இதை பாருங்கள்...இப்படித்தான் அமெரிக்கா புவியியல் சொல்லித்தருகிறது

படத்தை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.

read more "இதை பாருங்கள்...இப்படித்தான் அமெரிக்கா புவியியல் சொல்லித்தருகிறது"

ஷாரூக்கானுக்கு பரிசளிப்பு விழாவில் ஏற்பட்ட சிக்கல்...

இதை ஷாரூக்கான் எதிர்பார்த்திருக்கவில்லை என தெரிகிறது.

read more "ஷாரூக்கானுக்கு பரிசளிப்பு விழாவில் ஏற்பட்ட சிக்கல்..."

ஜாக்கி சான், ஜெட் லீ முதன் முறையாக இணைந்து நடிக்கும் "The Forbidden Kingdom"




அடுத்த மாதம் வெளியாகும் இந்த திரைப்படத்தில் ஜாக்கி சானும் ஜெட் லீயும் முதன் முறையாக இணைந்து நடித்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன் நடக்கும் மாயாஜால கதையான இதில் ஜெட் லீ சிறை பிடிக்கப்பட்ட அரசனாக நடித்துள்ளார் .

தற்போதைய காலத்தில் ஒரு இளைஞன் பழம் பொருள் கடையில் துழாவும் போது கிடைக்கும் ஒரு சிலம்பாட்ட கழி அவனை பல நூற்றாண்டுகளுக்கு முன் அழைத்து செல்கிறது. அங்கு நடக்கும் சம்பவங்களே கதை.ஜாக்கி சான் பேசுகையில், தனது இத்தனை வருட திரைப்பட சண்டை காட்சிகளில் ஜெட் லீயோடு நடித்தது மிகவும் வசதியாக இருந்தது எனவும் ஒரே தடவையில் ஒவ்வொரு சண்டை காட்சியையும் எடுத்து முடித்ததாகவும் குறிப்பிடுகிறார்.
read more "ஜாக்கி சான், ஜெட் லீ முதன் முறையாக இணைந்து நடிக்கும் "The Forbidden Kingdom""

கூகிள் வலைத்தளமும் இருளில் மூழ்கியது - உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு



உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் உலக ஒரு மணி நேரம் (Earth Hour) எனப்படுகிறது. இதன் படி இந்த வருடம் மார்ச் மாதம் 29 ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது(அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து).கூகிள் வலைத்தளமும் இந்நிகழ்வை வலியுறுத்த இன்று அதன் முகப்பு பக்கத்தை முழுவதும் இருண்டதாக காட்டுகிறது.

உலக வெப்பமயமாதல் தற்போது உலகின் முக்கிய அச்சுறுத்தும் காரணியாக இருக்கிறது. தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகை, அசுத்தங்களால் காற்று மண்டலத்தில் வெப்பநிலை அதிகரிக்கிறது. ஆகவே துருவங்களில் உள்ள பெரும் பனிப்பாறைகள் உருகுகின்றன. கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது.

மின்சாரம் தயாரிக்க உலகம் முழுவதும் பெரும்பாலும் நிலக்கரி உபயோகிக்கப்படுகிறது.ஒவ்வொரு மின்சார நிலையங்களிலும் இதற்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி மின் உற்பத்தி முடிந்தவுடன் கரியாக மாறி காற்று மண்டலத்தில் சேர்கிறது.

தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப் படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது.

Al Gore எழுதிய " An inconvinient Truth" (ஒரு சங்கடமான உண்மை) என்னும் புத்தகத்தில் உலக வெப்பமயமாதலுக்கு உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்கா மட்டும் 30 சதவிகிதம் காரணமாக இருப்பதை குறிப்பிடுகிறார். ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளும் தன் பங்கிற்கு சுற்று சூழலை மாசுபடுத்துகின்றன. இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் 25000 க்கு மேற்பட்ட கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலைக்கு வருகின்றன.

