கட்டுரை சொல்லவேண்டியதை சில படங்கள் சொல்கின்றன - ஜெர்மனி,சீனா கலாச்சார வேறுபாடுகள்

லியு யாங் (Liu Yang) எனும் சீன வடிவமைப்பாளர் இந்த படங்களை வரைந்துள்ளார். தொடர்பியல் வடிவமைப்பாளரான(Communication Designer) இவர் தற்போது ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார். ஜெர்மனிக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள கலாச்சார வேறுபாடுகள் பற்றி ஒரு கட்டுரை சொல்லவேண்டியதை சில படங்கள் மூலம் சொல்லிவிட்டார்.இடது பக்கத்தில் நீல வண்ணத்தில் இருப்பது ஜெர்மானிய கலாச்சாரம். வலது பக்கம் சிவப்பு நிறத்தில் இருப்பது சீன கலாச்சாரம்.(படங்களை பெரிதாக அதன் மேலே சொடுக்கவும்)

கருத்துகள்

தகவல் தொடர்பு

பார்ட்டி,விழா அல்லது கொண்டாட்டங்களின் போது

வரிசையில் காத்திருத்தல்

நேரம் கடைபிடிப்பு

உணவகத்தில் ( மக்கள் எழுப்பும் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதை குறிக்கிறார்)

தலைவர்

தற்போதைய பழக்க வழக்கங்கள்

பிரச்சினைகளை சந்தித்தல்

பயணித்தல்

வயதானவர்களின் வாழ்க்கை


கோபம்


உதவி: chinadigitaltimes.net
read more "கட்டுரை சொல்லவேண்டியதை சில படங்கள் சொல்கின்றன - ஜெர்மனி,சீனா கலாச்சார வேறுபாடுகள்"

தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்

இரண்டாவது பாடலில் பாட்டியாக வருவது கமல் தான்.









read more "தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்"

உலகின் மிக மெல்லிய தொலைக்காட்சி பெட்டி - தடிமன் 3 மிமீ மட்டுமே






சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ள சோனி நிறுவனத்தின் XEL-1 என்கிற தொலைக்காட்சி பெட்டி 3மிமீ தடிமன் மற்றும் 2 கிலோ எடை மட்டுமே கொண்டு உலகின் மிக மெல்லிய தொலைக்காட்சி பெட்டியாக இருக்கிறது.OLED(Organic Light Emitting Diode) தொழில்நுட்பத்தை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. திரையின் அகலம் 11''.மிக குறைந்த அளவு மின்சாரத்தை மட்டும் எடுத்து கொள்கிறது.LCD திரை தொலைக்காட்சி பெட்டிகளை விட வண்ணங்களை சிறப்பாகவும் படங்களை துல்லியமாகவும் காட்டுகிறது இந்த தொலைக்காட்சி பெட்டி.

LCD திரைக்கும் OLED திரைக்கும் உள்ள வித்தியாசம் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.



இந்த OLED நுட்ப முறை தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
read more "உலகின் மிக மெல்லிய தொலைக்காட்சி பெட்டி - தடிமன் 3 மிமீ மட்டுமே"

தசாவதாரம் பாடல்கள் MP3 வடிவில் தரவிறக்க... தமிழ் மசாலா சிறப்பு பதிவு

தசாவதாரம் பாடல்களை MP3 வடிவில் தரவிறக்க கீழே உள்ள தொடுப்பிற்கு செல்லவும்.

தசாவதாரம் பாடல்கள்
read more "தசாவதாரம் பாடல்கள் MP3 வடிவில் தரவிறக்க... தமிழ் மசாலா சிறப்பு பதிவு"

தசாவதாரம் பற்றி கமல் ,குழுவினர் பேட்டி மற்றும் படப்பிடிப்பு காட்சிகள்

video

video

நன்றி: கலாட்டா.காம்,சிஃபி.காம்
read more "தசாவதாரம் பற்றி கமல் ,குழுவினர் பேட்டி மற்றும் படப்பிடிப்பு காட்சிகள்"

MS Paint டில் மோனலிசா ஓவியம் வரையலாம்

விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் Paint எனும் சாதாரண பட வடிவமைப்பு மென்பொருள் மூலம் ஜேசன் என்பவர் மோனலிசா ஓவியத்தை வரைகிறார். Time Lapse Videography முறையில் இந்த சலனப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை மணி நேரத்தில் வரைந்து முடித்துள்ளார்.(சலனப்படம் சிறிது சிறிதாக தரவிறக்கம் ஆவாதால் முழு படமும் தெரிய சிறிது நேர அவகாசம் தேவை)

read more "MS Paint டில் மோனலிசா ஓவியம் வரையலாம்"

