உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.
1) விண்டோஸ் 1.0
விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.
2) விண்டோஸ் 2.0
ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.
3) விண்டோஸ் 3.0
1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.
4) விண்டோஸ் 3.11
விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.
5) விண்டோஸ் 3.11 NT
32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.
6)விண்டோஸ் 95
1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.
7) விண்டோஸ் 98
விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.
8) விண்டோஸ் 2000
2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.
9) விண்டோஸ் ME
இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.
10) விண்டோஸ் XP
கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
12)விண்டோஸ் விஸ்டா
பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.
13) விண்டோஸ் 7
வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.
நன்றி: விக்கி
விண்டோஸ் இயங்கு தளம்- ஒரு வரலாற்றுப் பார்வை
Labels: கணினி, தொழில் நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

18 comments:
சூப்பர் வரலாறு... நல்ல பதிவு...
ஒரு காலத்துலே அந்த மைன்ஸ்வீப்பர், ஃப்ரீசெல், சாலிடைர் போன்ற விளையாட்டுலேயே முழு நாளை போக்குவோம்... :-)))
windows 3.11 லிருந்து மைக்ரோ சாப்ட் விண்டோஸ் பயன்படுத்துகிறேன்.
நல்ல தகவல் சேகரிப்பு, ஸ்கிரீன் ஷாட்டுடன் இருப்பது கூடுதல் சிறப்பு. பாராட்டுக்கள் !
வாங்க ச்சின்னப்பையன்,
மலரும் நினைவுகளை சொன்னதற்கு நன்றி.
வாருங்கள் கோவி.கண்ணன்,
விண்டோஸ் இயங்கு தளங்களோடு நீங்கள் மிக நீண்ட அனுபவம் கொண்டிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வின் 3.1 யில் இருந்து தான் கையை வைக்க ஆரம்பித்ததாக ஞாபகம்.
பழைய படங்கள் காணக்கிடைத்ததற்கு நன்றி.
வாருங்கள் வடுவூர் குமார்,
உங்களுக்கும் விண்டோஸ் இயங்குதளங்களோடு நீண்ட அனுபவம் போல இருக்கிறது. வருகைக்கு மிக்க நன்றி.
சிறப்பான பதிவு.கடந்த சில வருடங்களாகத்தான் கணினி உபயோகிப்பதால் விண்டோசின் பழைய பதிப்புகளை பற்றி இப்போது தான் அறிகிறேன்.படங்கள் அருமை.
thanks premji. Got a chance to know about the old versions of windows. Particularly the screen shots are great.
thambaan,aravind,
Thank you very much for your visit.
நல்ல பதிவு விக்கியிலிருந்து எடுத்திருந்தாலும், எல்லாவறையும் கூறியிருப்பது சிறப்பு.
My journey with Windows started in 1994 through Win 3.11 in my college lab.
nice article. I used from MS DOS. later I remember installing windows from 15 floppys. not sure about the numbers. but if one floppy goes wrong (it happen to me so many times) all gone. still I play minesweeper. we draw in paint. and windows for work group. even though it copy from all from apple. even still remember windows 95 key. I installed aroud 500 system. (yap pirated at that time.) wonderful memories.
மிக அருமையான தொகுப்பு!!
உங்களது தொகுப்பை எங்களது வலைப்பூக்கள் தளத்தில் பதிவு செய்துள்ளோம், மேலும் உங்களது தொகுப்பை வலைப்பூக்கள் தளத்தில் பதிவு செயுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
வலைப்பூக்கள் தளம்
வலைப்பூக்கள்,
தங்கள் வருகைக்கும், எனது தொகுப்பை தங்கள் தளத்தில் பதிவு செய்ததற்கும் மிக்க நன்றி. நானும் பதிவு செய்கிறேன்.
Super. Thank you very much Dude
yele , superule... keep it up...
இது நாள் வரை உங்கள் தளத்தை தெரியாமால் இருந்தமைக்கு முதலில் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். நல்ல தகவல்கள் அடங்கியது வலைத்தளம். நன்றாக அனைத்தும் மொத்த பதிவையும் ஒரெ நாளில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
மிக்க நன்றி தமிழ்நெஞ்சம், காசனோவா.
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி வடிவேலன்.உங்கள் வார்த்தைகள் என்னை மேலும் ஊக்குவிக்கின்றன.மிக்க நன்றி.
Post a Comment