வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம்

Wall-E படம் திரை இடப்படுவதற்கு முன்பு இந்த குறும்படத்தை காட்டினார்கள்.சிறப்பாக இருந்தது.

Prest from Prem Kumar on Vimeo.
read more "வால்ட் டிஸ்னி-பிக்ஸாரின் கலக்கும் அனிமேஷன் குறும்படம்"

அமுலின் 20-20 கிரிக்கெட்,பெட்ரோல் விலை,தசாவதாரம் விளம்பர கருத்து சித்திரங்கள்

அமுல் நிறுவனம்(Amul) நிகழ் கால சம்பவங்களை சிறிது நகைச்சுவை கலந்து கருத்து சித்திரங்கள் மூலம் 1967 முதல் இன்று வரை விளம்பரம் செய்து வருகிறது.இது போன்ற விளம்பர பலகைகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.சில்வெஸ்டர் டிகன்ஹா(Sylvester daCunha)என்பவர் மேலாளராக அமுல் விளம்பர பிரிவில் பொறுப்பெடுத்து கொண்ட பிறகே இது போன்ற விளம்பரங்கள் வெளிவர ஆரம்பித்தன.சமீபத்தில் வெளிவந்த சில அமுல் விளம்பரங்கள்...


read more "அமுலின் 20-20 கிரிக்கெட்,பெட்ரோல் விலை,தசாவதாரம் விளம்பர கருத்து சித்திரங்கள்"

அசத்தும் கால் அவுட்(Kallout)-இணைய தேடல் மேலும் எளிதாகிறது


இணையத்தில் தேடும் போது தேடு பொறி தளத்தில் குறிச்சொல் கொடுத்து வரும் பல விதமான முடிவுகளில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து அந்த தளங்களுக்கு சென்று நமக்கான சரியான பதில் கிடைக்கிறதா என்று தேடுகிறோம்.

அவ்வாறாக இல்லாமல் கால் அவுட் மென்பொருள் நிறுவுவதன் மூலம் இணைய பக்கத்திலோ,ஆபீஸ் வேர்ட் பக்கத்தில்,எக்ஸ்செல் பக்கத்தில்,நோட் பேட் பக்கத்தில் என எங்கு வார்த்தை இருந்தாலும் அதை சுட்டியால் தேர்வு செய்துவிட்டால் அந்த வார்த்தையே தேடவேண்டிய குறிச்சொல்லாக கருதப்பட்டு வலது பக்கம் சிறிய விண்டோ அல்லது Palette திறந்து அந்த வார்த்தைக்கு உரிய கூகிள் தேடல்,யாஹூ தேடல்,விக்கி தேடல்,டிக்சனரி தேடல்,அமேசான் தேடல்,ஈபே தேடல்,கூகிள் ஃபைனான்ஸ்,மற்றும் படங்களில் ஃபிளிக்ர் மற்றும் கூகிள் இமேஜஸ்,யூடியுப்,கூகிள் மேப்ஸ் தேடல் என அந்த ஒரு குறி சொல்லுக்கு பல்வேறு தேடல் முடிவுகளை ஒரு சிறிய விண்டோவில் காண்பிக்கிறது.

அந்த தளங்களுக்கு உலாவியில் சென்று உள்ளீடு கொடுத்து தேட வேண்டிய அவசியமில்லாமல் சாதாரணமாக வார்த்தையை தேர்ந்தெடுத்து வேண்டிய முடிவுகளை வெகு விரைவில் பெறமுடிகிறது. பதிவின் முடிவில் வரும் படக்காட்சி மேலும் விளக்கமாக சொல்கிறது.

கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி கால் அவுட் மென்பொருளை தரவிறக்கம் செய்யலாம்.

Kallout

என் வீட்டில் கால் அவுட் சிறப்பாக வேலை செய்தாலும்,அலுவலகத்தில் ப்ராக்சி சர்வர் உபயோகிப்பதன் காரணமாக கால் அவுட் வேலை செய்யவில்லை என கால் அவுட் மென்பொருள் நிறுவன தலைவர் லீ லோரன்சன்(Lee Lorenzen)க்கு நேற்று தொலை பேசியில் கூறினேன்.அவர்,இந்த குறையை தற்போது அவரது தொழில் நுட்ப குழு சரி செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் வெளி வரும் அடுத்த பதிப்பில் இது முழுமையாக சரி செய்யப்படும் என கூறினார்.


Kallout from Prem Kumar on Vimeo.
read more "அசத்தும் கால் அவுட்(Kallout)-இணைய தேடல் மேலும் எளிதாகிறது"

தி மம்மி 3 - திரைப்பட முன்னோட்டம்

வரும் வெள்ளிக்கிழமை வெளி யாகும் தி மம்மி 3 - திரைப்பட முன்னோட்டம்


The Mummy 3 Tomb of the Dragon Emperor Trailer HD from XSonicX on Vimeo.
read more "தி மம்மி 3 - திரைப்பட முன்னோட்டம்"

360 டிகிரியில் சிறப்பானதொரு மதுபானக்கடை மற்றும் உணவகம்

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில்,லிமா நகரத்தில் உள்ள ப்ளூ மூன்(Blue Moon) உணவகம் மற்றும் மதுபானக்கடை உலகின் சிறப்பான மதுபான வகைகளுக்கும்,Buffet முறையில் உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது மட்டுமன்றி உலகின் இரண்டாவது பெரிய பாட்டில் சேகரிப்பை கொண்டுள்ளது.

