிறது. மிகுந்த மன சோர்வுக்கு ஆளாகிறார்.உடல் தளர்ச்சியிலும்
பாதிக்கப்படுகிறார் மார்கன். அவரை பரிசோதிக்கும் மருத்துவர், மார்கனின் கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிடும்படியும் கூறுகிறார்.

ஆனாலும் பரிசோதனையை தொடர்கிறார்.

நடுவே மருத்துவர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோரை சந்தித்து அவர்களுடனான உரையாடலையும் படத்தில் சேர்த்துள்ளார் மார்கன்.

முப்பது நாள் முடிவில் மார்கனின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது. இறுதிகட்ட சோதனையில் மார்கனின் உடல் எடை எடை 11.5 கிலோ அதிகரித்து 95.5 கிலோவாக இருப்பது தெரிய வருகிறது. இதேபோல சர்க்கரை அளவும், கொழுப்பும் நம்ப முடியாத அளவு அதிகரித்துள்ளது. மார்கனின் அன்றைய காதலியும் இந்நாள் மனைவியுமான அலெக்ஸான்ட்ரா ஜெபிசன் பேசுகிறார்.மார்கன் மெக் டொனால்ட்ஸ் உணவை எடுத்துக் கொண்ட காலத்தில் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கும் , உடல் சோர்வுக்கும் ஆளானதை தன்னால் உணர முடிந்தது என்று கூறுகிறார்.

அமெரிக்க திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த விவரணப் படங்களில் ஏழாவது இடம் பிடித்த மார்கனின் இப்படம் சிறந்த விவரண படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு
பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பல விருதுகளையும் பெற்றது.

படம் வெளியான பின் மெக் டொனால்ட்ஸ் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளானது.தனி மனிதராக மெக் டோனால்ட்சின் உணவு சாம்ராஜ்யத்தையே அசைத்து பார்த்தார் மார்கன். மார்கன் ஒரு சராசரி மனிதன் எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டார் என்ற அதன் குற்றச்சாட்டு பயனில்லாமல் போனது. நெருக்கடிகளிலிருந்து மீள, படம் வெளியான இரண்டு மாதங்களுக்குள் மெக் டொனால்ட்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டி வந்தது. அதில், ஆரோக்கியமான உணவு விஷயத்தில் தீவிர கவனம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், super size எனப்படும் வகையான உணவு இனி மேல் மெக் டோனால்ட்சில் விநியோகிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

சூப்பர் சைஸ் மீ படம் குறித்து சொல்லும்போது, சரியான நேரத்தில் நாங்கள் அதை எடுத்தோம் என்றார் மார்கன். அந்த பரிசோதனையின் போது கூடிய எடையை குறைக்க மார்கனுக்கு 14 மாதங்கள் ஆனது என்கிறார் .

தமிழர்களின் வாழ்வில் தமிழ்நாட்டின் கலையும், கலாச்சாரமும், கிராமங்களும், எளிய வாழ்க்கை முறையும், உணவு பழக்கங்களும் சுத்தமாக இட நீக்கம் செய்யப்பட்டு பீட்சாவும், கெண்டகி சிக்கனும்,பர்கரும் நிறைந்த கார்ப்பரேட் சமாச்சாரங்கள் ஆக்ரமித்துள்ளன . இந்நிலையில் உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத விஷயமாக மெக் டொனால்சும் இந்தியாவுக்குள்
துரித உணவு(Fast food) கடைகளை ஆரம்பித்துள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது நிரூபிக்கப்பட்ட பின்பும் கோக்கும் பெப்சியும் தாராளமாக இந்தியாவில் கிடைக்கிறது. இவற்றை வாங்க நமக்கு எந்த மனத்தடையும் இல்லை.இந்த
படம் பற்றிய நமது விழிப்புணர்வின் பின்னணியில் மெக் டொனால்ஸின் வருகையை எண்ணிப் பார்க்கும்போது இளம் தலைமுறையினர் பற்றிய கவலையே மேலோங்குகிறது.
read more "மெக் டொனால்ட்ஸ், சூப்பர் சைஸ் மி விவரணப்படம் மற்றும் உலகமயமாக்கல்"

கூகிள் லோகோக்கள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்

கூகிள் தேடு பொறி தளத்தின் முகப்பு பக்கத்தில்(Home Page) அடிக்கடி மாற்றப்படும் லோகோக்களை பார்த்திருப்பீர்கள். சொடுக்கி (Mouse) குறியை அந்த லோகோ மேலே கொண்டு சென்றால் அந்த லோகோக்களுக்கான விளக்கம் கிடைக்கும். உலகின் விசேஷ தினங்கள். விழா நாட்கள் மற்றும் சாதனையாளர்களை நினைவு கூறும் வகையில் அடிக்கடி இந்த லோகோக்கள் மேம்படுத்தப்படுகின்றன.

