சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகல்


இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸின் தலைவர் ராமலிங்க ராஜு பதவி விலகினார். சமீப காலமாக உலகவங்கி பிரச்சினை, மகன்களின் நிறுவனங்களுக்கு உதவ அவர்கள் நிறுவனங்களை வாங்க முடிவு செய்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ராமலிங்க ராஜு சற்று முன் தன் பதவி விலகலை அறிவித்தார்.நிறுவன கணக்கில் கைவைத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்.கணக்கு காட்டப்பட வேண்டிய பணம் ஆயிரத்து இருநூற்று முப்பது கோடி ரூபாய் இருப்பதாக நம்பபடுகிறது.நிறுவன இயக்குனர்கள் முடிவுக்கு காத்திருக்கிறார்.தற்காலிகமாக ராம் மைனம்பட்டி தலைவராக இருக்கலாம் என தெரிகிறது.

6 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தற்காலிகமாக ராம் மைனம்பட்டி தலைவராக இருக்கலாம் என தெரிகிறது.//

அப்படின்னா..?

பிரேம்ஜி said...

வாங்க உண்மைத் தமிழன் ,

ராம் மைனம்பட்டி என்பவர் நிறுவன இயக்குனர்களில் ஒருவர்.

:-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//பிரேம்ஜி said...
வாங்க உண்மைத் தமிழன் ,
ராம் மைனம்பட்டி என்பவர் நிறுவன இயக்குனர்களில் ஒருவர்.:-)//

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ஸார்..

இதனையே "ராமலிங்கராஜூவுக்குப் பின்பு சத்யம் நிறுவனத்தின் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான திரு.ராம்மைனாம்பட்டி அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது.." இப்படி எழுதியிருந்தீர்களானால் எனக்கு ஒரு பின்னூட்டம் மிச்சமாயிருக்கும்.))))))))))))))))

Anonymous said...

A class jail kaathirukku. Ram mynampatti was CFO when they cooked the books. (!!!) . They all belong in jail

Anonymous said...

http://economictimes.indiatimes.com/Infotech/Software/US_SEC_free_to_probe_Satyam_fiasco_Corporate_Affairs_Minister/articleshow/3947717.cms

actually could be american jail

hajan said...

நல்லா எழுதிறீங்க தொடர்ந்து எழுதுங்க
http://nallurran-nallur.blogspot.com/