கணினி சந்தையில் உலகின் முதல் 2 TB ஹார்ட் டிரைவ் விற்பனைக்கு வந்துள்ளது

கணினி தொழில்நுட்பத்தில் தகவல்களின்(Data) அளவு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்வது,அந்த தகவல்களை சேமிக்கும் சாதனங்களின் வளர்ச்சியை அதிகமாக்குகிறது.ஒரு காலத்தில் 10.2GB கொள்ளளவு கொண்ட அடர்தட்டை(Hard Drive) வாங்கியபோது இவ்வளவு அதிகம் தேவையா என வினவப்பட்ட நான் இப்போது 250GB உபயோகிக்கிறேன்.தற்போது வெஸ்டர்ன் டிஜிட்டல்(Western Digital)நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கணினி சந்தையில் உலகின் முதல் 2TB(Tera Bytes) அளவு தகவல் கொள்ளும் அடர்தட்டை வெளியிட்டுள்ளது.

3.5 இன்ச் சுற்றளவில் நான்கு 500 GB தட்டுகள்(Platters) என 2TB (2000 GB) தகவல் கொள்ளளவு கொண்டுள்ள இந்த அடர்தட்டு மற்ற அடர்தட்டுகளை ஒப்பிடும்போது நாற்பது சதவீதம் குறைந்த மின்சாரத்தை உபயோகிக்கும்.மேலும் இயங்கும் போது சுற்றுப்புற சூழலை காக்க குறைந்த அளவு வெப்பத்தை வெளியிடும்.இதன் சுழல் வேகம் 7200RPM.

தகவல்களுக்காக சொல்வதென்றால்,இந்த அடர்தட்டில் டிவிடி தரத்தில் 880 மணிநேர வீடியோக்களை சேமிக்கலாம்.ஐந்து லட்சத்து எழுபத்து ஓராயிரம் டிஜிட்டல் ஒளிப் படங்களை(Photos) சேமிக்கலாம்.5 லட்சம் mp3 பாடல்களை சேமிக்கலாம்.

3 comments:

ச்சின்னப் பையன் said...

//இந்த அடர்தட்டில் டிவிடி தரத்தில் 880 மணிநேர வீடியோக்களை சேமிக்கலாம்.ஐந்து லட்சத்து எழுபத்து ஓராயிரம் டிஜிட்டல் ஒளிப் படங்களை(Photos) சேமிக்கலாம்.5 லட்சம் mp3 பாடல்களை சேமிக்கலாம்.
//

இவ்ளோதானா??? ச்சே......

தமிழ்நெஞ்சம் said...

great news from great person

CVR said...

i somwhow Gdrive is the way forward!
How hardware much can you keep buying anyway