உணவகம் முழுவதும் 17,500 பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.உணவகத்தை அரிய பழம் பொருட்களால் நிரப்பி வைத்துள்ளார்கள்.இந்த உணவகத்தை நடத்துபவர் ஒரு இத்தாலியர்.100,150 வருடங்களுக்கு முந்தைய மதுபான வகைகள் உடன் கிடைக்கிறது.வித்தியாசமான இந்த உணவகத்தை ஒரு நிறுவனம் பல கோணங்களில் படம் பிடித்து ஒரு முழுமையான 360 டிகிரி Panoramic பார்வையில் காட்டியுள்ளது.கீழேயுள்ள படங்களை சொடுக்கி வித்தியாசமான அந்த உணவத்தை ஒரு Panoramic பார்வை பாருங்கள். கூரை மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பாட்டில்களை கவனியுங்கள்.தளத்திற்கு சென்ற பிறகு சொடுக்கி(Mouse)யின் பொத்தானை அழுத்திக்கொண்டு இடப்புறம் மற்றும் வலப்புறமாக நகர்த்தி முழு பார்வை பார்க்கலாம்.அதே போல் மேலும் கீழுமாக.சொடுக்கியின் Mouse Wheel சுற்றுவதன் மூலம் Zoom செய்தும் பார்க்கலாம்.









read more "360 டிகிரியில் சிறப்பானதொரு மதுபானக்கடை மற்றும் உணவகம்"

சுவாரஸ்யமான விண்வெளி நிலைய வாழ்க்கை வீடியோ


16 நாடுகள் இணைந்து தனி தனியான ஒவ்வொரு பகுதிகளையும் விண் கலங்கள் மூலமாக எடுத்து சென்று பூமியின் சரியான வட்ட பாதையில் நிறுத்தி இணைத்து உருவாக்கப்பட்டுள்ள
356 அடி நீளம் 290 அடி அகலம் கொண்டு 1 ஏக்கர் பரப்பளவில் சூரிய சக்தி கிரகிக்கும் அடுக்குகளை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம்(International Space Station)ஒரு பொறியியல் ஆச்சரியம்.

பூமியிலிருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் இந்த நிலையம் 1998 கட்ட ஆரம்பிக்கப்பட்டது.2010 இல் கட்டி முடிக்கப்படும்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஆய்வாளர்களின் முக்கியமான பொழுதுபோக்கு அங்கிருந்தது பூமியை பார்த்து கொண்டிருப்பது.45 நிமிடங்களுக்கு ஒரு முறை சூரிய உதயமும், அஸ்தமனமும் மாறி மாறி நிகழும்.

ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில்,ஆய்வாளர்களின் அன்றாட வாழ்க்கையில் உண்பது,உறங்குவது,உடல் பேணுதலும் சிரமமான விஷயங்கள் போலவே தெரிகிறது.


Life in Space Station from Prem Kumar on Vimeo.
read more "சுவாரஸ்யமான விண்வெளி நிலைய வாழ்க்கை வீடியோ"

உலகின் முதல் இணைய தளம்


வலையுலக பிதாமகன் என அழைக்கப்படும் டிம் பெர்னர்ஸ் லீ(Tim Berners Lee) 1990 ஆம் ஆண்டு CERN இல் (ஐரோப்பிய அணுசக்தி ஆய்வு கழகத்தில்) ஆய்வு செய்து கொண்டிருந்த போது Hypertext எனும் தொடர்ச்சியாக எழுத்து வடிவங்களை இணைக்கும் கருதுகோள் மூலம் சிறு கணினியையும் இணையத்தையும் இணைத்து உலகின் முதல் இணைய தளத்தை உருவாக்கினார்.

முதலில் CERN க்காக ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த இணைய தளம் மற்றும் இணைய பக்கங்கள் உபயோகிக்கப்பட்டன.பின்னர் 1992 ஆம் ஆண்டு உலகின் மற்ற ஆய்வு கூடங்களில் கணினி வழங்கிகள் வந்த பிறகு இணையம் உலகில் பரவ ஆரம்பித்தது.

World's First Web site

1990 இல் டிம் பெர்னர்ஸ் பின்னிய அந்த இணைய தளத்தின் உண்மையான பக்கம் தற்போது இல்லை எனினும் 1992இல் டிம் பெர்னர் அந்த தளத்தின் ஒரு பக்கத்தின் நகல் எடுத்து World wide web Consortium தளத்தில் வைத்துள்ளார்.

