நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் தளங்களான யூடியூப்(Youtube),பிகாஸா வெப்(Picasa Web),ஃபிலிக்கர்(Flickr),கூகிள் இமேஜ் சர்ச்(Google Image Search),யாஹூ இமேஜ் சர்ச்(Yahoo Image Search) போன்ற தளங்களில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை அவற்றின் தளங்களில் ஒவ்வொரு பக்கமாக முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ பார்ப்பது சிறிது சிரமத்தையே கொடுக்கும்.ஆனால் நீங்கள் யூடியூப்இல் தேடிய ஒரு குறி சொல்லுக்கான வீடியோக்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் ஒருவித முப்பரிமாண எபெக்டுடன் அனைத்து வீடியோக்களையும் பார்க்க வசதி செய்து தருகிறது இந்த Piclens மென்பொருள்.இது அப்படியே ஃபிலிக்கர்,மற்றும் கூகிள் இமேஜ் சர்ச்,யாஹூ இமேஜ் சர்ச் போன்ற தளங்களுக்கும் பொருந்தும்.புகைப்படங்களை அதிகம் விரும்பி பார்ப்பவர்களுக்கு இது சுவாரஸ்யமான மென்பொருள்.
விளக்க வீடியோ படம் கீழே.
கீழே உள்ள இந்த ப்பிக்க் லென்ஸ்(Piclens) தளத்திற்கான தொடுப்பை Piclensசொடுக்கி இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மென்பொருளை நிறுவிய பிறகு மேல் குறிப்பிட்ட தளங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் காட்டப்படும் படங்கள் அல்லது வீடியோ Icon களில் கீழ் இடது ஓரத்தில் சிறு அம்புக்குறி காட்டப்பட்டிருக்கும்.அதை சொடுக்கினால் ப்பிக்க் லென்ஸ்(Piclens) மென்பொருள் இயங்க ஆரம்பிக்கும்.சொடுக்கியை கொண்டு முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்லலாம்.
வழக்கமாக தேடு தளங்கள்(Search Engines) கொடுக்கப்படும் குறி சொற்களுக்கு, சம்பந்தப்பட்ட இணைய தளங்களின் தகவல்களை, இணைய முகவரிகளை வார்த்தைகளில் காண்பிக்கும்.இந்த செர்ச் மி தளம் Searchme அந்த இணைய தளங்களின் முகப்பு பக்கங்களையே படங்களாக காண்பிக்கிறது.அந்த முகப்பு பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டி பார்ப்பது போல் ஒரு முப்பரிமான தேடல் வசதியை கொடுக்கிறது இந்த செர்ச் மி தளம்.தற்போது பீட்டா பதிப்பில் உள்ளது. முழுமையாக வெளியிடப்படும் போது மேலும் சிறப்பாக தேடும் என எதிர்பார்க்கலாம். குறிப்பு: இந்த தளத்தில் நுழையும்போது Pop-up Blocker ஐ செயலிழக்க செய்யவும்.
தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும் Searchme இந்த தளம் குறித்த வீடியோ படம் கீழே...
இன்று யுடியூப் தளத்தை பார்வையிட்டபோது புதிய வசதி ஒன்று காணப்பட்டது.தளத்தில் தேடுவதற்காக குறி சொற்களை(Key word)உள்ளிடும் போது உடன் அந்த சொற்களில் ஆரம்பிக்கும் மற்ற தேடு குறி சொற்கள் வரிசையாக பட்டியலிடப்படுகின்றன.நாம் தேடும் குறி சொல்லை முழுமையாக தட்டச்சு செய்யும் தேவையில்லாமல் சுட்டியினாலேயே சொடுக்கி தேடலாம்.மேலும் நாம் தேடும் குறி சொல் சார்ந்த மற்ற சொற்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.இந்த வசதி "Suggestions" என்று அழைக்கபடுகிறது.சிறு விளக்க படம் கீழே
கடந்த 27 நாட்களாக செவ்வாயில் பல்வேறு ஆய்வுகளை செய்து வரும் பீனிக்ஸ் ஆய்வு கலம்(Phoenix Mars Lander) கடந்த ஜூன் 15 ம் தேதி தன் ரோபாடிக் கரங்களால்(Robotic Arms) செவ்வாயின் தரை பகுதியை தோண்டிய போது சில வெள்ளை நிற படிமங்கள் தென்பட்டன. முதலில் அவை உப்பு படிமங்களாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.
