டிஜிட்டல் குறிப்புகள்: 2 மார்ச் 2009

பிரான்சிலுள்ள ஒரு சிறிய அழகிய ஊரின் பெயர் Eu.பெயரே அவ்வளவு தான்.கடற்கரையை அருகில் கொண்டுள்ள இந்த ஊர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த,இயற்கை அழகை கொண்டது.ஆனால் இந்த ஊரை கூகிளில் Eu என தேடிப் பார்த்தால் European Union பற்றியோ அல்லது .eu என்னும் ஐரோப்பிய இணைய தளங்களோ அல்லது
இயூரோப்பியம்(Europium)என்னும் தனிமத்தை பற்றியோதான் கூறுகிறது.

இதனால் சுற்றுலா வருபவர்களுக்கு இந்த ஊரைப் பற்றி அதிகம் தெரிய வராமல் ஊருக்கு வர வேண்டிய வருமானம் குறைந்து போவதாக அதன் மேயர் மேரி பிரான்காயஸ் கருதுகிறார்.ஆகவே இந்த ஊரின் பெயரை மாற்றி விட முடிவு செய்துள்ளார்கள்.
மூன்று பெயர்கள் இறுதியாக்கப்பட்டு(Ville d'Eu,Eu-le-Château,Eu-en-Normandie) ஊர் மக்களின் வாக்கெடுப்பிற்கு பின்னர் ஊரின் புதிய பெயர் தேர்ந்தெடுக்கப்படும்.
--------------------------------------------------------------------------------------------------------------

சாம்சங் நிறுவனம் உலகின் முதல் சூரிய சக்தி தொடுதிரை(Touch Screen)செல்பேசியை தயாரித்துள்ளது.Blue Earth என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்பேசி சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்கால சுற்றுப்புற சூழலின் பெரிய பிரச்சினை குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள்.எளிதில் மட்காத இந்த பாட்டில்களை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த ப்ளூ எர்த் செல்பேசிகளின் பின்புறத்தில் சூரிய சக்தியை உள்வாங்கும் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் சூரிய சக்தி கிடைக்காத நேரங்களின் உபயோகப்படுத்த மிக குறைந்த அளவு மின்சாரத்தை எடுத்துக்கொண்டு செயல்படும் சார்ஜரும் உண்டு.




----------------------------------------------------------
உலகில் பல இயந்திரங்கள் நவீன மயமாகிக்கொண்டிருக்கும் வேளையில் தையல் இயந்திரங்கள் மட்டும் விட்டுவைக்கப்படுமா? Brother என்னும் அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள QuattroT 6000D எனும் தானியங்கி தையல் இயந்திரம் அதி துல்லிய வீடியோ(High Definition Video)எடுக்கும் கேமரா,சிறு கணினி,அதி துல்லிய திரை மற்றும் USB போர்ட் ஆகியவற்றுடன் வந்துள்ளது.

எம்ப்ராய்டரி போன்ற நுண்ணிய வேலைப்பாடுகளை செய்ய அதன் வடிவமைப்பை உள்ளீடு செய்து விட்டால் இந்த தையல் இயந்திரம் தானியங்கு முறையில் விரைவில் முடித்து விடுகிறது.வேலையின் முன்னேற்றத்தை தூரத்தில் அமர்ந்து அதி துல்லிய திரையில் நோட்டமிடுவது மட்டுமே நமது வேலை.

-----------------------------------------------------------------------------------------------------------------

உணவகங்களில் தண்ணீர்,காப்பியை கொண்டுவந்து வைக்கப்படும் தம்ளர்களில் இது இன்ன கடையிலிருந்து திருடப்பட்டது என எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம்.இப்போது உங்கள் லேப்டாப் திருடப்பட்டுவிட்டால் "நான் திருடப்பட்டுவிட்டேன்.உதவி!உதவி!" என லேப்டாப் சத்தம் போட்டு ஊரைக் கூட்டும்.அமெரிக்காவின் கொலராடோவை சேர்ந்த Frontdoor Softwares என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ள மென்பொருளை லேப்டாப்பில் நிறுவவேண்டும்.அசந்தர்ப்ப வசமாக லேப்டாப் திருடப்பட்டு விட்டால்,உடனடியாக இந்த மென்பொருள் நிறுவனத்தை தொடர்பு கொண்டால்,அவர்கள் திருடுபோன லேப்டாப்பை அலறவைத்து விடுவார்கள்.அதுமட்டுமன்றி லேப்டாப்பில் நிறுவப்பட்ட இந்த மென்பொருள் அருகில் கிடைக்கும் இணைய தொடர்பை உபயோகப்படுத்தி அது இருக்கும் இடத்தை பற்றி மென்பொருள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பும்.

--------------------------------------------------------------------------------------------------------------

நோக்கியா நிறுவன தலைவர் ஒல்லி பெக்கா(olli pekka kallasvuo)சென்ற வாரம் அளித்த பேட்டியில் நோக்கியா நிறுவனம் விரைவில் லேப்டாப் தயாரிக்க தொடங்கப்போவதாக கூறியுள்ளார்.பின்லாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நோக்கியா உலகின் No 1 செல்பேசி தயாரிப்பு நிறுவனம்.பின்லாந்தில் உள்ள நோகியான்விர்டா (Nokianvirta)என்னும் நதியின் பெயரிலிருந்து நோக்கியா என்னும் பெயர் வைக்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்பத்தில் ரப்பர் மற்றும் கேபிள்கள் தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது.

4 comments:

ச்சின்னப் பையன் said...

டிஜிட்டல் குறிப்புகள் சூப்பர்...

தையல் மிஷின் விஷயம் படு சூப்பர்...

ஹாலிவுட் பாலா said...

எல்லாமே.. அசத்தல் நியூஸ் சாரே..!! கலக்கல்..!!! ;-)))

பட்டாம்பூச்சி said...

கலக்கல் நியூஸ்..!!! :-)

பிரேம்ஜி said...

வாங்க ச்சின்னபையன்,பாலா

மிக்க நன்றி, மிக்க நன்றி.

வருகைக்கு மிக்க நன்றி பட்டாம்பூச்சி.