கமலஹாசனின் தசாவதாரம் - முன்னோட்டப்படம் (டிரைலர்)

read more "கமலஹாசனின் தசாவதாரம் - முன்னோட்டப்படம் (டிரைலர்)"

டைட்டானிக் கப்பல் மூழ்க தரம் குறைந்த ரிவிட்டுகளே காரணம்

தரம் குறைந்த ரிவிட்டுகளை பயன்படுத்தியதால் தான் அது பனிப் பாறையில் மோதியவுடன் உடைந்து கடலில் மூழ்க நேரிட்டதாக இரு ஆராச்சியாளர்கள் திமோத்தி போக்கே மற்றும் ஜெனிபர் மேக் கார்த்தி கூறுகின்றனர்.


டைட்டானிக் கப்பல் கட்டப்படும் போது

1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இரவில் அது வட அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது பெரும் பனிப்பாறை மீது மோதியது. இதில் கப்பல் உடைந்து, கடல் நீர் உள்ளே புகுந்து 1,500 பேருடன் டைட்டானிக் கப்பல் மூழ்கியது குறித்து நீண்ட காலமாகவே பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது இந்த இரு ஆராச்சியாளர்களும் எழுதியுள்ள புத்தகத்தில் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த ரிவிட்டுகள் சரியில்லாதது தான் கப்பல் உடைந்ததற்கு முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.


டைட்டானிக் கப்பல் சௌதாம்ப்டன், இங்கிலாந்திலிருந்து புறப்படும் போது

டைட்டானிக் கப்பலை கட்டிய வட அயர்லாந்தை சேர்ந்த ஹார்லான்ட் அன்ட் உல்ப் நிறுவனம் ஒரே சமயத்தில் மூன்று கப்பல்களைக் கட்ட வேண்டியிருந்ததால் டைட்டானிக் கப்பலை விரைவில் கட்டிமுடிப்பதற்காகவும் குறைந்த விலையில் முடிக்கவும் தரம் குறைந்த ரிவெட்டுகளை பயன்படுத்தியதாக திமோத்தி கூறுகிறார். இவர் ஒரு உலோகவியலாளர். ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலை கழகத்தில் உலோகவியல் ஆராய்ச்சிக்காக டைட்டானிக் கப்பலின் ரிவெட்டுகளை பற்றி படிக்கும் ஜெனிபர் அது பற்றி ரசாயன முறையிலும் கணினி வடிவமைப்பு மூலமும் ஆராய்ந்த போது அந்த ரிவிட்டுகள் தரம் குறைந்ததாக இருந்தது என கூறுகிறார்.

இரும்பு ரிவிட்டுக்களுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அதற்குப் பதில் ஸ்டீல் ரிவிட்டுக்களைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இரும்பை விட ஸ்டீல் ரிவிட்டுகள் உறுதியானவை.கப்பலின் மையப் பகுதியில் ஸ்டீல் ரிவிட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் கப்பலின் அடிப்பாகத்திலும்,பிற பகுதிகளிலும் இரும்பு ரிவிட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளனர்.ஆனால் இரும்பு ரிவிட்டுகள் பொருத்தப்பட்ட அடிப்பாகத்தில் தான் பனிப்பாறை மோதியது.

டிமோத்தியின் கூற்று என்னவெனில் தரமான ரிவிட்டுக்களை பயன்படுத்தியிருந்தால் பாதிப்பு சிறிது குறைந்து மூழ்கும் வேகம் குறைந்திருக்கும். மேலும் பலரை காப்பற்றியிருக்கலாம் என்கிறார். ஆனால் இந்த கப்பல் கட்டிய நிறுவனத்தின் முன்னாள் பொறியாளர் லிவிங்ஸ்டன் இதை மறுக்கிறார்.