ஜூன் 16ம் தேதி கூட தென்பட்ட அந்த படிமங்கள் மூன்று நாட்கள் கழித்து ஜூன் 19ம் தேதி மீண்டும் அந்த தோண்டப்பட்ட பகுதியை பார்த்த போது ஆவியாகியிருந்தன.ஆகவே செவ்வாய் கிரகத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தரையில் 5 செமீ ஆழத்தில் பனிக்கட்டிகள் படர்ந்திருப்பது உறுதியாகிறது என கலிபோர்னியாவின் ஜெட் ப்ரோபல்சன் ஆய்வக(Jet Propulsion Laboratory)விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கீழே உள்ள படம் பனிக்கட்டி உருகுவதற்கு முன்னும்,பின்னும் எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றுடன் ஒன்று மேற் பொருத்தப்பட்டு காண்பிக்கப்படுகிறது.
கீழே பனிக்கட்டி இருந்த இடம் கருப்பு கட்டத்தில் காட்டப்பட்டுள்ளது.படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்.
இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திருக்கும் யாஹூ தனியாக தளம் வெளியிட்டுள்ளது.சென்னை தளத்தில் சென்னை செய்திகள்,நிகழ்வுகள்,வரைபடம்,புக் மார்க்குகள்,பயணம்,பதிவுகள்,பதில்கள்,தமிழ் உலகம்,போட்காஸ்ட்கள்,வெப்பநிலை மற்றும் பல பகுதிகள் உள்ளன.புக் மார்க்குகள் பகுதியில் சென்னை போக்குவரத்து பற்றிய தற்போதைய நிலவரம் மற்றும் பல பயனுள்ள வலை தளங்களின் தொகுப்பு உள்ளது.தற்போது இந்த தளம் பீட்டா வடிவில் உள்ளது.
கிட்டத்தட்ட 890 டன்கள் உடல் தீங்கு விளைவிக்கும் குப்பை பொருட்கள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்தில் 35 கண்டெய்னர்களில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் மூன்று வருடங்களாக.2005 ஆம் ஆண்டு நியூஜெர்சி,அமெரிக்கா விலிருந்து அனுப்பப்பட்ட இந்த குப்பை பொருட்கள் ஒரு இந்திய நிறுவனத்தின் "பழைய பேப்பர்" இறக்குமதிக்காக பெறப்பட்டுள்ளது.
(நன்றி:Times Now) ஆனால் வெறும் பழைய பேப்பர் மட்டுமில்லாமல் பாலிதீன் பைகள்,கோக் பாட்டில்கள்,பூச்சி மருந்து பைகள்,உபயோகபடுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் உலோக கம்பிகள் ஆகியவற்றை கொண்டுள்ளன.மேலும் புற்று நோயை ஏற்படுத்தும் பொருட்களும் இதில் அடங்கியுள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி.
2007 இல் சென்னை உயர் நீதி மன்றம் இதற்காக ஒரு கமிட்டி நியமித்தது.அதன் ஆய்வறிக்கையில் இந்த கழிவு பொருட்கள் சுற்றுப்புற சூழ்நிலைக்கும் மக்களுக்கும் பெரும் தீங்கு இழைக்கும் என கூறியது.இதை தொடர்ந்து சென்னை உயர் நீதி மன்றம் இந்த குப்பைகளை மீண்டும் நியூஜெர்சி,அமெரிக்கா விற்கே திருப்பி எடுத்துச் செல்லப் படவேண்டும் என தீர்ப்பளித்தது.