சென்ற ஆண்டு சிட்னி நகரில் ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டபோது நகரின் 22 லட்சம் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 10 சதவிகிதம் மின் சக்தியை மிச்சப்படுத்தினர். மின் சக்தி தேவை குறையும் போது மின் நிலையங்களில் நிலக்கரி உபயோகமும் குறைகிறது. உலகம் முழுவதும் இம்முறை மக்கள் பங்கு பெற்றால் அதிக அளவு மிச்சப்படுத்தலாம். இது ஒரு சிறிய முயற்சியே. இதன் பின்னால் மறைமுக நன்மைகள் அதிகமே.

இந்த வருடம் 35 நாடுகளில் 370 நகரங்களில் பூமி நேரம் நிகழ்வு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக ஏற்படுத்திய வலை தளத்தில் Earth Hour இதுவரை இரண்டு லட்சத்து எழுபத்து மூன்றாயிரம் மக்கள் இணைந்துள்ளனர். நீங்களும் இந்நிகழ்வில் இணைந்து கொள்ளுங்கள்.அடுத்த தலைமுறையினருக்கு பாதுகாப்பான உலகத்தை ஒப்படைப்போம்.

குறிப்பு : கூகிள் இது போன்று உலக நிகழ்வுகளை சுவாரஸ்யமாக தன் தளத்தில் காண்பிப்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
கூகிள் லோகோக்கள் - சில சுவாரஸ்யமான தகவல்கள்
read more "கூகிள் வலைத்தளமும் இருளில் மூழ்கியது - உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு"

இவரோட வேலை ரொம்ப கஷ்டம் தான்.

இவர் பெங்களூரில் உள்ள கலாசிபால்யா சிட்டி மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை பார்க்கிறார். வோல்வோ பஸ்களில் கீழ் பகுதிகளில் நிறைய இடமிருக்கும். அது நிறைந்தபின் மேலே ஏற்றிக்கொள்ளலாம். 150 கிலோ எடையுள்ள Pulsar வண்டியை சரியாக பேலன்ஸ் செய்து மேலே ஏற்றுகிறார். பலம் மற்றும் நிதானமும் வேணும். இந்த வேலைக்கு இவர் 20 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்.

நண்பரிடமிருந்து இது பற்றி வந்த வந்த மின்னஞ்சலில் "நீ செய்யும் வேலைக்கு வரும் சம்பளம் குறைவு என்று எண்ணாதே. உன்னை விட கஷ்டமான வேலை செய்து குறைந்த சம்பளம் பெறும் மக்கள் இருக்கிறார்கள்" என்று இருந்தது.




read more "இவரோட வேலை ரொம்ப கஷ்டம் தான்."

அமெரிக்க ஜனாதிபதிக்கு...குறி வச்சாச்சு



தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்பெயின் நாட்டிற்கு வரும் அமெரிக்க ஜனாதிபதி மாநாட்டில் உரையாற்றும் போது சுட்டு கொல்லப்படுகிறார். Vantage Point திரைப்படம் இவ்வாறு தொடங்கி கொலைக்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் சாதாரண action thriller திரைப்படம். வித்தியாசமான திரைக்கதை,மிக சிறப்பான எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மூலம் இந்த திரைப்படம் மிகுந்த சுவாரஸ்யமானதாக ஆக்கப்பட்டுள்ளது.

ரஷோமான்,அந்த நாள்,விருமாண்டி போன்ற சீரியஸ் திரைப்படங்களில் இது போன்ற உத்தியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் வேறு வேறு கதாபாத்திரங்களே ஒரே நிகழ்வை வெவ்வேறு கோணங்களில் விவரிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் கதாபாத்திரங்கள் மூலம் அந்த நிகழ்வை விவரிக்காமல் கதையின் போக்கிலேயே சென்று கதாபாத்திரங்கள் பார்வையில் கோணங்கள் விவரிக்கப்படுகின்றன.

