
இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை இந்த பூமி நேரம் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது.உலகில் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் 28 ஆம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகள்,மின்சாதனங்களை நிறுத்தி பூமி நேர இயக்கத்தில் பங்கு கொள்ளலாம்.
உலகம் வெப்பமயமாதல்(Global Warming)குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் பூமி நேரம்(Earth Hour)எனப்படுகிறது.இதன் படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று இரவு ஒரு மணி நேரம் வீடுகள்,அலுவலகங்கள்,பொது இடங்கள், மற்றும் தொழிற்சாலைகளில் என அனைத்து இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டு மின்சார சாதனங்கள் நிறுத்தப்படுகின்றன.
உலக வெப்பமயமாதல் தற்போது உலகை அச்சுறுத்தும் முக்கிய காரணியாக இருக்கிறது. தொழிற்சாலைகள்,வாகனங்கள் வெளியிடும் புகை,அசுத்தங்களால் காற்று மண்டலத்தில் வெப்பநிலை அதிகரிக்கிறது.ஆகவே துருவங்களில் உள்ள பெரும் பனிப்பாறைகள் உருகுகின்றன.கடல் நீர் மட்டம் அதிகரிக்கிறது.
மின்சாரம் தயாரிக்க உலகம் முழுவதும் பெரும்பாலும் நிலக்கரி உபயோகிக்கப்படுகிறது.மின் நிலையங்களில் இதற்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி, மின் உற்பத்தி முடிந்தவுடன் கரியாக மாறி காற்று மண்டலத்தில் சேர்கிறது.உலக வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இது உள்ளது.
Al Gore எழுதிய "An Inconvenient Truth"(ஒரு சங்கடமான உண்மை)என்னும் புத்தகத்தில் உலக வெப்பமயமாதலுக்கு உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்கா மட்டும் 30 சதவிகிதம் காரணமாக இருப்பதை குறிப்பிடுகிறார். ஐரோப்பிய நாடுகள்,சீனா,ரஷ்யா,கனடா,ஆஸ்திரேலியா நாடுகளும் தன் பங்கிற்கு சுற்று சூழலை மாசுபடுத்துகின்றன.இந்தியாவிலும் ஒவ்வொரு நாளும் 25000 க்கு மேற்பட்ட கார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலைக்கு வருகின்றன.
2007 ஆண்டு சிட்னி நகரில் ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டபோது நகரின் 22 லட்சம் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 10 சதவிகிதம் மின் சக்தியை மிச்சப்படுத்தினர். ஊடகங்கள்,இணையம் மூலம் இந்த செய்திகளை இடம் பெற செய்து சென்ற 2008 ஆம் அண்டு 35 நாடுகளில் உள்ள 5 கோடி மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை இந்த பூமி நேரம் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது.உலகில் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் 28 ஆம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகள்,மின்சாதனங்களை நிறுத்தி பூமி நேர இயக்கத்தில் பங்கு கொள்ளலாம்.
இந்த ஆண்டு 84 நாடுகளில் உள்ள மக்கள் பூமி நேரத்தை பாவிக்க உள்ளார்கள்.இம்முறை 100கோடி மக்களை பங்கெடுக்க செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.இந்த ஆண்டு இது போல் பூமி நேரம் பாவிப்பது பூமிக்கும்,உலக வெப்பமயமாதலுக்கும் இடையேயான போட்டியாக கருதப்பட்டு நீங்கள் விளக்குகளை அணைத்தால் பூமிக்கு வாக்களிப்பது போலவும்,அணைக்காவிட்டால் உலக வெப்பமயமாதலுக்கு வாக்களிப்பது போலவும் ஒரு கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுக்கு பின்னர் இந்த விழிப்புணர்வை பற்றிய விவரங்களை கோபென்ஹேகனில் நடைபெறும் உலக காலநிலை மாற்ற மாநாட்டில்(Global Climate Change Conference)சமர்ப்பிக்கவுள்ளனர்.
மின் சக்தி தேவை குறையும் போது மின் நிலையங்களில் நிலக்கரி உபயோகமும் குறைகிறது.உலகம் முழுவதும் இம்முறை மக்கள் பங்கு பெற்றால் அதிக அளவு மிச்சப்படுத்தலாம்.இது ஒரு சிறிய முயற்சியே.இதன் பின்னால் மறைமுக நன்மைகள் அதிகமே.
சென்ற வருடம் கூகிள் வலைத்தளம் கூட அன்று ஒரு நாள் தன் முகப்பு பக்கத்தை கருப்பு நிறத்தில் இருண்டதாக அமைத்திருந்தது.
(கூகிள் இது போன்று உலக நிகழ்வுகளை சுவாரஸ்யமாக தன் தளத்தில் காண்பிப்பதை கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.
கூகிள் லோகோக்கள்-சில சுவாரஸ்யமான தகவல்கள் )
நகரமயமாக்கல் மற்றும் பரபரப்பான வாழ்க்கையில் இயந்திரம் போல இயங்கி கொண்டிருக்கிறோம்.இந்த ஒரு மணி நேரம் விளக்குகள்,தொலைக்காட்சி இன்ன பிற சாதனங்களை அணைத்து விட்டு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழலாம்.பல வாரங்களாக அதீத வேலைப்பளு காரணமாக சோர்வடைந்துள்ள நான் இந்த பூமி நேரத்தின் போது தங்கமணியுடன் காலாற சிறிது தூரம் நடந்து சென்று வரலாம் என எண்ணியுள்ளேன்.
பூமி நேர நிகழ்வின் அதிகார பூர்வ இணைய தளம் இது.
www.earthhour.org
பூமி நேரம் பற்றிய வீடியோ
பூமிக்கு வாக்களித்து பூமி நேரத்தை பாவியுங்கள்
Labels: Earth Hour, உலகம் வெப்பமயமாதல், நிகழ்வுகள், பூமி நேரம்
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
இது என்னங்க 'பூமி நேரத்தைப் பாவியுங்கள்'?
பாவிப்பது= பயன்படுத்துவது
என்ற பொருளில்தானே பொதுவாப் பாவிக்கிறோம்!!!
அது இருக்கட்டும் இதைப் பத்தி ஒரு பதிவு போன வருசம் எழுதுனது இருக்கு.
இங்கே பாருங்க.
அந்த ஒரு மணி நேரம், டிவி ப்ரொக்ராமெல்லாம் போய்டுமே! :-(
அது இல்லாம... லைட்டை ஆஃப் பண்ணி, நெருப்பு பந்தத்தையோ, மெழுகுவர்த்தியையோ பத்த வச்சா, அதுல இருந்து வெப்பமும், புகையும் வந்து க்ளோபை வார்ம் பண்ணாதா? :)
நம்ம ஊட்டுக்கு லைட்டே ‘மானிட்டர்’ மட்டும்தாங்க! :-)
Thanks dear buddy..
Great news
நான் என் கடமையை செய்து விட்டேன்..அதாங்க விளக்கை அணைத்து விட்டேன்
Post a Comment