MBARI என்னும் கலிபோர்னியாவை சேர்ந்த Monterey Bay நீர் வாழ் உயிரின காட்சி ஆராய்ச்சி நிலையத்தை(Monterey Bay Aquarium Research Institute )சேர்ந்த விஞ்ஞானிகள் ப்ரூஸ் மற்றும் கிம் சமீபத்தில் கடலடி ரோபோக்களான ROV(Remotely operated Vehicles)மூலம் செய்த ஆராய்ச்சியில் இந்த அதிசய பீப்பாய் கண் மீனை(Barreleye Fish)[விலங்கியல் பெயர்:Macropinna microstoma] பற்றிய அதிக விவரங்கள் தெரியவந்துள்ளன.1939 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த மீனை ஆராய்வது கடந்த 50 வருடங்களுக்கு மேலாக உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.இந்த அரிய பீப்பாய் கண் மீன் வகை கடலடியில் 2000 அடிகளில் சூரிய வெளிச்சம் சரியாக குறைந்து இருட்டு ஆரம்பிக்கும் ஆழத்தில் வசிப்பவை.
தற்போது கடலடி ரோபோக்களை உபயோகித்து இதை படம் பிடித்து பின்னர் கவனமாக ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு வந்து ஆராய்ந்து வருகின்றனர்.இந்த மீனின் சிறப்பம்சம் ஒளி ஊடுருவும் இதன் தலைப்பகுதி.மிக சிறப்பான பச்சை நிற பெரிய கண்களை உடையது.அந்த கண்கள் மூலம் ஒளி ஊடுருவும் தலை பகுதியை உபயோகித்து தலையை அசைக்காமல் தலைக்கு மேலே உள்ள விசயங்களை பார்க்க முடியும்.எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளவும்,இரையை கவ்வவும் மிகவும் உபயோகமாக உள்ளது.கடலடி சூழ்நிலைக்கேற்ப இந்த மீன் பரிணமித்துள்ளது.
இந்த மீனின் தலை பகுதி மிக தெளிவான தூய நீர் நிரம்பி உள்ளது.பல மணி நேரம் நீரில் அசையாமல் நிற்கும் திறன் கொண்ட இம்மீன் தனது பெரிய பச்சை நிற கண்கள் மூலம் அசையாமல் எல்லா பக்கமும் பார்க்கும் திறன் கொண்டது.இந்த மீன் மேல்புறம் பார்க்கும் போது இதன் கண்களில் மேல் புறம் உள்ள பச்சை நிறமிகள்(Pigments)சூரிய வெளிச்சத்தை கண் கூசாமல் தடுத்து கட்டுப்படுத்துகிறது.இந்த வீடியோவில் பேசுவது இதன் ஆராய்ச்சியாளர் ப்ரூஸ்.(இது அதி துல்லிய வீடியோ(High Definition Video)ஆதலால் படம் ஓடுவது இணைய இணைப்பின் வேகத்திற்கேற்ப சற்று தாமதமாகலாம்)
வீடியோ: அதிசய,அரிய வகை ஒளி ஊடுருவும்(See through) தலை மீன்
Labels: நிகழ்வுகள், நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி, மீன், வீடியோ
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
துல்லியமான நகர்படம்.
நன்றி.
எப்படிங்க இந்த மாதிரியெல்லாம் வீடியோ பிடிக்கறீங்க. ஸ்டம்பில் பண்ணுவீங்களா?
மீன்.. க்யூட்டா இருக்கு.
வாருங்கள் வடுவூர் குமார்,
வருகைக்கு மிக்க நன்றி.
வாங்க பாலா,
அப்படியே இணையத்தில தேடிட்டு இருப்பேன்.இந்த மாதிரி சிக்கும்.
அரிய தகவல்; அருமையான படப்பிடிப்பு;;;மிக்க நன்றி
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
Post a Comment