தினமும் 18 கோடி பேருக்கு மேல் வருகை தரும் கூகிள் தளத்தின் லோகோக்களை வரைபவர் 29வயதே ஆன டென்னிஸ் ஹுவாங் என்பவர் ஆவார்.



சமீப காலங்களில் இந்த லோகோக்கள் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளன. தற்போதெல்லாம் மக்கள் குறிப்பிடதகுந்த நாட்களில் இந்த லோகோக்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். டென்னிஸ் இன் முதல் லோகோ 2000 ஆண்டு வெளி வந்தது. இப்போது டென்னிஸ் ஹுவாங் உலகின் முக்கிய கணிப்பொறி ஓவிய வடிவமைப்பாளர் (Computer Graphics Designer).

குறிப்பிடும்படியான சில சுவாரஸ்யமான லோகோக்களை இங்கு காண்போம்.


2000 ம் ஆண்டு டென்னிஸ் முதலாவதாக வரைந்தது Bastille Day என்னும் பிரெஞ்சு தேசிய தினத்திற்காக



ஈஸ்டர் பண்டிகைக்காக . இதன் கிழே தெரியும் சிறிய முட்டை வடிவ படத்தை சொடுக்கினால் சிறிய விளையாட்டு காண கிடைக்கும்.


Easter Egg



காதலர் தினத்திற்காக. இதன் கீழே தெரியும் சிறிய இதய வடிவ படத்தை சொடுக்கினால் சிறிய விளையாட்டு காண கிடைக்கும்.




சுவிஸ் நாட்டு தேசிய தினத்திற்காக



நமது இந்தியாவின் ஹோலி பண்டிகைக்காக



வானவூர்தி (Flight) கண்டுபிடித்து நூற்றாண்டு விழா



அமெரிக்கா சுதந்திர தினத்திற்காக



DNA கண்டுபிடித்து 50 ஆண்டுகள் ஆனதற்காக



ஐன்ஸ்டீன் பிறந்த நாளுக்கு


கீழ் உள்ள படம் டென்னிஸ் இன் திறமைக்கு ஒரு எடுத்துகாட்டு. ஜூன் 2004 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு வானவியல் அறிஞரிடம் இருந்து டென்னிசுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் இன்னும் 24 மணி நேரத்தில் வீனஸ் கோள் சூரியனை மிக அருகாமையில் கடந்து செல்லும் எனவும் இது 122 வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும் என்று கூறினார். அடுத்த சில நிமிடங்களில் கூகிள் லோகோவின் இரண்டாவது "O" வை சூரியன் போலாக்கி அருகே சிறியதாக கருமை நிறத்தில் வீனஸ் கோள் கடந்து செல்வதாக வடிவமைத்து தளத்தில் வெளியிட்டார்.



லியனார்டோ டா வின்சி பிறந்த தினத்திற்காக



TCP/IP என்னும் இணையத்திற்கு மிக அடிப்படையான, கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற முறை வந்து 25 ஆண்டுகள் ஆனதற்காக



இனிமேல் கூகிள் தளத்தில் இந்த லோகோக்களை கவனித்து பாருங்கள். நிறைய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.வணக்கம்.
read more "கூகிள் லோகோக்கள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்"

உலகின் முதல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் கார்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு "The Spy Who loved Me" என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் கற்பனையாக காட்டப்பட்ட நீரிலும்,நிலத்திலும் இயங்கும் காரை தற்போது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Rinspeed என்ற கார் தயாரிப்பு நிறுவனம் உண்மையாகவே தயாரித்துள்ளது.

