வேகமாக ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் ஒன்று தட்டச்சும் போது திடீரென ஏதேனும் ஒரு விஷயத்தை தேடவேண்டுமென்றால் அந்த உலாவியின் விண்டோவை விட்டு வெளியே வந்து புதியதாக உலாவியின் விண்டோ திறந்து google.com சென்று குறிச்சொல் கொடுத்து வரும் பதிலை அலசி தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக,தற்போது கூகிளே ஜிமெயிலின் உள்ளே கூகிள் தேடலுக்கான இணைப்பை கொடுக்கிறது.ஜிமெயிலின் நுழைந்து மேலே settings அருகே உள்ள பச்சை நிற ஆய்வு குடுவையை சொடுக்கவும்.தற்போது gmail labs உள்ளே வந்து விட்டீர்கள்.அங்கே 35வது பகுதியில் தற்போது இருக்கும் Google Search சிறப்பம்சத்தை Enable செய்யவும்.
பின்னர் அந்த பக்கத்தின் கீழே உள்ள "Save Changes" சொடுக்கி மாற்றத்தை சேமிக்கவும்.அவ்வளவே.இனி ஜிமெயில் பக்கத்தின் இடது புறம் கூகிள் இணைய தேடலுக்கான உள்ளிடும் பெட்டி காணப்படும்.ஜிமெயிலின் உள்ளே கூகிள் தேடலை உபயோகிக்கலாம்.
தேடி தேர்ந்தெடுத்த உரல்களை ஒரே சொடுக்கில் மின்னஞ்சலில் சேர்த்து அனுப்பலாம்.ஜிமெயிலின் உள்ளே கூகிள் சாட் வசதியும் உள்ளதால் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது தேவையான விஷயங்களை ஜிமெயிலின் உள்ளேயே தேடி அனுப்பலாம்.இது போல ஜிமெயில் labs சிறப்பம்சங்கள் நிறைய உள்ளன.வேண்டியவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
ஜிமெயிலின் உள்ளேயே கூகிள் தேடல்
Labels: இணைய தேடல், கூகிள், ஜிமெயில்
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
ஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html
Thanks buddy
appavi thamilan,
Nandri.nichyam padithu parkiren.tamingilathirku mannikavum.
sharepoint the great,
Thanks for your continuous encourage.
புதுசு புதுசா ஏதாவது பண்ணிட்டே இருக்கானுக.. இந்த கூகிள் காரனுக
Post a Comment