இதோ வருகிறது..அதோ வருகிறது என சொல்லி முதலில் குமோ(Kumo)என பெயர் வைத்து பின்னர் முடிவாக பிங்(Bing)என்ற பெயருடன் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது மைக்ரோசாப்ட்டின் புதிய தேடுபொறி.
முகப்பு பக்கத்தில் துருக்கி நாட்டிலுள்ள கப்படோசி(Cappadocia)என்னும் இடத்தில் பழங்கால நாகரிகம் அமைந்திருந்த பள்ளத்தாக்கில் பலூன்கள் பறப்பது போன்ற பின்புலத்துடன் வந்துள்ளது பிங்.
கூகிள் தேடு பொறிக்கு சரியான சவாலாக இருக்கும் என பரவலான பேச்சுக்களுடன் வந்திருக்கும் பிங், கூகிள் ஐ போன்றே அதிக பட்ச தெரிவுகளை தர இன்னும் சிறிது காலம் பிடிக்கும் போல தெரிகிறது.கூகிளை விட சற்றே இலகுவாக தேட சில வசதிகள் உதாரணத்திற்கு குறிச்சொல் சம்பந்தப்பட்ட வேறு பல உரல்களையும் இடது பக்கத்தில் காட்டுகிறது.மற்றபடி கூகிளில் உள்ள வசதிகளே பெரும்பாலும் இதிலும் உள்ளன. தேடிப்பாருங்கள் பிங்கில்.
www.bing.com
மைக்ரோசாப்ட்டின் பிங் தேடுபொறி செயல்படத்தொடங்கியது
Labels: இணையம், கூகிள், தேடுபொறி, தொழில்நுட்பம், பிங்
Subscribe to:
Post Comments (Atom)

6 comments:
thanks buddy.
Tamil Nenjam,
Thanks for your visit.
தகவலுக்கு நன்றி பிரேம்ஜி :)
நல்லா தான் தேடுது பார்ப்போம்
வருகைக்கு மிக்க நன்றி சென்ஷி,கிரி.
//முகப்பு பக்கத்தில் துருக்கி நாட்டிலுள்ள கப்படோசி(Cappadocia)என்னும் இடத்தில் பழங்கால நாகரிகம் அமைந்திருந்த பள்ளத்தாக்கில் பலூன்கள் பறப்பது போன்ற பின்புலத்துடன் வந்துள்ளது பிங்.//
ஒவ்வொரு நாளும் பின்புலப் படம் மாறுவது போல அமைத்துள்ளார்கள். நேற்றைய அதற்கு முந்தைய படங்களையும் பார்க்க வசதி செய்துள்ளனர்.
Post a Comment