ஸ்குபா (sQuba) என்று அழைக்கப்படும் இந்த கார் தொலை கட்டுப்பாட்டு( Remote Control) முறையில் இயங்க கூடியது.

video

நிலத்திலிருந்து நீருக்கடியில் சென்றவுடன் அதன் செயல்பாடுகள் சிறிய நீர் மூழ்கி கப்பலை போன்று செயல் பட ஆரம்பிக்கிறது. இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் இந்த கார் நீருக்கடியில் சென்றவுடன் சுவாசத்திற்காக விஷேச உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். 30 அடி ஆழத்தில் சீராக இயங்க இரண்டு ப்ரோபெல்லேர்கள் (Properller) உதவுகின்றன.

கனவு காண்பது தனது பொழுது போக்கு என்று கூறும் இந்த நிறுவனத்தின் தலைவர் பிராங்க் ரிண்டேர்நேக்ட் ( Frank Rinderknecht ) இந்த காரை எடை குறைந்த முறையில் தயாரித்து நீர் உள்ளே புகாமல் தடுப்பதும், நீருக்கடியில் அழுத்தத்தை தாங்கும் திறனுடன் தயாரிப்பது சவாலாக இருந்ததாக கூறுகிறார்.

மேலும் இது பாட்டரியால் இயங்குவதால் சுற்று சூழலை மாசு படுத்துவதில்லை. இந்த கார் அடுத்த மாதம் 6 ம் தேதி ஜெனீவா மோட்டார் காட்சியில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் போது பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்வது நிச்சயம்.
read more "உலகின் முதல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் கார்"

யாஹூ உடன் இணைய நியூஸ் கார்ப்பரேசன் பேச்சு வார்த்தை

கடைசியாக வந்த செய்திகளின் படி, மைக்ரோசாப்ட் உடனான பேரம் சரி வராததால்
யாஹூ கடந்த திங்கட்கிழமை பேச்சு வார்த்தையை முடித்து கொண்டது. யாஹூ உடன் இணைவதற்காக நியூஸ் கார்ப்பரேசன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. யாஹூ தளமும், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தளமும் இதை உறுதி செய்கின்றன. நியூயார்க் ஐ தலைமை இடமாக கொண்டு இயங்கும் நியூஸ் கார்ப்பரேசனின் தலைவர் ஊடக ஜாம்பாவான் (Media Tycoon) ருபெர்ட் முர்டாக் ஆவார்.

இங்கிலாந்தில் இருந்து வெளி வரும் The Sun, The Times , ஆஸ்திரேலியா வின் 20 க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள், இதழ்கள், ஆசியாவின் STAR TV தொலைக்காட்சிகள், அமெரிக்காவின் 20th Centuty Fox திரைப்பட நிறுவனம், FOX தொலைக்காட்சி மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் முன்னணி வணிக பத்திரிக்கை இந்த குழுமத்தில் அடங்கும். மேலும் myspace.com, photobucket.com போன்ற இணைய தளங்களையும் கொண்டுள்ளன. myspace என்பது orkut போன்ற பகிர்தல் தளமாகும்.

ஆனால் மைக்ரோசாப்ட் மேலும் தொடர்ந்து விலையை அதிகரித்து பேரம் பேசும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் முதலில் பேசிய பேரம் 44.6 பில்லியன் டாலர்கள் அல்லது யாஹூவின் ஒரு பங்கிற்கு 31 டாலர்கள். தற்போது நிலையில் ஒரு பங்கிற்கு 36 டாலர்கள் தர தயாராக உள்ளது.
read more "யாஹூ உடன் இணைய நியூஸ் கார்ப்பரேசன் பேச்சு வார்த்தை"

ஆஸி. கிரிக்கெட் இயந்திரத்தை உடைத்த இந்தியா!

மெல்போர்ன் ஒரு நாள் போட்டியில் இதுவரை எந்த அணியும் ஆதிக்கம் செலுத்தாத அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணியினரை தங்களது கிரிக்கெட் ஆட்டம் பற்றி மறு பரிசீலனை செய்யத் தூண்டும் வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.

1992 உலகக் கோப்பையில் அடைந்த படுதோல்விகளுக்கு பின் மார்க் டெய்லர் தலைமையில் ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் பெரிய சக்தியாக உருவெடுத்தது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வெகு குறைவான தோல்விகளையே சந்தித்தது. ஆனால் அந்த தோல்விகளிலும் எதிரணியினர் நேற்று இந்தியா செய்த அளவுக்கு ஆதிக்கத்தை செலுக்த முடியவில்லை என்பதை உறுதியாக நாம் கூறலாம்.

