தகவல் களஞ்சியமான விக்கிபீடியா(Wikipedia)ஆங்கிலத்தில் மட்டும் மூன்று கோடி தகவல் பக்கங்களை கொண்டுள்ளது.அதிலிருந்து நமக்கு வேண்டிய தகவல் பக்கங்களை தொகுத்து மென்புத்தகமாக PDF வடிவில் தரவிறக்கிக் கொண்டால் இணையதொடர்பு இல்லாமல் படித்து கொள்ளலாம்.அச்சடித்து கொள்ளலாம்.ஒரு உதாரணத்திற்கு நாம் தமிழ்நாடு மற்றும் தமிழ் உணவு வகைகளை பற்றிய பக்கங்களை PDF வடிவில் தரவிறக்குவோம்.
முதலில் விக்கிபீடியாவில் ஒரு பயனர் கணக்கை(Account)உருவாக்க வேண்டும்.
பின் உள்நுழைந்து நமக்கு வேண்டிய பக்கத்தை தேடி,இடது பக்கத்தில் உள்ள Create Book என்னும் பகுதியில் "Add Wiki Page" ஐ சொடுக்கி நாம் தேடிய பக்கத்தை சேமிக்கலாம்.இது போல் நமக்கு தேவையான பக்கங்களை மேலும் சேர்த்துக்கொள்ளலாம்.

பின்னர்,"Show Book" ஐ சொடுக்கி நாம் சேர்த்த பக்கங்களுக்கு உரிய தலைப்பை கொடுத்து PDF வடிவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.PDF வடிவில் மாற்றும் போது விக்கிபீடியாவே பக்கங்களை,படங்களை தகுந்த முறையில் நேர்படுத்தி தருகிறது.
விக்கிபீடியாவிலிருந்து மென்புத்தகம்(PDF) தயாரிப்பது எப்படி?
Labels: இணையம், தொழில்நுட்பம், நிகழ்வுகள், விக்கிபீடியா
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
பகிர்ந்தமைக்கு நன்றி பிரேம்ஜி.
ஓஓஒ.... நல்ல தகவல்....
http://aammaappa.blogspot.com/2009/03/blog-post_12.html முடிந்தால் இவற்றையும் பாருங்கோ பிரேம்ஜி
அட.. அப்படியா.. எனக்கு அக்கவுண்ட் இல்லை.
இன்னைக்கு செக் பண்ணிடுறேன். தகவலுக்கு நன்றி.. ப்ரேம்.
அர்விந்த்,ஞானசேகரன்,ஹாலிவுட் பாலா.
வருகைக்கு மிக்க நன்றி.
Thanks you prem
Gowdhaman,
Thanks for you visit.
Post a Comment