வழக்கமான டியுப் டிவிக்களில் படத்தை காட்ட 4:3 Aspect Ratio பயன்படுத்தப்படுகிறது.அதாவது படத்தின் அளவு நான்கிற்கு மூன்று விகிதத்தில்.தற்போது புழக்கத்தில் வந்துகொண்டிருக்கும் வைட் ஸ்க்ரீன்(Wide Screen)LCD டிவிக்களில் படத்தின் அளவு 16:9 Aspect Ratio வில் பயன்படுத்தபடுகிறது.நல்ல அகலமாக படங்களை காண்பிக்கவே இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதிலும் ஒரு அசௌகரியம்.இம்மாதிரி 16:9 அளவில் காண்பிக்கப்படுபோது டிவி திரையில் படத்திற்கு மேல் பகுதியிலும்,கீழ் பகுதியிலும் கருமையான பகுதி காணப்படும்.இந்த சிக்கலை தீர்த்து பிலிப்ஸ் நிறுவனம் 21:9 Ratio வில் படங்களை காண்பிக்கும் டிவியை உருவாக்கியுள்ளது.திரையரங்கில் காண்பிக்கப்படும் அதே அளவில்(Ratio வில்) ஒரு முழுமையான திரையரங்கு அனுபவத்தை தருகிறது பிலிப்சின் "சினிமா 21:9 டிவி". இந்த டிவி வேலை செய்யும் விதத்தை கீழ்காணும் படம் விவரிக்கிறது.
இந்த டிவி விளம்பரத்திற்கு,பிலிப்ஸ் நிறுவனத்திற்காக ஆடம் பெர்க்(Adam Berg)இயக்கியுள்ள குறும்படம் பிலிப்ஸ் கரோசெல்(Philips Carousel).2 நிமிடங்கள் 19 வினாடிகள் ஓடும் இந்த குறும்படம் முழுவதும் ஒரு தொடர்ச்சியான ட்ராக்கிங் ஷாட் மூலம் Freeze Frame எபெக்டில் மிக அபாரமாக எடுக்கப்பட்டுள்ளது.வங்கியில் கொள்ளையர்களை எதிர்கொள்ளும் காவலர்கள். இது தான் கான்செப்ட்.எப்படி எடுத்துள்ளார்கள் என பாருங்கள்.
இந்த தளத்தில் http://www.cinema.philips.com/?ls=gb_en இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்ற விவரங்களுடன் குறும்படம் காட்டியுள்ளார்கள்.
Philips Carousel அபாரமான குறும்படமும்,உலகின் முதல் சினிமா திரை டிவியும்
Labels: குறும்படம், சினிமா, டிவி, தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)

11 comments:
அருமையான.. படம் பிரேம்..! :)
அந்த BGM ரொம்ப... பழக்கமான ஒன்னு..! எங்கயாவது கேட்ட மாதிரி நினைவு வருதா?
=======
16:9 டிவிகள் எல்லாம் அமெரிக்க விஞ்ஞானிகளின் ‘ஜோக்’. 4:3-க்கும் சினிமா ஸ்க்ரீனிற்கும் இடையில் ஒரு ஃபார்மேட் வேணும்னு... உருவாக்கின நம்பர் அது.
திரைப்பட கேமராமேன்கள் கடுமையா எதிர்த்தும்... கேட்காம... இவங்க உருவாக்கின பிரச்சனை.
எப்ப அந்த ப்ளேக் பார் வந்தாலும் கடுப்பா இருக்கும்.
ஆனா.. எல்லா படங்களும் 21:9-ல வர்றது இல்லையே?! :)
வீடியோ கலக்கல் ..ஆரம்பித்த இடத்திலேயே முடிவும்
வருகைக்கும்,கருத்தான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி பாலா
பானாசோனிக் ஜப்பான் பழசாயிடுச்சு.இருந்தாலும் அருமையான பெட்டி.21:9 க்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கு.வெயிட்டிங்.
gud post with wide screen. great idea.
நல்ல தகவல்.
ஆனால் HD broadcast ல் வரும் டீவீ நிகழ்ச்சிகளை இதில் பார்க்கும்போது பக்கவாட்டிலல்லவா கருப்பு வர்ணம் வரும். அதை பார்க்கவே சகிக்கமுடியாமலிருக்குமே??
இதைவிட HD TV 16:9 ல் படம் பார்க்ககையில் மேலே கீழே கருமையான பகுதி வந்தால் பரவாயில்லை என நினைக்கிறேன்.
ஆனா இந்த புதிய டிவி திரைப்படப்பிரியர்களுக்கு நல்ல விருந்தாக அமையலாம்.
எனக்கு சாதாரண டீவியில் இந்த பிளாக் பார் வந்தாதான் படம் பார்த்த மாதிரி இருக்கும். அப்படியில்லாவிட்டால் படிப்பதில்லை
ஹிஹி
//ஆனால் HD broadcast ல் வரும் டீவீ நிகழ்ச்சிகளை இதில் பார்க்கும்போது பக்கவாட்டிலல்லவா கருப்பு வர்ணம் வரும். அதை பார்க்கவே சகிக்கமுடியாமலிருக்குமே??//
இல்லை சுபாஷ்..! படத்தில் இரண்டாவது லைனை பாருங்க. 16:9-ஐ 21:9-ஆ மாத்திடும்னு காட்டியிருக்காங்க.
ரேசியோ என்பது ‘ஹைட்’டை பொருத்தே. 16:9 21:9-ஆ மாறும்போது... கொஞ்சம் ஹைட்டில் ‘corp' பண்ண வேண்டியிருக்கும் அல்லது வைடில் படம் Stretch ஆகும். (படத்தில் காட்டியிருப்பது CORP-தான்).
ஆனா.. கருப்பு பார் பக்கவாட்டில் 4:3 ரெகுலர் ப்ராட்கேஸ்ட்டில் வரும்.
இப்பவும் 16:9-லயும்தான் வந்துகிட்டு இருக்கு.!! :) :)
என்ன பண்ண..! :)
ஏற்கனவே.. இதுமாதிரி ப்ரொஜட்க்டர்ஸ் வந்திருக்கு!!
அருமையான குறும்படம்.. பிரேம்ஜி. அளித்தமைக்கும் மிக்க நன்றி..
வாங்க கிரி வருகைக்கு நன்றி.
நடராஜன் சார், நம்ம வீட்டிலும் பான சோனிக் தான்.
Tamil Nenjam,Thanks for your visit.
வாங்க சுபாஷ்.உங்க வருகைக்கும்,கேள்விகளுக்கும் மிக்க நன்றி ஹாலிவுட் பாலா ஒரு விளக்கம் குடுத்திருக்கார் மிக்க நன்றி பாலா.
உங்க வருகைக்கு மிக்க நன்றி கேபிள் சங்கர்.
பதிலிற்கு மிக்க நன்றிகள் பாலாண்ணா.
Post a Comment