உலகின் முதல் தொடுதிரை 3 ஜி செல்பேசி கைகடிகாரம்:வீடியோ

இதுவரை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த இது போன்ற சாதனம் தற்போது சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.LG நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த உலகின் முதல் தொடுதிரை(Touch Screen)3 ஜி செல்பேசி கைகடிகாரம்,தற்போது சந்தையில் உள்ள
3ஜி செல்பேசிகளை விடவும் சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது.சில வாரங்களுக்கு முன்பு லாஸ் வேகசில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் பொதுமக்களுக்கு முதலில் காண்பிக்கப்பட்ட இந்த கைகடிகாரத்தின் சிறப்பம்சம் நம் பேச்சை புரிந்து கொள்ளும் திறமை(Speech recognition)மற்றும் குரல் ஆணைகள்(Voice Commands).

சில செல்பேசிகளில் இந்த அம்சம் இருந்தாலும்,இந்த செல்பேசியில் இது மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.ஒருவரை தொலைபேசியில் அழைக்கவும்,இதில் உள்ள mp3 ப்ளேயரை உபயோகித்து பாடல் கேட்கவும் குரலால் ஆணையிட்டால் போதுமானது.தொடுதிரை வசதி வழக்கம்போல அசத்தல்.மேலும் mp3 பிளேயர்,ப்ளுடூத் வசதிகளையும் கொண்டுள்ளது.இதனோடு ப்ளுடூத் ஹெட் செட்டும் இணைந்தே வருகிறது.இந்த தொடுதிரை செல்பேசி கைகடிகாரம் பற்றிய துல்லிய வீடியோவை காணுங்கள்.

5 comments:

ஹாலிவுட் பாலா said...

என்னங்க தல..!! போன் எடுக்க மாட்டேங்கறீங்க. பிஸின்னா நான் ஈவ்னிங் கால் பண்ணுறேன்.

ராஜ நடராஜன் said...

தகவலுக்கு நன்றி பிரேம்ஜி.

பிரேம்ஜி said...

vaanga bala,

Office kku pora avasarathula unga call ai attend panna mudiyalai. Mannikkavum. Evening nichayam pesuvom.

Vaanga Natarajan sir,
Varugaikku mikka nandri.

(mannikkavum. Tamilil pathilalikka iyalaamaiku varinthugiren)

Valaipookkal said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

பிரேம்ஜி said...

நன்றி வலைப்பூக்கள்.