ஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும் நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல் திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல மாறுபாடுகளை அறிவதற்காகவும் ஒரு பலூனை சாதாரண காமெராவோடு வானில் அனுப்பி அசத்தலான புகைப்படங்கள் எடுத்து வர வைத்து சாதனை புரிந்துள்ளனர்.
இந்த சாதனைக்கு ஸ்பானிஷ் மாணவர்கள் உபயோகப்படுத்தியது 60 டாலர்கள் மதிப்புள்ள ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட லேடக்ஸ் பலூன்,80 டாலர்கள் மதிப்புள்ள ஒரு சாதாரண நிகான் கேமரா,ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்,ரிசீவர்,மற்றும் கூகிள் எர்த்.சென்ற பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி காலை 9.10 மணிக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தானாகவே படம் பிடிக்க கூடிய முறையில் அமைக்கப்பட்ட நிக்கான் கேமரா,ட்ரான்ஸ் மிட்டர் சாதனங்களை பாதுகாப்பாக வடிவமைத்து(ஏனெனில் வானில் மேலே செல்ல வெப்பநிலை அதீதமாக குறைந்து மைனஸ் 65 செல்சியஸ் வரை குறையக்கூடும்)ஒன்றரை கிலோ எடைகொண்ட அவர்களின் காலநிலை அளக்கும் சாதனத்தை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பொருத்தி வானில் அனுப்பினர்.
இந்த மாணவர் குழுவின் தலைவர் ஜெரார்ட்,"பலூனை வானில் அனுப்பிவிட்டு கூகிள் எர்த் மற்றும் ரிசீவரை கொண்டு நாங்கள் பலூனின் பாதையை நோட்டமிட ஆரம்பித்தோம். அதிகபட்சம் 10000 அடி முதல் 30000 அடிகள் வரை தான்,அதாவது சாதாரணமாக விமானங்கள் செல்லும் அதிகபட்ச உயரம்,அது செல்லும் என நினைத்தோம்" என்று கூறுகிறார்.
ஆனால் அந்த பலூன் அவற்றை கடந்தது 100000 அடிகள் மேலே சென்றது.கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் உயரம்.பின்னர் மெதுவாக ஹீலியம் வாயு பலூனில் குறையதொடங்கியதும் உயரமிழக்க தொடங்கி,பறக்க விடப்பட்ட இடத்திலிருந்து 10 கிலோமீட்டர்கள் தள்ளி பூமியில் விழுந்தது.
மிகுந்த வெப்பநிலை மாற்றங்களை கடந்திருந்தாலும் அவர்களின் காலநிலை பெட்டியின் ட்ரான்ஸ்மிட்டர்,கேமராவின் நினைவக அட்டை(Memory Card) செயல்பாட்டு நிலையிலேயே இருந்தன.பாடபுத்தகங்கள் சொல்லி கொடுக்காத பல விஷயங்களை இந்த முயற்சி தங்களுக்கு சொல்லி தந்ததாக கூறுகிறார்கள் இந்த மாணவர்கள்.பள்ளி மாணவர்களின் இந்த முயற்சி பல ஆராய்ச்சியாளர்களை கவர்ந்துள்ளது.ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்கள் முயற்சி மற்றும் அவர்களின் சாதனம் வானில் எடுத்த புகைப்படங்கள்.

அவர்களின் ப்ராஜக்டின் முழுமையான படங்களுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
http://www.flickr.com/photos/meteotek08/

20 comments:
Thanks for the Info. Nice one...
Its really useful information for upcoming talenters. Keep it up!!!
good mission
Aravind,
Thanks for your visit.
Thanks for the information
அந்த குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
முயலவில்லை என்றால் எதுவே தெரிந்துகொள்ள முடியாது.
super
Kannan,Anonymous,Muthubalakrishnan,
Thanks for your visit.
வருக வடுவூர் குமார்,ச்சின்னப்பையன்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,
படம் பார்த்து கதை சொல் பள்ளிப்பாடம் என்பது இதுதான் போல.
உங்கள் தகவல் அட்டகாசம் தொடரட்டும்:)
Innovative Idea.
Great Post..
thanks for sharing
பிரேம்ஜி சார் படங்கள் சூப்பர்
நல்ல ஆசான் நல்ல மாணவர்கள்.
ஆனா தமிழ்நாட்டில் பல வாத்தியார் என்றால் பள்ளி நேரத்தில் பிளாட் பிஸ்னஸ்,வட்டிக்கு பணம் கொடுத்தல்,புடவை வியபாரம்,தீபாவளி பட்டாசு பிஸ்னஸ், சில பேர் பெண் புரோக்கார கூட இருக்காங்க..
:-)))))))))))
இதுல விட்டு போன லிஸ்ட் இருந்த சொல்லுங்க..
நல்ல பகிர்வு நன்றி...
நம்ம ஊரிலும் இதுபொல் வருமா?
wow, nice post, thanks
pretty interesting..
என்னங்க இது..? இதெல்லாம் ஒரு படமா? கீழே கோலம் போடுற பெண்களை மாடியில் இருந்து, வெறும் செல்போன் கேமரால நம்ம பசங்க பிடிக்கிற போட்டோவை விடவா.. இந்த டெக்னாலஜி பெரிசு? :-) :-)
பசங்க கலக்கி இருக்காங்க...! :-)
பசங்க கலக்குறாங்க .. இவங்க கிட்ட என்னமோ இருந்து இருக்கு பாரேன் ;-)
பிரேம்ஜி கலக்கல் ..இவங்க இதை போல செய்வது இருக்கட்டும்..நீங்க எப்படி இது மாதிரி தகவல்களை பிடித்து தருக்கிறீர்கள் என்று எனக்கு அதை விட ஆச்சர்யம்.
படங்கள் அனைத்தும் கலக்கலா இருக்கு..
வாங்க நடராஜன் சார்,
வருகைக்கு மிக்க நன்றி.
Tamil Nenjam,
Thanks for your visit.
வாங்க புதுவை சிவா,
நான் இஸ்கூல்ல படிக்கும் போது எங்க வாத்தியார் வகுப்பறையில் கொண்டு வந்து எலுமிச்சம் பழம், நிலக்கடலை எல்லாம் கொண்டு வந்து எங்க கிட்டயே விப்பார்.தோட்டம் வெச்சிருந்தார் :-)))))
வாங்க ஞானசேகரன்,
நாம ஊர்ல வர இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும்.
Manippakkam,Sen,
Thanks for your visit.
வாங்க பாலா,
அந்த டெக்னாலஜில நம்ம பசங்களை அடிச்சிக்க முடியாது :-))))
வருகைக்கு நன்றி.
வாங்க கிரி,
இணையத்துல தேடி தேடி படிச்சிட்டு இருப்பேன் :-)) வருகைக்கு மிக்க நன்றி.
interesting thanks for sharing
Anonymous,
Thanks for your visit.
Post a Comment