முதன்முறை அமெரிக்க,ரஷ்ய சாட்டிலைட்டுகள் விண்ணில் மோதிக்கொண்டன

கடந்த செவ்வாயன்று சைபீரியாவிலிருந்து 800 கிமீ உயரத்தில் பூமியை சுற்றிக்கொண்டிருந்த அமெரிக்காவின் இரிடியம்(Iridium) சாட்டிலைட்டும் ரஷ்யாவின் காஸ்மோஸ்(Cosmos) சாட்டிலைட்டும் மோதிக்கொண்டன.இந்த மோதலின் விளைவாக நூற்றுக்கணக்கான உடைந்த பகுதிகள் விண்ணில் பூமிக்கு மேலே 500 கிமீ முதல் 1300 கிமீ வரை தெறித்து ஏற்கனவே உள்ள பல ஆயிரக்கணக்கான விண்வெளி குப்பைகளுடன் விண்ணில் சுற்றிகொண்டுள்ளன.

இந்த மோதல் ஏற்பட்டதை விளக்கும் கணினி வரைபடம்.


(Source:Dailymail)
உலகில் முதன்முறையாக ரஷ்யா 1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக் துணைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதிலிருந்து இன்று வரை 6000 துணைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு பூமியை சுற்றிவருகின்றன.அறிவியலாளர்களும் இது போன்ற ஒரு மோதல் நடக்கும் என்பதை அறிந்தே உள்ளனர். இந்த மோதல் நிகழ்ந்ததற்கு கீழே சர்வதேச விண்வெளி நிலையமும் சுற்றிகொண்டுள்ளது. வினாடிக்கு 8 கிமீ வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒரு சிறு குப்பை தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும்.ஆனால் அமெரிக்க,ரஷ்ய துணைக்கோள்கள் மோதிக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட குப்பைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்காது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். விண்ணில் ஆயிரக்கணக்கான துணைக்கோள்களுடன் மேலும் ஆயிரக்கணக்கான விண் குப்பைகள் எவ்வாறு பூமியை சுற்றிக்கொண்டுள்ளன என்பதை இந்த கணினி வரைபடம் விளக்குகிறது.
(Source:ESA)
ஏற்கனவே மூன்று முறை விண் குப்பைகள் துணைக்கோள்கள் மீது மோதியிருந்தாலும்,இரு துணைகோள்கள் மோதிக்கொள்வது இது முதன்முறை.பிபிசி யின் இதுபற்றிய சிறிய படத்தொகுப்பு இங்கே...
video
(Source:BBC)
அமெரிக்க துணைக்கோள் தகவல் தொடர்புகளுக்க்காகவும், ரஷ்ய துணைக்கோள் ராணுவ வசதிகளுக்காவும் முறையே 1997,1993 ஆம் ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பட்டது.இரிடியத்தின் எடை 560 கிலோ,காஸ்மோஸ் இன் எடை950 கிலோ.இதுபோன்று துணைக்கோள்களால் ஏற்படுத்தப்பட்ட குப்பைகள் இந்த வருட ஆரம்பத்தில் உள்ள கணக்குப்படி சுமார் 17000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

தமிழ்நெஞ்சம் said...

தகவலுக்கு நன்றிங்க

கிரி said...

அங்கேயும் ட்ராபிக் ஜாம் ஆகி விட்டதா :-)))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளோ பெரிய இடத்துல எப்படி போய் முட்டிக்கறாங்க .. என்ன கொடுமை இது

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்.

வாங்க கிரி, ஹா ஹா ஹா.. ட்ராபிக் ஜாம் ஆகி விபத்தே நடந்து போச்சு