பிரமிக்க வைக்கும் நானோ உலகப்பயணம்

அறிவியலில் ஆர்வமிருப்பவர்கள் அவசியம் பார்வையிடவேண்டிய தளமிது.மனிதர்களால் வெறும் கண்களால் காணமுடியாத நுண்ணிய பொருட்களை உதாரணமாக ஒரு மனிதரின் கையின் மேல் அமர்ந்திருக்கும் கொசுவின் காலில் ஆரம்பித்து காட்சிகளை பெருக்கி வெறும் கண்களால் காணமுடியாத மனிதர்களின் இரத்தகுழாய்,செல்,நியுக்ளியஸ், க்ரோமோசோம்,டி என் ஏ,டி என் ஏ வை கட்டமைக்கும் அடினைன்,குவனைன்,
தையமின்,சைடோசின் என உள்ளே புகுந்து பின் அதனினும் சிறிய,அவைகளை பிரித்தால் வரும் கார்பன் அணு,கார்பன் அணுவின் 6 எலெக்ட்ரான்கள்,அந்த 6 எலெக்ட்ரான்கள் சுற்றிவரும் கார்பன் அணுக்கரு,ப்ரோட்டான்கள்,நியூட்ரான்கள் என இதுவரை அறிவியல் கடைசியாக அறிந்துள்ள குவார்க்குகள்(Quarks)வரை எவ்வாறு இருக்கும் என வரைகலை மூலம் விளக்கியுள்ளனர்.

அதே போல் கணினி உலகில் கீ போர்ட் மேல் ஆரம்பித்து மைக்ரோ சிப்,ட்ரான்சிஸ்டர்,செமி கண்டக்டர்,சிலிகான் வரை செல்கிறது.

கீழே உள்ள இந்த உரலை சொடுக்கி,உள்ளே நுழைந்து Check-In என்ற பெட்டியை சொடுக்கி நானோ உலகப்பயணத்தை தொடங்குங்கள்.

நானோ உலகப்பயணம்

(ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு.ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8 முதல் 10 அணுக்கள் வரை அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிமனுடையது.)

10 comments:

ஹாலிவுட் பாலா said...

//சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிமனுடையது//

என்னோட.. மூளையே... அந்த சைஸ்தாங்க..! :-)))


கலக்கல் பதிவு. புக்மார்க்கிட்டேன்! வாவ்..!!

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி.

ராஜ நடராஜன் said...

இப்பத்தானே தெரியுது கொசு நம்மளுக்கு ஊசி போட்டா ஏன் அவ்வளவு வலிக்குதுன்னு:)

பிரேம்ஜி said...

வாங்க பாலா,
என்ன இப்படி சொல்லிட்டீங்க, உங்க தொழில்நுட்பம் பதிவுகள்ள கலக்கிட்டிருக்கீங்க.

வருகைக்கு நன்றி, வடுவூர் குமார் அவர்களே,

வாங்க நடராஜன் சார்,
//இப்பத்தானே தெரியுது கொசு நம்மளுக்கு ஊசி போட்டா ஏன் அவ்வளவு வலிக்குதுன்னு:) //

ஹா ஹா ஹா .. வருகைக்கு நன்றி.

அக்னி பார்வை said...

நல்ல பதிவு.. தொடருங்கள்..

பிரேம்ஜி said...

Varuga Agni paarvai,

Ungal varugaikku mikka nandri.

(Mannikavum.tamizhil thattacha iyalavillai ippothu)

சுவனப்பிரியன் said...

நல்ல பதிவு..

பிரேம்ஜி said...

வருகைக்கு நன்றி சுவனப்பிரியன்.

PATHSPACE ARCHITECTS said...

கண்டிப்பாக பார்வையிட வேண்டிய தளம் ...நன்றி...

ராம்.R

PATHSPACE ARCHITECTS said...

கண்டிப்பாக பார்வையிட வேண்டிய தளம் ...நன்றி...தொடரட்டும் உங்களது சேவை...

ராம்.R