(எச்சரிக்கை: கீழ்க்கண்ட வீடியோவில் வரும் நிகழ்வை பொது வாழ்வில் முயற்சிக்கும்போது கவனம் தேவை) :-))
நோக்கியா செல்பேசி நிறுவனத்திற்காக A.R. ரஹ்மான் இசையமைத்துள்ள புதிய இசை தொகுப்பு "நோக்கியா கனெக்சன்ஸ்"(Nokia Connections).நோக்கியாவின் சமீபத்திய MusicXpress செல்பேசிகளில் உள்ளீடு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.விரைவில் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.ஆனால் இணையத்தில் படு சூடாக தரவிறக்கப்படுகிறது இந்த இசை தொகுப்பு.மொத்தம் 9 பாடல்கள்.திருக்குறளுக்கு இசை என்றவுடன் முதலில் அதை கேட்டு ரசித்தோம்.சுருக்கமாக அனைத்து பாடல்களை பற்றியும் பார்ப்போம்.
1) Jiya Se Jiya
பஞ்சாபி ஸ்டைலில் அமைந்துள்ள இந்த பாடல் விறுவிறுப்பான தாள கதியோடு முதல் முறை கேட்கும் போதே ஆட வைக்கிறது.நம்ம ட்ரம்ஸ் சிவமணி இந்த பாடலுக்கு வாசித்துள்ளார். வீடியோவிலும் வந்து ஆடுகிறார்.
Connections from பிரேம்ஜி on Vimeo.
2) Mann Chandre
நல்ல மெலடி.சிதாரும்,தபலாவும் இணைந்து பின்னணியில் இழைகிறது.சுக்விந்தர் சிங் உடன் பாடிய பாடகி யார் என்பது தெரியவில்லை.இரண்டாவது முறை கேட்கும் போதே பிடித்து போகிறது.
3) குறள்
ஒரு வித்தியாசமான இசை கலவை.கோரஸ் பகுதிக்கு பிறகு பெண் குரலில் ஆரம்பிக்கிறது. மனதை மயக்கும் இசை.பல முறை எம்மை கேட்கவைத்தது.நடுவில் ஒவ்வொரு குறளின் மொழியாக்கமும் ஆங்கிலத்தில் பாடப்படுகிறது.இதற்கு முன்னர் திருக்குறளுக்கு இசை அமைக்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை.
4) Silent Invocation - A
புல்லாங்குழலும்,தம்புராவும் மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இசை.மிக மென்மையான இசை.
5) Sileent Invocation - B
சோகத்தை வெளிப்படுத்தும் இசை.புல்லாங்குழல் மற்றும் தம்புரா.மிக மென்மையான இசை கேட்பவர்களுக்கு மட்டும்.
6) Silent Invocation - C
புல்லாங்குழல் இசை மட்டும்.மீண்டும் மிக மென்மையான இசை.
7) Mylapore Blues
கர்நாடக சங்கீதத்துடன் மேற்கத்திய ப்ளூஸ் இசையை இணைத்து Fusion இசை.
8) Himalaya
மெதுவான பியானோ இசை திடீரென வேகம் பிடித்து சந்தூர் இசை கருவியோடு இணைகிறது.பனி மலை பிரதேசத்தில் உலவும் உணர்வை தருகிறது.
9) Mosquito
மோர்சிங் இசை கொசுவின் ரீங்காரத்தை ஏற்படுத்தி பின் சாரங்கி இசை முதன்மையாகிறது. நல்ல இசைக்கோர்ப்பு.
அமைதியான இசையை விரும்பி ரசிப்பவர்களுக்கு மிக நல்ல இசை தொகுப்பு.பாடல்களை தரவிறக்க
http://vellithiramusic.net/?p=1191
A.R.ரஹ்மானின் புதிய இசை தொகுப்பு நோக்கியா கனெக்சன்ஸ்,திருக்குறளுக்கு இசை
Labels: இசை, திருக்குறள், நிகழ்வுகள், நோக்கியா
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
thanks for the info..
a beautifull review keep it up
Thanks
பிரேம்ஜியின் பழைய பதிவுகளின் வாசனை இப்பொழுதுதான் எட்டிப்பார்க்கிறது:)
ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...
அருமையான தொகுப்பு..நன்றி ..
Thanks sundar,Observer,Tamilnenjam,
வருகைக்கு மிக்க நன்றி நடராஜன், சதீஷ்குமார்,ராஜீபன்
அருமையான தகவல் தலைவா! jiya se jiya! கேட்பவரை ஆட வைக்கும் என்பது சந்தேகமே இல்லை!
தமில் சினிமா இசை பிதாமகன்கள்.. மெல்லிசை மன்னர் MSV.. KV மஹாதேவன் மற்றும் இசைஞானி.. ஏற்கனவே திருகுரளுக்கு இசையமைத்திருகிறார்கள் தலைவா..
thanks for sharing..
pretty interesting to hear
Thirukural in ARR's music..
--Senthil
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரசனைக்காரன்.
Sen, Thanks for your visit
Post a Comment