Web page of World's first Web site


உலகின் முதல் இணையதளத்திற்காக டிம் பெர்னர்ஸ் உபயோகித்த கணினி மற்றும் வழங்கி இங்கே.
தற்போது எளிமையாக தெரியும் அந்த இணைய பக்கத்தில் ஆரம்பித்து இன்று உலகத்தையே புரட்டி போட்டு விட்டது உலகளாவிய இணைய வலை.இணைய வலையை கண்டுபிடித்ததற்காக பல்வேறு விருதுகள் பெற்ற டிம் பெர்னர்ஸ் உலகின் வாழும் அறிவுஜீவிகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்து 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து knight பட்டம் பெற்றார்.

முன்னொரு காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக Global village பின் Global Hut என்ற பின்னர் Global Desktop என்றாகி தற்போது Global Palm என செல் பேசிகளிலும் இணைய பக்கங்கள் உள்நுழைந்து உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.சென்ற ஜூன் மாத கணக்குப்படி உலகின் மொத்த இணைய தளங்களின் எண்ணிக்கை 17,23,38,726. சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் இணைய தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. டிம் பெர்னர்ஸ் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இணைய தொழில் நுட்பங்களையும் வளர்ச்சியையும் பார்த்து தினம் தினம் ஆச்சர்யப்பட்டு கொண்டிருப்பார்.
read more "உலகின் முதல் இணைய தளம்"

புகைப்படங்களை Slideshow செய்து DVD/CD யில் பதிய...

இப்போதெல்லாம் அனைவரும் நிறையவே புகைப்படங்கள் எடுக்கிறோம்.அதில் சிறப்பான புகைப்படங்களை கணினியில் மட்டும் பார்த்து கொள்ளாமல்,அவற்றை ஒன்று சேர்த்து Slideshow செய்து DVD அல்லது CD யில் பதிந்து தொலைக்காட்சி பெட்டியின் மூலம் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் வரவேற்பறையில் காட்டும் வழி முறை பற்றி நண்பர் நடராஜன் கேட்டிருந்தார்.

Photostage எனும் ஒரு எளிய மென்பொருள் மூலம் இதை செய்யலாம்.இந்த மென்பொருள் மூலம் மிக எளிதாக நாம் எடுத்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து Slideshow செய்து அதை DVD அல்லது CD யில் பதிந்து கொள்ளலாம்.மேலும் மெருகூட்ட நமக்கு பிடித்த பின்னணி இசையை சேர்க்கலாம்.Slideshow வில் ஒவ்வொரு படத்திற்கும் அந்த பட சம்பந்தமான விவரங்களை Caption மூலம் கொடுக்கலாம்.உங்கள் குரலிலேயே படங்களுக்கு வர்ணனை செய்து பதிவு செய்யலாம்.இது ஒரு இலவச மென்பொருள்.

இதை விடவும் சிறப்பான மென்பொருள்கள் இருந்தாலும் Photostage பயனர்களுக்கு உபயோகிக்க எளிதானது.Photostage மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

Photostage

சிறிய உதாரணமாக எனது சில புகைப்படங்களை Photostage மூலம் பின்னணி இசை மற்றும் Caption சேர்த்து Slideshow செய்தேன்.


Slideshow from Prem Kumar on Vimeo.
read more "புகைப்படங்களை Slideshow செய்து DVD/CD யில் பதிய..."

Flash News அஹமதாபாத்தில் குண்டு வெடிப்பு நேரடி வீடியோ செய்தி

பெங்களூரை தொடர்ந்து அகமதாபாத் நகரில் இன்று அடுத்தடுத்து 17 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.ஜவஹர் செளக்,சக்லா,சரங்பூர்,அம்ரல்வாடி,கோவிந்த்வாடி-கிஷான்பூர், ஹத்கேஸ்வர்,மணி நகர்,பாபு நகர் உள்பட 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

கடைசியாக வந்த செய்தி: 45 பேர் இறப்பு. 100 பேர் காயமடைந்துள்ளனர்.

குண்டுகள் வெடிக்க 5 நிமிடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது.

குண்டுவெடிப்பு செய்திகளை ஐபிஎன் தொலைக்காட்சியிலிருந்து நேரடியாக
காண கீழே தொடுப்பை சொடுக்கவும்.

Ahmedabad Bomb Blasts-IBNLIVE

மாலை 6.45 மணியளவில் பாபு நகரில் முதல் குண்டு வெடித்தது.வெடிகுண்டுள் அனைத்தும் சைக்கிள்கள் மற்றும் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்புகளில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.உயிரிழப்பு பற்றி சரியான தகவல் இல்லை.பாபு நகரில்,ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது.

பெங்களூரைப் போலவே அகமதபாத்திலும் குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே வைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


நன்றி: ஐபிஎன்
read more "Flash News அஹமதாபாத்தில் குண்டு வெடிப்பு நேரடி வீடியோ செய்தி"

பெங்களூர் குண்டு வெடிப்புகள் - செய்தி வீடியோ

:-(((((((

தொடுப்பை சொடுக்கி செய்தி வீடியோ தளத்திற்கு செல்லவும்.