நண்பகல் 12 மணிக்கு கதை துவங்குகிறது. தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்பெயின் வந்துள்ள அமெரிக்கா ஜனாதிபதி உரையாற்ற கூட்டம் நடக்கும் இடத்திற்கு வருகிறார். மாநாட்டை ஒளிபரப்ப வந்துள்ள தனியார் தொலைகாட்சி நிறுவனத்தின் செய்தி தயாரிப்பாளர் தனது குழுவின் மூலம் அதை ஒளிபரப்புகிறார்.தொலைக்காட்சி கேமரா கூட்டத்தை படம் பிடிக்கிறது. 6 மாதங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல நடந்த முயற்சியில் குண்டடி பட்டு ஜனாதிபதியை காப்பாற்றிய அவர் பாதுகாவலர் தாமஸ்(Dennis Quaid)உடல் நலம் தேறி மீண்டும் பணியில் இருப்பது தெரிகிறது. நகரத்து மேயர் பேசி முடித்தபின் பேச மேடை வரும் ஜனாதிபதி இரு முறை சுடப்பட்டு கொல்லப்படுகிறார். மக்கள் சிதறி ஓடுகின்றனர். தூரத்தில் ஒரு வெடிகுண்டு சத்தம் கேட்கிறது. சில நிமிடங்களில் மேடையிலும் ஒரு குண்டு வெடிக்கிறது. நேரம் 12.23.திரை இருள்கிறது.முதல் கோணம் முடிவடைந்தது.

மீண்டும் கதை நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது மற்றொரு கோணத்தில்.ஜனாதிபதியின் பாதுகாவலர் தாமஸ்(Dennis Quaid) சக அலுவலர் கென்ட்(Matthew fox) உடன் பாதுகாப்பு பணியில் இருக்கிறார். நகரத்து மேயர் பேசிக்கொண்டிருக்கும் போது எதிர் புற கட்டிட ஜன்னல் திரைசீலை அசைவதை கவனிக்கிறார். விசாரிக்கும் போது அது மின் விசிறியால் அசைந்ததென்று அறிகிறார். மக்கள் கூட்டத்தையும் அந்த திரைசீலை அசைவதையும் ஒரு நபர் படம் பிடிப்பதையும் கவனிக்கிறார். சில நொடிகளில் ஜனாதிபதி சுடப்படுகிறார். மக்கள் கலைந்து ஓடுகின்றனர். திடீரென்று ஒருவன் மேடையை நோக்கி ஓடியதால் போலீசால் கைது செய்யப்படுகிறான். தூரத்தில் குண்டு வெடிக்கிறது. கூட்டத்தில் படம் பிடித்து கொண்டிருந்த நபரின் வீடியோ கேமராவை வாங்கி அதில் படம் பிடித்ததை ஆராய்கிறார். எதிர் புற கட்டிடத்தில் யாரையோ பார்த்தாக நம்புகிறார். வீடியோ கேமராவில் படம் பிடிக்கப்பட்டதை பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்து அனைவரையும் ஓட சொல்கிறார். அதற்குள் மேடையில் குண்டு வெடிக்கிறது. லேசான காயங்களுடன் அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் படப்பிடிப்பு வாகனத்தில் நுழைந்து இதுவரை நடந்த ஒளிபரப்பை காண்பிக்க சொல்கிறார். அதை பார்த்து ஒரு கணத்தில் அதிர்ச்சி அடைகிறார். திரை இருண்டு அடுத்த கோணம் முடிகிறது.