1996 உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் இலங்கை இது போன்ற ஒரு ஆதிக்கத்தை செலுத்தி, ஆஸ்ட்ரேலியாவின் மகுடத்தை வீழ்த்தியது. அதன் பிறகு ஜான் புக்கானன், ஸ்டீவ் வாஹ் போன்றவர்களின் தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்திற்கு வேறு விதமான விளக்கங்களை கொடுத்துக் கொண்டு ஆஸ்ட்ரேலியா ஆதிக்கம் செலுத்தி நேற்று வரையிலும் பாண்டிங் தலைமையில் அந்த ஆதிக்கம் நீடிக்க தூண்டுகோலானது.

இந்த ஆதிக்க காலத்தில் எல்லாம் ஆஸ்ட்ரேலிய அணியில் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன், ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, ரிக்கி பாண்டிங் ஆகியோர் பங்களிப்பு மிக அதிகமானது.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா என்றாலே அதிரடி, அவர்கள் பேட்டிங் வரிசையை யாரும் ஆட்ட முடியாது... அவர்கள் பந்து வீசினால் எதிரணியினர் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு தோல்வியைத்தான் சந்திக்க வேண்டும் என்பது போன்ற கேள்விக்கு உட்படுத்தப்படாத ஒரு நிலை நீடித்து வந்தது.

இதற்கு பெரும்பான்மையான காரணம் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய அணிகள் ஆஸ்ட்ரேலிய அணியின் மீது வைத்திருந்த அசைக்க முடியாத ரசிக மனோபாவமே. ஆஸ்ட்ரேலியா ஒரு ரன் எடுக்கும் இயந்திரம், பந்து வீச்சில் எதிரணியை திணறடிக்கும் இயந்திரம், ஃபீல்டிங்கில் பாகங்கள் பழுதடையா ஒரு இயந்திரம் என்று உலக அணிகள் நம்பின. உளவியல் ரீதியாக அவர்களுடன் நாம் போட்டியிட முடியாது என்று அணி நிர்வாகங்கள், கிரிக்கெட் வாரியங்கள் ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளர்களைத் தேடி அலைந்தன. இந்த மாயையில் இந்தியாவும் விழுந்தது. ஆனால் அந்த விவகாரமே இப்போது இந்திய அணியின் போர்க் குணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஜஸ்டின் லேங்கர் ஆகியோர் ஓய்வு பெற்றவுடன், தங்களது பலவீனங்களையெல்லாம் ஊடகங்களை வைத்தும், எதிரணியினரை மைதானத்தில் மட்டம் தட்டியும் மறைத்துக் கோண்டு வந்தது.

சிட்னி, பெர்த், அடிலெய்ட் டெஸ்டில் துவங்கியது ஆஸ்ட்ரேலிய சரிவு. அந்த அணியை வீழ்த்த முடியும் என்பதோடு கேவலமாக சுருட்ட முடியும் என்பதையும் மேல்போர்னில் இந்திய வெற்றி உறுதி செய்துள்ளது.

மெல்போர்ன் ஆட்டக்களம் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் தூண்டுதலால் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆட்டக்களமாக உருவாக்கப்பட்டது. பூவா தலையா வென்று உடனடியாக பேட்டிங் என்று தீர்மானித்த பாண்டிங், சாந்தகுமாரன் ஸ்ரீசாந்தும், இஷாந்த் ஷர்மாவும் இந்த அளவுக்கு சேதங்களை ஏற்படுத்தி விடுவார்கள் என்று நிச்சயம் நம்பியிருக்க மாட்டார்.

நெருப்பின் உக்ரமும், ஆக்ரோஷமும் தங்களுக்கே உரிய சொத்து என்று இதுவரை நினைத்து வந்த ஆஸ்ட்ரேலிய அணியின் தற்பெருமை இந்திய நெருப்பில் நேற்று பொசுங்கிப்போய் விட்டது என்றே கூறலாம்.

ஆஸ்ட்ரேலிய அணி, இது நேற்றோடு முடிந்துவிட்ட விவகாரம் என்று தோள்களை குலுக்கலாம். ஆனால் இது முடிவல்ல... சாம்ராஜ்யம் சீரழிவதின் துவக்கம் என்று போகப் போக அவர்களுக்கு புரியவரும்.