வில்லியம் கார்ச்கி எனும் பொறியாளர் ரிவிட்டுகளின் தரத்தை விட அது அடிக்கப்பட்ட முறை தவறு என்கிறார். மேலும் விவரங்களுக்கு
Book by metallurgists blames rivets for Titanic tragedy
read more "டைட்டானிக் கப்பல் மூழ்க தரம் குறைந்த ரிவிட்டுகளே காரணம்"

நியூயார்க்கில் நல்ல தமிழ் நாட்டு உணவு மற்றும் சென்னையின் சிறப்பான உணவகங்கள்

ஒவ்வொரு முறை நியூ யார்க் செல்லும் போதும் மதிய உணவு பற்றி சுவாரஸ்யமான கேள்விகள் எழும். அங்கு இங்கு என விவாதித்து முடிவில் சரவண பவனுக்கே செல்லும் நிலை ஏற்படும். அங்கு சென்றால் நீண்ட வரிசை காத்திருக்கும். பட்டியலில் நம் பெயர் எழுதிவிட்டு தெருவில் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க வேண்டும். ஒரு வழியாக இடம் கிடைத்து உள்ளே நுழைந்து சாப்பிடும் மக்களின் பெரும் சத்தத்துக்கு இடையில் அங்கு ஆர்டர் எடுக்க வரும் ஸ்பானிஷ் பேரரிடம் இட்லி வடையை தெளிவாக மெனு கார்டு காட்டி அபிநயித்து சொன்னால் 20 நிமிடங்களில் வரும். மேலே சொர சொரவென்று இருக்கும் அந்த இட்லியுடன் இனிப்பான சாம்பார் சாப்பிடும் போது மறுபடியும் இது தானா என்று தோன்றும். சரி சாப்பாடு சாப்பிடலாம் என்றால் அது மேலும் சுமாராக இருக்கும். கூட்டம் அதிகமாகிவிட்டால் குவாலிட்டி குறைந்து விடும் என்று நண்பர் சொல்வார். அது தான் இங்கு நடக்கிறது. சென்ற முறை நியூ யார்க் சென்ற போது அடுத்த தெருவில் புதிய தமிழக உணவகம் "தமிழ்நாடு பவன்" திறக்கப்பட்டிருந்தது. சென்றோம். அதிக கூட்டமில்லை. எல்லா உணவும் தரமாகவே இருந்தன. இட்லி தமிழ் நாட்டு பாரம்பரியத்துடன் சுவையாக இருந்தது. இனி இங்கு தான்.

சென்னையில் இருந்த போது ஒவ்வொரு உணவகமாக தேடி தேடி சென்று சாப்பிட்டுள்ளோம். ஆனால் இதுவரை சரவண பவனில் சரியான இட்லி சாப்பிட்டது இல்லை. முருகன் இட்லி கடை வந்த பிறகு இட்லி என்றாலே அங்கு செல்வது வழக்கம். சூடான இட்லியுடன் ஐந்து வகை சட்னி மற்றும் இட்லி பொடியுடன் சாப்பிடுவது திருப்தியான ஒன்று. பாலாஜி பவன் என்றால் மாலை நேரத்தில் போண்டா சட்னி சக்கை போடு போடும். வார இறுதி நாட்களில் தி.நகர் பாலாஜி பவனில் தான் மாலை நேர சிற்றுண்டி. வசந்த பவனில் தோசை பிரபலம். பல்வேறு வகை தோசைகளை சாப்பிடலாம். ரத்னா கபே என்றாலே இட்லி சாம்பார் தான். முதல் நாள் தி.நகர் பாலாஜி பவன் திறந்தபோது இட்லி சாப்பிட வந்து தட்டில் இட்லியோடு ஆனால் சாம்பார் இல்லாமல், சாம்பார் தி.கேணி ரத்னா கபெயிலிருந்து வரவேண்டும் என்று சொன்னதால் தட்டோடு கல்லா அருகில் சென்று மல்லு கட்டியது நினைவுக்கு வருகிறது. இப்படி இட்லியோடும் உணவுகளோடும் சென்னையின் பல்வேறு நினைவுகள் உள்ளன. நீங்களும் சொல்லுங்களேன். சென்னையில் உங்களுக்கு பிடித்த உணவகம் எது என்று கீழே உள்ள வாக்கு பெட்டியில்.

read more "நியூயார்க்கில் நல்ல தமிழ் நாட்டு உணவு மற்றும் சென்னையின் சிறப்பான உணவகங்கள்"

இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு...

இரண்டு வாரங்கள் முன்பு புது கேமரா வாங்கி கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தேன். அதில் சில உங்கள் பார்வைக்கு. எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
படங்களை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்

முதல் படம் இந்த மாத புகைப்பட போட்டிக்கு...













read more "இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு..."

போதும் போதும்... தள்ளாதீங்க...