Bangalore Blasts News Video

நன்றி:IBNLive
read more "பெங்களூர் குண்டு வெடிப்புகள் - செய்தி வீடியோ"

குசேலன் முன்னோட்டப்படம் - சற்று துல்லியமாக

read more "குசேலன் முன்னோட்டப்படம் - சற்று துல்லியமாக"

பூமியை கடந்து செல்லும் நிலா- 3 கோடி கிமீ தொலைவிலிருந்து ஒரு பார்வை

வான்வெளி சரித்திரத்தில் முதன் முறையாக,வால் நட்சத்திர ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட EPOXI எனும் விண்கலம் பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் இருந்து பூமியை நிலா அதன் பாதையில் கடந்து செல்லும் போது படம் பிடித்தது.இது மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு உதவும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.Time Lapse முறையில் உருவாக்கப்பட ஒளி பட காட்சி.


செய்திகள் View of Earth and Moon
read more "பூமியை கடந்து செல்லும் நிலா- 3 கோடி கிமீ தொலைவிலிருந்து ஒரு பார்வை"

The Dark Knight திரை விமர்சனம் மற்றும் ஜோக்கரின் ஆளுமை


ஜோக்கர்(Heath Ledger)


பேட்மேன்(Batman) பட வரிசையில் மீண்டுமொரு திரைப்படமாக வெளிவந்துள்ளது தி டார்க் நைட்(The Dark Knight).இது வரை வந்த பேட்மேன் பட வரிசையிலே மிகவும் சீரியஸ் ஆகவும், சிறப்பாகவும் உள்ளது.குற்றங்கள் நடக்கும் போது பேட் மேன் ஆகவும் மற்ற நேரங்களில் பெரும் பணக்காரராக,பேட்மேன் திரைப்படங்களின் கற்பனை நகரமான கோத்தம்(Gotham) நகரத்தில் முக்கியமான மனிதராகவும் இருக்கும் புரூஸ் வைன்(Bruce Wayne),பேட் மேன் வேலைகளை விட்டு விட்டு சாதாரணமாக வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார்.பேட்மேன் பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல்(Christian Bale)நடித்துள்ளார்.ஆனால் இன்னும் நகரத்தில் யாருக்கும் பேட்மேன் யார் என்ற உண்மை தெரியாது.பேட்மேன் யார் என்ற உண்மை தெரிந்தவர்கள் அவரை கவனித்து கொள்ளும் பட்லர் மைகேல் கேயின்(Michael caine)மற்றும் அவர் நிறுவன காப்பாளர் மோர்கன் ப்ரீமன்(Morgan Freeman)மட்டுமே.

இதை பயன்படுத்தி பலர் பேட்மேன் வேடம் அணிந்து கொண்டு அந்த இடத்தை கைப்பற்ற நினைக்கின்றனர்.குற்றங்கள் அதிகரிக்கின்றன.நகரின் காவல்துறை உயர் அதிகாரி கோர்டன்(Gary Oldman),மற்றும் டிஸ்டிரிக்ட் அட்டர்னியாக வரும் ஹார்வி டென்ட்(Aaron Eckhart)இருவரும் இணைந்து கோத்தம் நகரத்தை குற்றமில்லா நகரம் ஆக்க முயல்கிறார்கள்.ஆகவே பேட் மேன் இவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து சுதந்திரமாக விரும்புகிறார்.பெரும் வங்கி கொள்ளை நடக்கிறது.தொடர்ந்து நடைபெறும் பேரங்களும் மாஃபியா கும்பலின் நடவடிக்கைகளும் கோர்டனையும், ஹார்வியையும் எச்சரிக்க,அவர்களை பிடிக்க திட்டமிடுகின்றனர்.

இந்த நேரத்தில் கோத்தம் நகரத்தை தன் வசப்படுத்தவும்,பேட் மேன் யார் என்பதை தெரிந்து கொள்ளவும் வரும் ஜோக்கர்(Heath Ledger) நகர காவல் அதிகாரிகள்,மாபியா கும்பல்கள் மற்றும் பேட்மேன் அனைவரின் கண்களிலும் விரல் விட்டு ஆட்டுகிறார்.எதிரில் வரும் எந்த சிக்கலையும் அடித்து துவம்சம் செய்து அனைவரையும் பீதிக்கு ஆளாக்குகிறார்.வேட்டை ஆரம்பிக்கிறது.பேட்மேன்,கோர்டன்,ஹார்வி அனைவரும் ஜோக்கரை மற்றும் மாஃபியா கும்பலை அழித்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நினைக்கின்றனர்.ஆனால் ஒவ்வொரு முறையும் ஜோக்கர் தப்பித்து செல்கிறார்.முடிவு எதிர்பார்த்த மாதிரியே இருக்கிறது.

படம் முழுவதும் ஜோக்கர் வியாபித்து நிற்கிறார்.இவர் வரும் இரண்டாம் காட்சியிலிருந்து படம் முடியும் வரை மொத்தமாக பார்வையாளர்களை தன் வசம் இழுத்து கொள்கிறார். முகம் முழுவதும் வெள்ளை,கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் பூசி வரும் ஜோக்கர் சிறு கத்தியை கையில் வைத்து கொண்டு,படு ஸ்டைலாக முடியை ஒதுக்கி விட்டு,நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி பேசும் சரியான வசன உச்சரிப்புகள்,மற்றும் உடல் மொழி அசைவுகளில் பின்னிஎடுப்பது என படம் முழுவதும் அதகளம் பண்ணுகிறார்.

இவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் பெரும் கைத்தட்டல் எழுகிறது.நிஜ ஜோக்கர் போல வந்தாலும் வந்த சிறிது நேரத்தில் இவர் செய்யும் காரியங்கள் குறிப்பாக ஒரு மாஃபியா தலைவனின் வாய்க்குள் கத்தியை விட்டு பேசும் வசனங்கள் பார்வையாளர்களை கண்டிப்பாக பதட்டத்திற்கு உள்ளாக்கும்.பென்சிலை மறைய வைக்கிறேன் பார்க்கிறீர்களா என கேட்டு கொண்டே செய்யும் அதிரடியிலாகட்டும்,விருந்தில் உள்ளே புகுந்து "Ladies and Gentlemen,we are the entertainers for the night" என்று படு ஸ்டைலாக வசனம் பேசியபடி கதாநாயகியை மிரட்டுவது,அந்த படு பிரம்மாண்டமான சேசிங் காட்சி,சிறை காட்சிகள்,பின்னர் மருத்துவமனையுள் புகுந்து அதை சிதறடிப்பது என படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார்.தேர்ந்த நடிகர்களான கிறிஸ்டியன் பேல்,மைகேல் கேயின்,மோர்கன் ப்ரீமன்,கேரி ஒல்ட்மன் என அனைவரையும் முந்தி படம் முழுவதும் ஆளுமை செய்கிறார்.சரியான வில்லன்.ஆனால் இந்த நடிகர் சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு முடிந்தபின்,மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அதிகம் சாப்பிட்டதால் இறந்து விட்டார் என்பது சோக செய்தி.இவர் இதற்கு முன் புரோக்பேக் மௌன்டைன்(Brokeback Mountain)என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

படத்தை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலன்(Christopher Nolan),இதற்கு முன் பேட்மேன் பிகின்ஸ்(Batman Begins),மெமெண்டோ(Memento)[இது தான் தமிழ் கஜினியின் ஒரிஜினல் படம்],த பிரஸ்டீஜ்(The Prestige)போன்ற சிறப்பான படங்களை இயக்கியுள்ளார்.முன் பாதி சிறிது மெதுவாகவே மிகுந்த வசனங்களுடன் செல்கிறது.பின் பாதி டாப் கியர்.எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் கண்டிப்பாக படத்தை ரசிக்கலாம்.ஜோக்கருக்காக மீண்டும் ஒரு முறை பார்க்க விரும்புகிறேன்.இந்த படத்தின் முதல் ஆறு நிமிட காட்சிகளை இங்கே சென்று பார்க்கலாம். The First Six Minutes of The Dark Knight
read more "The Dark Knight திரை விமர்சனம் மற்றும் ஜோக்கரின் ஆளுமை"

கமலஹாசன்:மர்மயோகி 7 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதை,ரஹ்மானின் இசையோடு

7வது நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களத்துடன் கூடிய மர்மயோகி வித்தியாசமான ஒரு முயற்சி.பிரமாண்டமான வரலாற்றுப் படமாக இது உருவாகவுள்ளது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.அது தொடர்பான பூர்வாங்கப் பணிகளில் மும்முரமாக இருக்கும் கமல்ஹாசன்,தனது அடுத்த படமான மர்மயோகி பற்றி விளக்கியுள்ளார்.

இது மிகப் பிரமாண்டமான படமாக இருக்கும்.முற்றிலும் வரலாற்று கதை.தசாவதாரத்தை விட இந்தப் படத்தில் இசை முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.

7வது நூற்றாண்டில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதையின் கரு.

இது வரலாறும்,அறிவியலும் கைகோர்க்கும் படமாக இருக்காது. முற்றிலும் வித்தியாசமான முயற்சி. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.அவரது விருப்பத்திற்கேற்ப இதில் இசையமைக்கும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியின் போது,மர்மயோகி ஒன்லைன் மட்டும்தான் எனக்குத் தெரியும். வித்தியாசமான ஒரு முயற்சி.அதற்கு வித்தியாசமான இசையைத் தரவே முயற்சிக்கிறேன்.இதில் சில புதிய ஒலிகளை அறிமுகப்படுத்த லத்தீன் அமெரிக்க இசைக் கருவிகளை உபயோகிக்கும் திட்டம் உள்ளது.இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ள கதை என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காத அளவுக்கு பாடல்கள் இருக்கும் என்றார் அடக்கமாக

ஆரம்பத்தில் பட்ஜெட் ரூ.100 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.இப்போது அதையும் தாண்டிப் போய் விட்டது.இந்திய திரையுலக வரலாற்றில் இது புதிய சாதனை படைக்கும். ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மர்மயோகி குறித்து மீடியாக்களில் நிறைய செய்திகள் வருகின்றன.அவை அனைத்தையும் நான் மறுக்க மாட்டேன், மீடியா நண்பர்களை ஏமாற்ற மாட்டேன்.