இஷாந்த் ஷர்மா 2வது ஓவரில் நோ பால்களையும், வைடுகளையும் வீசி ஹெய்டனிடம் சில அடிகளையும் வாங்கினார். ஆனால் பலவீனமான இளம் வீரராயிருந்தால் துவண்டு போய் பிறகு வீசுகிறேன் என்று கூறியிருப்பார். அல்லது பலவீனமான அணித் தலைமையாயிருந்தால், அவருக்கு அடுத்த ஓவரை கொடுத்திருக்க மாட்டார்.

ஆனால் தோனி, உடனே இஷாந்த் ஷர்மாவை அழைத்து, "நீ என்ன திட்டத்தில் பந்து வீச அழைக்கப்பட்டாயோ அந்த வேலையை ஆக்ரோஷமாக செயல் படுத்து" என்று கூறினார். அதன் விளைவு ஆஸ்ட்ரேலியாவின் "அதிரடி" வீரர்கள் இந்திய ஃபீல்டர்களுக்கு கேட்ச் பயிற்சி கொடுத்து விட்டுச் சென்றனர்.

இது போன்ற அணுகுமுறையை இலங்கையும் செயல்படுத்த துணியவேண்டும். மாறாக இலங்கை அதிரடியைக் கண்டவுடன் பின்வாங்கி ஃபீல்டர்களை பின்னுக்கு நகர்த்தி, பவர் ப்ளேயை விட்டுக் கொடுத்து முரளிதரனை கொண்டு வரவேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறது.

பவர் ப்ளே இருக்கும் போதே முரளிதரனைக் கொண்டு சுழற்பந்து என்றாலே நடுங்கும் ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அணுகுமுறையை ஜெயவர்தனே கடைபிடிக்க வேண்டும்.

ஏனெனில் ஆஸ்ட்ரேலியா வேகப்பந்திற்கு சாதகமான ஆட்டக்களங்களில் தோல்வியை சந்தித்து வருகிறது. மெதுவான ஆட்டக்களங்களில் அவர்களது வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தைக் குறைத்து ஏறத்தாழ ஒரு சுழற்பந்து வீச்சளர்கள் போல் வீசியே இலங்கையை சிட்னியில் சுருட்டினர்.

நாதன் பிராக்கன், ஸ்டூவர்ட் கிளார்க், ஏன் பிரட் லீயையே அவர்கள் ஆக்ரோஷமாக அடித்து ஆடவேண்டும். ஜெயசூரியா ஆட்டமிழந்தவுடன் சங்கக்காரா போன்ற முக்கிய வீரர்கள் அதிரடியாக ஆட நேரிடும்போது ஆட்டமிழக்கிறார்கள். அதிகம் தெரியாத வீரரை அடித்து ஆட வைக்கும் உத்தியை சிறிலங்கா கடைபிடிக்கலாம்.

நெருப்பை நெருப்பால் சந்தியுங்கள் என்ற இந்திய அணியின் புதிய தாரக மந்திரத்தை உலக அணிகள் கடைபிடித்தால் இந்தியா மட்டுமல்ல வங்கதேசமும், ஜிம்பாப்வேயும் கூட எதிர்காலங்களில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியும்.

பயிற்சியாளர்களால் ஒன்றும் பயனில்லை. அணித் தலைமை பலமாக இருக்கவேண்டும். இந்தியாவில் அனில் கும்ளேயும், மகேந்திர சிங் தோனியும் ஆஸ்ட்ரேலிய மண்ணிலேயே அந்த இயந்திரத்தை உடைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இனி அந்த அணி தோல்விகளுக்கு, ஏன் தொடர் தோல்விகளுக்கும் தங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது நல்லது.

நன்றி: வெப்துனியா
read more "ஆஸி. கிரிக்கெட் இயந்திரத்தை உடைத்த இந்தியா!"

வித்தை காமிக்கிறாங்க பாருங்க!

இதை சமீபத்தில் எங்கேனும் பார்த்திருந்தால் அது நகல். இது அசல்.

video
read more "வித்தை காமிக்கிறாங்க பாருங்க!"