மீண்டும் நண்பகல் 12 மணிக்கு கதை துவங்குகிறது.இந்த கோணத்தில் என்ரிக் என்பவன்( ஜனாதிபதி சுடப்பட்டவுடன் மேடையை நோக்கி ஓடியவன்) தனது காதலி கூட்டத்தில் புதிய நபர் ஒருவனுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் வினவுகிறான். காதலி தான் கூறிய கைப்பையை என்ரிக் கொண்டுவந்ததை உறுதிபடுத்திக்கொண்டு அதை வாங்கி கொள்கிறாள். ஜனாதிபதி சுடப்பட்டவுடன் நகரத்து மேயரை காப்பாற்ற மேடையை நோக்கி ஓடுகிறான். இடையில் அமெரிக்க போலீசால் பிடிக்கப்படுகிறான்.தூரத்தில் குண்டு வெடிக்கிறது.தானொரு போலீஸ் என்றும் மேயரை காப்பது தனது வேலை என்று கூறியும் நம்ப மறுக்கிறார்கள். சிதறி ஓடும் கூட்டத்தில் எதையோ பார்த்து போலீசின் பிடியில் இருந்து விடுவித்து கொண்டு ஓடுகிறான்.மேடையில் குண்டு வெடிக்கிறது. தப்பித்து ஓடும் என்ரிக்கை தொடர்ந்து போலீஸ் துரத்த அவன் ஓடுகிறான். இடையில் ஒரு காரின் மேல் இடித்து நிற்கிறான். காருக்குள் உள்ளவர்களிடம் தான் உயிருடன் உள்ளது ஆச்சரியமாக இருக்கிறதா என்று கேட்கிறான். உடன் அமெரிக்கா போலீசால் சுடப்பட்டு இறக்கிறான். இந்த கோணம் முடிகிறது.

நண்பகல் 12 மணி . கூட்டத்தில் படம் பிடித்து கொண்டிருந்த நபர் ஹோவார்ட் (Forest Whitaker) ஒரு அமெரிக்கா சுற்றுலா பயணி. அங்கிருந்த ஒரு நபருடன் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது தாயுடன் கூட்டத்தில் நடந்து செல்லும் ஆனா என்ற சிறுமியின் மேல் இடித்து விடுகிறார். அவள் கையிலிருந்த ஐஸ்கிரீம் தரையில் விழுகிறது. மன்னிப்பு கேட்கிறார். நகரத்து மேயர் பேசும் போது தாமஸ் எதிர் புற கட்டிடத்தை உற்று கவனிப்பதை பார்த்து அதை படம் பிடிக்கிறார். ஜனாதிபதி சுடப்படவுடன் தனது வீடியோ காமெராவை தாமஸ் க்கு தந்து உதவுகிறார். தூரத்தில் குண்டு வெடிக்கிறது. சிதறி ஓடிய கூட்டத்தில் சிறுமி ஆனா தன் தாயை காணமல் அழுகிறாள். அவளை ஒரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்து குண்டு வெடித்த பின் என்ரிக் ஓடிக்கொண்டிருக்கும் போது அவனை பின் தொடர்ந்து ஓடுகிறார். என்ரிக் போலீசால் சுடப்பட்டு இறந்த பின் திரும்பும்போது சாலையில் மீண்டும் ஆனா தன் தாயை பார்த்து விட்டு சாலையை கடந்து தாயிடம் ஓடுகிறாள். சாலையை கடக்கும்போது எதிரில் வரும் ஆம்புலன்ஸ் அவளை இடிக்கும் அளவு நெருங்கி வருகிறது. அவளை காப்பாற்ற ஹோவார்ட் ஓடுகிறார்.கோணம் முடிகிறது.

அடுத்த கோணத்தில் கதையின் சஸ்பென்ஸ் வெளிப்படுகிறது. தொடர்ந்து விவரிக்கப்பட்டு அனைத்து கோணங்களின் முடிவில் எல்லா சஸ்பென்ஸ்களும் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு கோணத்திலும் கதை சிறிதளவு நீட்சி அடைந்து மர்மம் விலகுகிறது. Vantage Point என்றால் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு வசதியான இடத்தில் இருந்து பார்ப்பது என அர்த்தமாகிறது.இப்படம் "குறி வச்சாச்சு" என தமிழிலும் வெளி வருகிறது.

ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படம் ஆரம்பம் முதல் கடைசி வரை புயல் வேகத்தில் பயணிக்கிறது.கடைசியில் வரும் கார் துரத்தல் கண்டிப்பாக எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவிற்க்காக பேசப்படும்.படம் நெடுக பார்வையாளர்களை இருக்கை நுனியில் வைத்திருக்க செய்யப்பட்ட முயற்சி வெற்றியடைந்துள்ளது.
read more "அமெரிக்க ஜனாதிபதிக்கு...குறி வச்சாச்சு"