மீடியாக்களில்,மும்பையில் பிரமாண்டமான முறையில் தொடக்க விழா இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.உண்மையில் முதலில் அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை.ஆனால் இப்போது மீடியாக்களில் வந்துள்ளதைப் போலவே, பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிரமாண்டமான முறையில் மர்மயோகியின் தொடக்க விழா இருக்கும்.

தசாவதாரம் குறித்து இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன.அப்படத்தில் சில தவறுகள் இருப்பதை ஒப்புக் கொள்கிறேன்.அதை நான் மறைக்க விரும்பவில்லை.ஆனால் அனைத்து திறமையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏற்படக் கூடிய ஒன்றுதான் இது.அது எனக்கும் ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.

உண்மையில் இந்தத் தவறுகளை அடுத்து படத்தில் திருத்திக் கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார் கமல்ஹாசன்.

செய்திகள்: தட்ஸ்தமிழ்
read more "கமலஹாசன்:மர்மயோகி 7 ஆம் நூற்றாண்டை பின்னணியாக கொண்ட கதை,ரஹ்மானின் இசையோடு"

கனடாவின் ஆயிரம் தீவுகள் - புகைப்பட பயண குறிப்புகள்

கனடாவின் பெரும் நதியான செயின்ட்.லாரன்ஸ்,பிரம்மாண்டமான ஒண்டாரியோ(Lake Ontario)ஏரியில் கலக்கும் இடத்தில் இருக்கிறது ஆயிரம் தீவுகள்(Thousand Islands).ஆயிரம் தீவுகள் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் 1793 சிறிய மற்றும் பெரிய தீவுகளை கொண்டது.சிறிய தீவுகள் என்றால் ஒரு மரம் மற்றும் ஒரு வீடு கொண்ட தீவுகள் முதல் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய தீவுகள் வரை உள்ளன.

சிறந்த விடுமுறை வாசஸ்தலமாக உள்ள ஆயிரம் தீவுகள்,நன்னீர் படகு சவாரி செய்ய உலகின் சிறந்த இடமாக கருதப்படுகிறது.விடுமுறையை அமைதியாக,இயற்கையோடு ஒன்றி கழிக்க பெரும்பாலான தீவுகள் விலைக்கு வாங்கப்பட்டு வீடுகள்,மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த ஆயிரம் தீவுகளில் முக்கியமான மற்றும் புகழ் பெற்ற தீவுகள், இடங்களை படகில் சவாரி செய்து பார்த்தோம்.(படங்களை பெரிதாக்க மேலே சொடுக்கவும்).


இது போல்ட் கேசில்(Boldt Castle)எனப்படும் கோட்டை.ஜார்ஜ் போல்ட்(George Boldt)என்ற பெரும் பணக்காரர் தன் காதல் மனைவிக்காக 1900 களில் கட்டிய இந்த கோட்டை,1904 இல் அவர் மனைவி இறந்துவிடவே கட்டிட வேலை அப்படியே நின்று போனது.பின்னர் அரசின் மேற்பார்வையில் தனியார் அமைப்பு பல ஆண்டுகள் கழித்து புதுப்பித்து பார்வையாளர்களுக்கு திறந்து விட்டது.பிரம்மாண்டமான இந்த மாளிகையில் நூலகம்,நீச்சல் குளம் என சகல வசதிகளும் உள்ளன.போல்ட் தன் காதல் மனைவிக்காக கட்டிய கோட்டை அமைந்துள்ள இந்த தீவு இதய வடிவில் அமைந்துள்ளது இன்னும் சிறப்பு.இந்த தீவிற்கு பெயரே ஹார்ட் ஐலன்ட்(Heart Island).



போல்ட் கோட்டைக்கு மின்சாரம் வழங்க இந்த சிறிய கோட்டை Generator வசதியுடன் உள்ளது.

ஹார்ட் ஐலண்டை Aerial View இல் பார்க்க புகழ் பெற்ற இந்த படத்தை இணைத்துள்ளேன்.

இந்த வேடிக்கையை பாருங்கள்.இந்த சிறிய பாலம்,உலகின் மிக சிறிய சர்வதேச பாலம் என அழைக்கப்படுகிறது.இடது புறம் உள்ள தீவு அமெரிக்காவை சேர்ந்தது.வலது புறம் உள்ள சிறிய தீவு கனடாவை சேர்ந்தது.இரண்டு நாடுகளையும் இணைக்கிறது இந்த சிறிய பாலம்.






read more "கனடாவின் ஆயிரம் தீவுகள் - புகைப்பட பயண குறிப்புகள்"

டாவின்சியின் கடைசி விருந்தும்,உலகின் பெரிய 16 "பில்லியன்" பிக்சல் டிஜிட்டல் படமும்