மைக்ரோசாஃப்ட்டின் தொடுவிசை பரப்பு கணிப்பொறி (Microsoft Surface Computing)

மைக்ரோசாஃப்ட் புதிதாக வெளியிடப்போகும் இந்த கணிப்பொறி ஒரு மேசை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் பயனர்களின்(Users) தொடுகைகளுக்கு ஏற்ப வேலை செய்யும். இதுபோன்ற தொழில் நுட்பங்களில் பொதுவாக ஒரே ஒரு தொடுகைக்கு தக்கவாறு தான் கணிப்பொறி வேலை செய்யும். ஆனால் மைக்ரோசாஃப்ட்டின் இந்த கணிப்பொறி 52 தொடுகைகளை ஒரே நேரத்தில் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது.விரல்களை திரையில் வைத்து அசைப்பதன் மூலமாகவே படங்களை வரைய முடியும்.எழுத முடியும்.

video

இதன் முக்கிய சிறப்பம்சம் குறிப்பிட்ட பொருட்களை திரையில் வைத்தால் அதை உணர்ந்து கொள்ளும் ஆற்றலாகும். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமராவை இதன் திரையில் வைத்தால் இந்த கணிப்பொறி அது டிஜிட்டல் கேமரா என உணர்ந்து கொள்ளும். உங்களுடைய Digital Camera வில் (எண்ம ஒளிப்பட பெட்டி) இருந்து ஒளிப்படங்களை இந்த பரப்பு கணிப்பொறிக்கு மாற்ற டிஜிட்டல் கேமராவை திரையில் வைத்து தொடுகைகள் மூலமாகவே செய்ய இயலும்.ஒளிப்படங்களை தொடுகைகள் மூலமாக சுருக்கலாம் நகர்த்தலாம். மேலும் செல்பேசி,mp3 Player, கடன் அட்டை போன்றவற்றையும் அடையாளம் தெரிந்து கொள்ளும்.இரண்டு செல்பேசிகளுக்கு இடையே கோப்புகளை(Files) பரிமாறிக்கொள்ளலாம். விண்டோஸ் விஸ்டா இயங்கு தளத்தில்(Operating System) வேலை செய்யும் இந்த கணிப்பொறியின் windows களை கை விரல்கள் மூலமாகவே நகர்த்தலாம்.விரைவில் வெகு ஜன புழக்கத்திற்கு வர இருக்கும் இந்த கணிப்பொறி முதலில் உணவு விடுதிகள்,வரவேற்பறைகள் மற்றும் மகிழ்வு விடுதிகள்(Clubs) போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

video

video
read more "மைக்ரோசாஃப்ட்டின் தொடுவிசை பரப்பு கணிப்பொறி (Microsoft Surface Computing)"

அந்திவேளையிலே ஆகாயத்திலிருந்து


இந்த ஒளிப்படம் கொலம்பியா விண்வெளி ஓடத்திலிருந்து மேகமூட்டமில்லாத மாலை வேளையில் சூரியன் மறையும் நேரத்தில் எடுக்கப்பட்டது.
ஐரோப்பாவின் இத்தாலி,ஜெர்மனி,பிரான்ஸ்,நெதெர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் சூரியன் மறைந்து மின் விளக்குகள் பிரகாசிக்கின்றன.மற்றும் ஆப்பிரிக்கா வின் ஒரு பகுதியில் சூரியன் மறைந்தும் மற்ற பகுதியில் சூரியன் மறையாமலும் காணப்படுகிறது. ஸ்பெயின்,இங்கிலாந்து,அயர்லாந்து போன்ற நாடுகளில் இன்னும் சூரிய வெளிச்சம் உள்ளது.
படத்தில் கீழ் பகுதியில் உள்ள ஆப்பிரிக்காவில் வெளிச்சம் இல்லாத நிலையிலும் அகண்ட சஹாரா பாலைவனம் தெரிகிறது. படத்தின் இடது பக்கத்தில் மேலே உயரத்தில் ஐஸ்லாண்டும், கிரீன்லாண்டும் பனியில் உறைந்து கிடக்கின்றன.படத்தை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.
read more "அந்திவேளையிலே ஆகாயத்திலிருந்து"

உங்கள் விழிப்பு திறமையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

மந்தையிலிருந்து ஆடு வெளி வந்த உடனேயே மயக்க மருந்து ஊசி பொத்தானை சொடுக்கவும்.
உங்கள் திறனை பின்னூட்டமிட்டால் மகிழ்ச்சி அடைவேன்.



read more "உங்கள் விழிப்பு திறமையை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்"

"கேலி"சித்திரம் பேசுதடி

இவை உலகப் புகழ் பெற்ற கேலிச்சித்திரங்கள். இந்த சித்திரங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய பேசவே செய்கின்றன.சித்திரங்களை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.























read more ""கேலி"சித்திரம் பேசுதடி"