டோக்கியோவின் புற நகர் மற்றும் தரையடி ரயில் வண்டிகளில் Peek Hours எனப்படும் முக்கியமான அலுவல் சார்ந்த நேரங்களில் மக்கள் கூட்டம் அலை மோதும். விஞ்ஞான வளர்ச்சி மட்டுமின்றி மக்கள் தொகையிலும் ஜப்பானில் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது. டோக்கியோ எனும் மகா நகரமே ஒன்றரை கோடி பேருடன் விழி பிதுங்குகிறது. கார்கள் விலை அதிகம் மற்றும் கார்களை நிறுத்த இட வசதி மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் ரயில் வண்டிகளையே நாடுகின்றனர். ஆக இது போன்ற நெரிசல் மிகுந்த நேரங்களில் ரயில் நிலைய அதிகாரிகளே மக்களை உள்ளே தள்ளி கதவை சாத்துகின்றனர். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்ச்சி.
read more "போதும் போதும்... தள்ளாதீங்க..."

பிரபலங்கள் பலர் ஒரே படத்தில் - அற்புத ஓவியம்

சரித்திரத்தில் பிரபலமான நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு ஒரே படத்தில் இணைந்து உள்ளனர். முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை கண்டுபிடியுங்கள். அனைவரையும் கண்டுபிடிப்பது மிக கடினமே.இந்த படத்தின் படைப்பாளி யார் என தெரியவில்லை. இருந்தாலும் இது சுவாரஸ்யமான படமே. இது எந்த வகை படம், சர்ரியலிச படமா என தெரியவில்லை. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.படத்தை பெரிதாக்க அதன் மேலே சொடுக்கவும்.


read more "பிரபலங்கள் பலர் ஒரே படத்தில் - அற்புத ஓவியம்"

இந்த சலன(வீடியோ) படத்தின் முடிவில் கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள்.

video

இந்த சலன(வீடியோ) படம் நொடிக்கு 5000 நகர்வுகளை(5000 Frames Per Second) படம் பிடிக்கக்கூடிய phantom வகை காமேராவால் எடுக்கப்பட்டது.(Frames எனும் ஆங்கில சொல்லுக்கு நகர்வுகள் என குறிப்பிடலாம் என்று கூறிய நண்பர் இலவச கொத்தனாருக்கு நன்றிகள்).இந்த வீடியோ படம் வெளி வந்த போது சிறந்த விளம்பர படத்திற்கான விருது பெற்றது. இங்கிலாந்தை சேர்ந்த Choice FM என்ற பண்பலை வானொலி நிறுவனம் பதின்ம வயதினரிடம் தற்போது அதிகம் புழங்கும் துப்பாக்கிகள் மற்றும் அது சார்ந்த கொலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றி நண்பர் தஞ்சாவூரானின் பதிவு ஒன்றை பார்க்க நேர்ந்தது.
அமெரிக்காவில் பெருகி வரும் துப்பாக்கிப் பைத்தியங்கள் ...
( நண்பர் திரு.தஞ்சாவூரானுக்கு.. அனுமதி இல்லாமல் தங்கள் பதிவின் சுட்டி கொடுத்ததற்கு மன்னிக்கவும் )

மேலும் இது பற்றி இணையத்தில் துழாவும் போது இந்த செய்தி கிடைத்தது.சமீப காலங்களில் இது போன்ற பள்ளி கல்லூரிகளில் துப்பாக்கி சூடு நடப்பது அதிகரித்துள்ளது. விர்ஜீனியா சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மாதம் இரண்டு சம்பவங்கள் இது போல் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நடந்து கொண்டுள்ளது. மற்ற நாடுகள் மட்டுமன்றி இந்தியாவிலும் டெல்லி மற்றும் தமிழகத்திலும் இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இளம் தலை முறையினருக்கான கலாச்சாரம் மற்றும் சூழ்நிலை மாற்றங்களே இதற்க்கு காரணங்கள். மூன்று வயது முதல் சினிமா, தொலைகாட்சி, வீடியோ கேம் என அனைத்திலும் வன்முறையே காணும் சிறு வயதினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தூண்டி விடுகிறது.

இந்த விளம்பரப்படம் உண்மையான துப்பாக்கி கொண்டு எடுக்கப்பட்டதால் அமெரிக்க படப்பிடிப்பு நிறுவனங்களில் இதற்கு அனுமதியில்லை. பிறகு துப்பாக்கி குற்றம் பற்றிய விழிப்புணர்வு படம் என்பதால் அனுமதிக்கப்பட்டது. இந்த படத்தில் வரும் சிறுவனின் உறவினர் ஒருவரும் இது போன்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்.
read more "இந்த சலன(வீடியோ) படத்தின் முடிவில் கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள்."