HAL 9000 என்ற இத்தாலியை சேர்ந்த புகைப்பட நிறுவனம் புகழ் பெற்ற,மிகவும் விவாதிக்கப்பட்ட டாவின்சியின்(Da Vinci)"கடைசி விருந்து"(The Last Supper)ஓவியத்தை 16பில்லியன் பிக்சல் தகவல் கொண்ட உலகின் மிக பெரிய டிஜிட்டல் புகைப்படமாக உருவாக்கியுள்ளது.வழக்கத்தில் இருக்கும் 10 MP(Mega Pixel)காமெராவில் எடுக்கப்படும் படத்தை விட 1600 மடங்கு பெரிதானது,தகவல் அடர்வு கொண்டது.ஒரு பிக்சல்(Pixel) என்பது ஒரு டிஜிட்டல் படத்தின் மிக மிக சிறிய தகவல் துண்டு.அது போன்ற லட்சக்கணக்கான தகவல் துண்டுகள் இணைந்ததே ஒரு டிஜிட்டல் படம்.உதாரணத்திற்கு ஒரு மெகா பிக்சல் என்றால் ஒரு மில்லியன் பிக்சல்கள் அல்லது பத்து லட்சம் பிக்சல்கள் அதாவது தகவல் துண்டுங்கள்.இந்த படம் மில்லியன் எல்லாம் தாண்டி பில்லியன்.இந்த நிறுவனத்தின் தளத்தில் படத்தை பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.

இதற்காக கடைசி விருந்து ஓவியம் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள Santa Maria delle Grazie சர்ச்சிற்கு சென்று படம் பிடித்துள்ளனர்.வியக்க வைக்கும் தொழில் நுட்ப பின்னணியுடன் ஒரு குழு இதை செய்து முடித்துள்ள்ளது.


[இது தளத்தின் Screen Shot மட்டுமே.தளத்தின் தொடுப்பு பதிவின் முடிவில்....]
கடைசி விருந்து ஓவியம் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.உண்மையில் 15 அடி உயரமும் 29 அடி அகலமும் கொண்ட பெரிய ஓவியம்.பழமையின் காரணமாக ஓவியம் பழுதடைந்து உள்ளது.ஆகவே மக்கள் அதை அருகில் சென்று பார்க்க அனுமதியில்லை.

இந்த மெகா மெகா படத்தை 1677 டிஜிட்டல் புகைப்படங்களாக எடுத்து மின்னணு முறைப்படி இணைத்துள்ளனர்.ஒவ்வொரு படமும் 73MB(Mega Bytes)தகவல் அடர்வு கொண்டவை.இனி தொழில் நுட்ப தகவல்கள்...
படத்தின் மொத்த தகவல் அடர்வு 120 GB (ஒரே ஒரு படம்!!!)
கேமரா : Nikon D2X
லென்ஸ்: AF-S Nikkor 600mm f/4D IF-ED
கணினி ப்பராசசர்: இரண்டு Quad-Core AMD Opteron பராச சர்கள்
கணினியின் RAM : 16 GB
அடர் தட்டு(Hard Disk)கொள்ளளவு : 2 TB(Tera Byte)

HAL நிறுவனத்தின் தளத்தில் இந்த டிஜிட்டல் படத்தை பார்க்கலாம். கீழே உள்ள தொடுப்பின் மூலம் செல்லுங்கள்.Zoom option மூலமாக படத்தை பெரிதாக்கி பாருங்கள்.(அகலப்பட்டை இல்லாதவர்கள் zoom செய்த பிறகு சிறிது நேரம் பொறுங்கள் படம் தெளிவாகும்.)

16 Billion Pixel Digital Picture

இந்த படத்தை எவ்வாறு எடுத்தார்கள் என்ற வீடியோ படம் பார்க்க இந்த தொடுப்பிற்கு செல்லுங்கள்
16 Billion Pixel Digital Picture - Behind the stage
read more "டாவின்சியின் கடைசி விருந்தும்,உலகின் பெரிய 16 "பில்லியன்" பிக்சல் டிஜிட்டல் படமும்"

The Dark Knight திரைப்படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் மற்றும் முன்னோட்டம்

பேட் மேன் திரைப்பட வரிசையில் நாளை வெளிவர இருக்கும் படம் தி டார்க் நைட்(The Dark Knight).கிறிஸ்டியன் பேல்(Christian Bale),ஹீத் லெட்ஜெர்(Heath LEdger) நடித்துள்ள கிறிஸ் டோபர் நோலன்(Christopher Nolan)[இவர் தான் கஜினி படத்தின் ஒரிஜினலான மெமண்டோ படம் இயக்கியவர்]இயக்கியுள்ள இந்த படத்தின் வியாபார உத்திக்காக சற்று நீளமான முன்னோட்டப்படம் வெளி வந்துள்ளது. இது படத்தின் முதல் ஆறு நிமிடங்களாக இருக்கும் என தெரிகிறது. The Dark Knight

read more "The Dark Knight திரைப்படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் மற்றும் முன்னோட்டம்"

