யாஹூ ப்ரீஃப்கேஸ்(Yahoo! Briefcase) மூடப்படுகிறது,கூகுளின் ஜிடிரைவ்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட யாஹூ ப்ரீஃப்கேஸ்(Yahoo! Breifcase) சேவை வரும் மார்ச் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.கோப்புகளை(Files) ஆன்லைனில் சேமிப்பதற்காக,யாஹூ மின்னஞ்சல் முகவரி இருந்தாலே உபயோகிக்கலாம் என 30MB தகவல் கொள்ளளவோடு தொடங்கப்பட்ட இந்த சேவையை யாஹூ பின்னாட்களில் ஏனோ விரிவுபடுத்தவேயில்லை.தற்போது மின்னஞ்சல் சேவைகளே GB அளவுகளில் தகவல் சேமிக்க தருகின்றன.மேலும் கோப்புகளை சேமிக்க விண்டோஸ் ஸ்கை டிரைவ், 4shared போன்ற இலவச சேவைகளும் களத்தில் இருக்கின்றன.இந்த நிலையில் யாஹூ நிறுவனம் இந்த ப்ரீஃப்கேஸ் சேவையை வரும் மார்ச் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்போகிறது.மார்ச் 30 ஆம் தேதிக்குள் அதில் சேமித்து வைத்துள்ள கோப்புகளை நாமே தரவிறக்கி வேறிடத்தில் சேமித்து கொள்ளலாம் அல்லது அழித்து விடலாம்.

மிக விரைவில் கூகிள் நிறுவனம் ஜிடிரைவ்(Gdrive) எனும் சேவையை ஆரம்பிக்கப்போவதாகவும்,ஓசையின்றி கூகிள் இந்த சேவையை தயார்படுத்திவருவதாகவும் கணினி தொழில்நுட்ப வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் இன்னும் உறுதிபட தெரியவில்லை.அவ்வாறு ஜிடிரைவ் வரும்பட்சத்தில் ஜிடிரைவ் மென்பொருளை கணினியில் நிறுவிய பின்னர் கோப்புகளை டெஸ்க்டாப்,இணைய உலாவி(Browser) மற்றும் செல்பேசிகளிலிருந்து என பல வழிகளில் நிர்வகிக்கலாம்.

4 comments:

புதுவை சிவா :-) said...

Thank you My Friend
for your kind and worth able information.

yours
Puduvai siva

யாத்ரீகன் said...

Thnx for the info.. i had completely forgot i had some memorable files over there :-)

தமிழ்நெஞ்சம் said...

very hot news.

thanks

பிரேம்ஜி said...

Thanks for your visit Puthuvai siva,Yaathreegan,Tamilnenjam.