ஆனால் இன்னும் அந்த குப்பைகள் துறைமுகத்திலேயே உள்ளன.இந்திய நிறுவனம் அதை திருப்பி அனுப்பும் பொறுப்பை ஏற்று கொள்ள மறுக்கிறது.அமெரிக்க நிறுவனமும் இந்த குப்பைகளை திருப்பி எடுத்து கொள்ள மறுக்கிறது.மாசு கட்டுப்பாடு அமைப்பின் அதிகாரி BP சுக்லா கூறுகையில் இந்த மாதிரி கழிவு பொருட்கள் இந்தியாவினுள் இருக்க அனுமதிக்க பட முடியாது என்கிறார்.
இது போன்று கழிவு பொருட்கள் வருவது இது முதல் முறை அல்ல என்றும் ஏற்கனவே இது போல பல முறை வந்துள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருந்து கொச்சியில் வந்திறங்கிய தீங்கு விளைவிக்கும் கழிவு பொருட்கள் திருப்பி அனுப்பபட்டன.ஆனால் யாரும் பொறுப்பெடுத்து கொள்ளாததால் இன்னும் அந்த 890 டன்கள் கழிவுப் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலேயே கிடக்கின்றன.
ஐபிஎம் தயாரித்துள்ள இந்த சூப்பர் கணிப்பொறி ஒரு வினாடியில் 1000 ட்ரில்லியன் கணக்குகளை அல்லது ஒரு பெடா பிளாப் அல்லது ஒரு குவாட்ரில்லியன் கணக்குகளை செய்யும் திறன் கொண்டது.அதாவது ஒன்று போட்டு அதன் பின்னால் பதினைந்து பூஜ்ஜியங்களை போட்டால் (1000000000000000) அது தான் ஒரு குவாட்ரில்லியன்.
தற்போது உபயோகத்திலுள்ள ஒரு லட்சம் அதிவேக மடி கணினிகளுக்கு(Laptop) சமம் இந்த ரோட் ரன்னர்.கடினமான பௌதீக(Physics) கணக்குகளை அதிவேகமாக செய்து முடிக்கும். இது 12,000 சதுர இடத்தை ஆக்கிரமிக்கும்.இதன் இயங்கு தளம்(Operating System)Red Hat Linux.ஒரு Shopping mall க்கு தேவையான மின்சார சக்தி இதற்கு தேவைப்படும்.GB க்களில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.80 TeraBytes Memory கொண்டது.
உண்மையில் சோனி பிளே ஸ்டேஷன் வீடியோ விளையாட்டில் உபயோகிக்கும் செல் ப்ராசெசர்கள் மற்றும் ஆப்ட்ரான் ப்ராசெசர்கள்களை வைத்து இந்த ரோட் ரன்னர் தயாரிக்கப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோவிலுள்ள லாஸ் அலமொஸ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்படவுள்ள இந்த கணிப்பொறி வானவியல்,அணுவியல்,காலநிலை மாற்றங்கள் ஜீனோம் ஆராய்ச்சிகளுக்கு உபயோகப்படுத்தப்படும்.
e2save எனும் மொபைல் போன் விற்பனை இணைய தளம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ 1985 முதல் இன்று வரையான மொபைல் போன்களின் பரிணாம வளர்ச்சியினை காட்டுகிறது. உலகின் முதல் மொபைல் போன்,முதல் கேமரா உள்ளடக்கிய மொபைல் போன்,இன்று ஒரு நாளில் விற்கப்படும் மொபைல் போன்களின் எண்ணிக்கை,முதலில் அறிமுகமான Clamshell எனப்படும் மூடி திறக்கப்படும் போன் ஆகியவற்றின் சுவாரஸ்யமான தகவல்களை தருகிறது.
உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை தற்போது தமிழிலும் பார்த்து உபயோகிக்கலாம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலது பக்கம் மேலே உள்ள Settings ஐ சொடுக்கி பின்னர் வரும் திரையில் Gmail display language -ல் தமிழை தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்தி சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.(படத்தை பெரிதாக்க மேலே சொடுக்கவும்)