கனடாவிலிருந்து நயாகரா நீர்வீழ்ச்சி - புகைப்பட பயண குறிப்புகள்

கனடாவிலிருந்து நயாகரா மற்றும் கனடாவை பார்க்க புறப்பட்டோம்.முதலில் நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி கொஞ்சம்.அமெரிக்கா மற்றும் கனேடிய எல்லைகளுக்கு நடுவில் ஓடும் நயாகரா நதியில் பாதி தொலைவில் உள்ளது.நீர்வீழ்ச்சியின் ஒரு புறம் அமெரிக்கா, மற்றொரு புறம் கனடா.மூன்று முக்கிய நீர்வீழ்ச்சிகளை கொண்டது.பெரியது மற்றும் முக்கியமானது ஹார்ஸ் ஷூ(Horse Shoe Falls) அல்லது குதிரை லாட நீர்வீழ்ச்சி கனடாவில் உள்ளது.அடுத்தது அமெரிக்கன் நீர் வீழ்ச்சி மற்றும் சிறிய ப்ரைடல் வேய்ல் நீர்வீழ்ச்சி.உயரம் அதிகம் இல்லாவிட்டாலும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி 762 மீ அகலம் கொண்டது.படு பிரம்மாண்டமானது.அமெரிக்கன் நீர்வீழ்ச்சி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராவில் ஒவ்வொரு நிமிடமும் ஆறு மில்லியன் கன அடிக்கு அதிகமான நீர் வீழ்கிறது.இவ்வளவு நீர்வீழ்வு நயாகராவை ஒரு மகா நீர்வீழ்ச்சி ஆக்குகிறது. கனடிய பகுதியிலிருந்து பார்க்கும் போது மூன்று நீர்வீழ்ச்சிகளையும் ஒரு சேர பார்க்கலாம்.


இடது புறம் உள்ளது அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, வலது ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி

இதுவும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி

இது அமெரிக்கன் நீர் வீழ்ச்சி

இடது புறம் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி அருகில் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நயாகராவில் முக்கிய விஷயம் மூன்று நீர்வீழ்ச்சிகளையும் படகு சவாரி மூலம் அருகில் சென்று பார்ப்பதாகும்.இப்படி பார்ப்பதற்கு மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist) என்று பெயர்.இந்த மெயிட் ஆஃப் த மிஸ்ட் சவாரி செய்வது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.முதலில் படகு அமெரிக்கன் வீழ்ச்சி அருகே சென்ற பின் பெரும் இரைச்சலுடன் பிரம்மாண்டமாக வீழும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி அருகே செல்லும் போது இயற்கையை எண்ணி பிரமிப்படையலாம்.மிக அற்புதமான கணங்கள் அவை.படகு புறப்படும் இடத்திலேயே நீர் வீழ்ச்சிகளின் சாரல் தெறித்து கொண்டிருக்கும்.ஆகவே படகில் பயணிக்கும் அனைவருக்கும் நீர் தெறிக்காமல் இருக்க பிளாஸ்டிக் ஆல் ஆன முழு நீள அங்கி வழங்கப்படுகிறது.அது இல்லையெனில் உடல் முழுவதும் நனைந்து விடக்கூடும்.படகில் செல்லும் போது படம் எடுக்க முயற்சிக்கையில் கேமரா லென்சில் முழுவதுமாக நீர் பட்டு படங்களை எடுக்கமுடியாமல் போனது.மேலும் படகும் தண்ணீரில் ஆடிக்கொண்டும் இருந்ததால் படம் எடுக்க சற்று சிரமமாகவே இருந்தது.இருந்தும் ஹார்ஸ் ஷூ நிர்வீழ்ச்சிக்கு மிக அருகே செல்லும் போது எடுத்தே ஆக வேண்டும் என்ற உந்துதலில் சில படங்கள் எடுத்தேன்.
எங்கள் முன்னாள் சென்ற ஒரு படகு ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி அருகே செல்கிறது.

ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சியின் அருகே

ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி யின் மிக அருகே

இது ஸ்கைலான் டவர்.நயாகராவை கனடிய பகுதியில் ஸ்கைலான் டவர் என்னும் 550 அடி உயர கட்டிடத்தின் மேலிருந்து பார்க்கலாம்.மேலே செல்ல மஞ்சள் நிற எலிவேடரை பார்க்கலாம்.

ஸ்கைலான் டவர் உச்சியில் பார்வையாளர்கள்

இரவு நேரத்தில் அமெரிக்கன் நீர்வீழ்ச்சி ஸ்கைலான் டவர் மேலிருந்து

மற்றுமொரு பதிவில் கனடாவில் உள்ள ஆயிரம் தீவுகள்(Thousand Islands)எனும் இடத்தை பார்த்த அனுபவத்தை புகைப்படங்களுடன் பதிவிடுகிறேன்
read more "கனடாவிலிருந்து நயாகரா நீர்வீழ்ச்சி - புகைப்பட பயண குறிப்புகள்"

இணைய தள வடிவமைப்புக்கு(Web Design) ஒரு அசத்தல் உதாரணம்

Sensisoft எனும் நிறுவனத்தின் இணைய தளம் இது. வழக்கமான அளவில் இல்லாமல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தளம் இது. தொடுப்பை சொடுக்கி தளத்திற்கு செல்லலாம்.

Sensisoft








read more "இணைய தள வடிவமைப்புக்கு(Web Design) ஒரு அசத்தல் உதாரணம்"