A for Apple எழுத நண்பர்
சின்ன பையன் அழைத்திருந்தார்.
நான் அதிகம் பார்க்கும் தளங்கள்.
Aஃபார்
Apple தான்.அதுவும் ஆப்பிள் ஐ ஃபோன் வாங்க உத்தேசித்ததிலிருந்து அடிக்கடி இந்த தளத்திற்கு சென்று,தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் புது விதமான Apps வந்துள்ளதா என தெரிந்து கொள்ள செல்வதுண்டு.
Businessweek நான் வேலை செய்யும் நிறுவனத்தின் பத்திரிகை மட்டுமன்றி பல சமயங்களில் சிறப்பான வணிக,தொழில்நுட்ப,சுற்று புற சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்களை தருவதால் அடிக்கடி பார்ப்பதுண்டு.
BBC செய்திகளுக்கு
Classicalமேற்கத்திய செவ்வியல் இசையில்(Western Classical)மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதால். அனைத்து இசையையும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Dinamalar தலைப்பு செய்திகளுக்கு மட்டும்.
Download அனைத்து விதமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய.
Engadgetமின்னணு, கணினி சம்பந்தமான மின்னணு சாதனங்கள் பற்றி சிறப்பான தளம்.
Gizmodo இதுவும் மின்னணு, கணினி சம்பந்தமான மின்னணு சாதனங்கள் பற்றி தான்.படு சுவாரஸ்யமான தளம்.
GSM Arenaஉலகின் அனைத்து வகை GSM வகை செல் பேசிகள்,வரப்போகும் செல் பேசிகள் பற்றி, செல்பேசிகளின் தொழிநுட்ப தகவல்கள் என சிறப்பான தளம்.
Hollywood ஹாலிவுட் சினிமா செய்திகளுக்கு.தமிழ் சினிமாவிற்கு இந்த அளவு சிறப்பான தளம் அமையுமா என்பது கேள்விக்குறியே.
Newsweek ஒரு வார பத்திரிக்கையின் இணைய தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.
National Geographicமிக மிக சுவாரஸ்யமான தகவல்களுக்கு,இணையில்லாத.
News.Yahooசெய்திகளுக்கு.
Netflixஉலக சினிமாக்களின் DVD களை வாடகைக்கு எடுத்து பார்க்க
Piano Societyமேற்கத்திய செவ்வியல் இசை மேதைகளின் பியானோ இசை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
Rediff செய்திகள்
Rottentomatoes ஆங்கில படங்களுக்கு மிக சிறப்பான விமர்சன தளம்.
Sulekha வீட்டு பொருட்கள் வாங்க விற்க மட்டுமின்றி பல விதமான சேவைகளும் அடக்கம்.
Time செய்திகளுக்கு
Tucowsமென்பொருட்கள் தரவிறக்க மற்றுமொரு நல்ல தளம்.
Vikatanஎப்படி இருந்த பத்திரிகை எப்படி ஆகி விட்டது என பல சமயம் வருத்தப்படுவதுண்டு.ஆனாலும் அவ்வப்போது எட்டி பார்ப்பதுண்டு.
Vimeo வீடியோ கோப்புகளை நான் பொதுவாக வலையேற்றுவது இங்கே தான்.
Wikipedia விளக்கமே தேவையில்லை.
Wikimapiaகூகுளின் வரைபடங்கள் போல கொண்டது.ஆனால் உங்கள் வீடு,அலுவலகம் அல்லது முக்கியமான இடங்களை நீங்களே குறிக்கலாம்.பல சிறிய ஆனால் நமக்கு தேவையான இடங்களை கூகிள் வரைபடங்களில் காண முடியாது.இதில் யாரவது அந்த இடத்தை குறித்து வைத்திருக்கலாம்.உங்கள் ஊரை இதில் தேடி பாருங்கள்.என் வீட்டருகே உள்ள சிறிய மளிகை கடையை அதில் குறித்து வைத்திருந்தார்கள்.
Wiredதொழில் நுட்ப,அறிவியல் செய்திகளை மிக சுவாரஸ்யமாக சொல்லும் தளம்.
மேலும் A for Apple தொடரை எழுத நண்பர் ராஜ நடராஜனை அழைக்கிறேன்.